நாம் ஒரு மருத்துவமனையை எப்படித் தேர்ந்தெடுப்பதுஎன்பது தான் கேள்வி. அதற்கு முன் ஒரு மருத்துவமனையை நாம் எப்படி நிராகரிக்கிறோம் எனத் தெரிந்து கொள்ளலாம். அ) அவைங்க நிறைய காசு புடுங்குவாய்ங்க...( இது நாமாகவே நேரடியாகவோ, நண்பர் உறவினர் மூலம் கேட்டோ தெரிஞ்ச விசயம்) ஆ) அந்த ஆஸ்பத்திரி போனா ரொம்ப லேட் ஆகும்... இ) அந்த ஆஸ்பத்திரி போனா டெட் பாடி தான் வெளிய வரும். இதுலாம் ஒரு காரணம். நாம் ஏன் ஒரு மருத்துவமனையை நிராகரிக்கிறோம் என்பதற்கு. தேர்ந்தெடுக்க என்ன காரணம் தெரியுமா.. அ) நம்பிக்கை ஆ) ஏக்கம். இது மட்டும் தான். எப்படியும் காப்பாத்திருவாங்க என்ற நம்பிக்கையும், எப்படியாவது காப்பாத்திரமாட்டாங்களா என்ற ஏக்கமும் தான். ஆக, ஒரு மருத்துவமனையைத் தேர்ந்தெடுக்க நமக்கு கொஞ்சம் பொறுமையும் ஒரு விழிப்புணர்வும் தேவை. ஒரு மருத்துவமனையைத் தேர்ந்தெடுக்க நாம் செய்ய வேண்டியவை. முதலில் நமக்கு என்ன நோய் என்பதைப் பற்றி ஆராய வேண்டும். உதாரணத்திற்கு, உங்களுக்கு சர்க்கரை நோய். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் ஊரில் சர்க்கைரை நோய்க்கு மருத்துவம் செய்யும் மருத்துவர் யார் சிறந்தவர் என்பதைத...