பழனிக்குமார் பக்கங்கள் அரங்கேற்றம் ஆரம்பம்
மனக்குதிரை
மாதத்தின் முதல் நாள் பிறந்தாகிவிட்டது. சென்ற மாதத்தின் சேல்ஸ் க்ளோஸ் முடிந்தபாடில்லை. ஆகஸ்ட் 30ம் தேதி சனிக்கிழமை 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகிவிட்டது. ஆதலால் 1ம் தேதி திங்கள்கிழமை காலையிலிருந்து பரபரப்பு. இன்று சேல்ஸ் க்ளோஸ் பண்ணியாகவேண்டும். ஆனால் ஆர்டர் கொடுக்கவில்லை. இப்படித்தான் விடிந்தது. ஏறத்தாழ காலை 6 மணி. எவ்வளவு வேலைகள் யார் யாருக்குப் பேச வேண்டும். என்ன என்ன பேச வேண்டும். செப்டம்பர் பிறந்தும் ஆகஸ்ட் மாத சேல்ஸா....முடித்தாக வேண்டும். உடன்வேலை பார்க்கும் சகப்பணியாளர் 5 பேருக்கும் அழைக்க வேண்டும். ஆர்டரை 3 மணிக்குள் அலுவலகத்திற்குள் கொடுக்க வேண்டும். அவற்றையெல்லாம் 6 மணிக்குள் பில் அடித்துவிட்டு சாயங்காலம் பணிக்குத் திரும்ப வேண்டும். மணி காலை 6.30. யாரும் எழுந்திருப்பார்களா... இப்பொழுதே பேசிவிடலாமா... காலையிலேயே மேனேஜர் கூப்பிட்டுவிட்டார் என அலுத்துவிடுவார்கள் தானே....வேண்டாம்...கொஞ்சம் பொறுத்திருந்து அழைப்போம்....என மனக்குதிரை பொறுத்திருந்தது. மணி காலை 7.20 கைகள் துறுதுறுவென இருந்தன. அழைக்க ஆரம்பித்தேன். எப்பொழுது ஆர்டர் கொடுப்ப? எப்ப ஆபிஸுக்கு...
கருத்துகள்
கருத்துரையிடுக