நேற்றையப் பதிவில் நண்பர் முருகேசன் குழந்தைகளுக்கான தடுப்பூசி வகைகள் அது போட வேண்டிய காலம் பற்றி எழுதச் சொல்லியிருந்தார்கள். போன பதிவில் அதைப் பற்றி எழுத நினைத்தாலும் அது நீண்டு தனிப் பதிவாக வரும் என்றும் அதை விட்டு விட்டேன். இருந்தாலும் நண்பரின் ஆசைக் கிணங்க சில கருத்துகள். உங்களுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என உங்கள் கையில் குழந்தையைத் தந்த உடனேயே இன்னொரு அட்டவணையையும் தருவார்கள். அது தடுப்பூசி அட்டவணை. சில மகப்பேறு மருத்துவமனைகளில் அந்த அட்டவணையைத் தருவதுடன் அங்கேயே நீங்கள் ஊசி போட்டுக்கொள்ளலாம் எனச் சொல்வார்கள். சில மகப்பேறு மருத்துவர்கள் குழந்தை மருத்துவரிடம் காண்பித்து போட்டுக்கொள்ளூங்கள் என்று சொல்வார்கள். தடுப்பூசிகளைப் பொறுத்தவரை நீங்கள் கண்டிப்பாக போட வேண்டும். அரசாங்க சார்பில் ஒரு அட்டவணையையும், பிரைவேட் குழந்தை மருத்துவர்கள் சார்பில் ஒரு அட்டவணையையும் வைத்திருக்கிறார்கள். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் கண்டிப்பாகப் போட வேண்டிய ஊசிகள் அரசு சார்பாகக் கொடுக்கப்பட்டிருக்கும் நிரலில் இருக்கும். தனியார் குழந்தை மருத்துவ மையம் சார்பில் தந்திருக்கும் கொடுக்கப்பட்டிருக்கு...