இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குறியீடுகளின் புறா

பழனிக்குமார் குறியீடுகளின் புறா 1. இந்த  மழைக்காலத்தில் சில புறாக்கள் வந்தமர்கின்றன. தண்ணீர்தொட்டியின் உயரத்திலிருந்து பெருஞ்சத்தத்துடன் பறந்தும்விடுகின்றன. வெகு சில தான்  எதையாவது  விட்டுச்செல்கின்றன. புறாக்களைப் போல பல எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விடுகின்றன. 2. வெறுமனே சாளரத்திட்டுகளைத் தான் செய்கிறோம். புறாக்கள் தான் மாடங்களாய்ச் செதுக்குகின்றன.. 3. நண்பகலுக்குப்  பிந்தைய பகல் நேரத்தில் சாம்பல் நிறப் புறா ஒன்று சாளரத்திட்டில் அமர்ந்திருந்தது. திடீரென ஆரம்பித்த பெருமழைக்குப் பின் ஒதுங்குவதற்கேதுவாய் இடம் தேடி பறந்துவிட்டது.  பெருமழையென்று அழைப்பதில் என்ன பெருமை வந்துவிடப்போகிறது? 4. எங்கோ பெய்த மழையை ஒட்டிக்கொண்டு வந்து சிறகுலர்த்தும் புறாக்களின் மாடங்களில் மா மழை.... 5. சில ஆசுவாசங்களுக்குப் பின் கலைந்து போன ஞாபகங்களின் திண்ணைகளில் சில இறகுகளும் தானியக் குதிர்களும் நிரப்புகின்றன தவறவிட்ட குறியீடுகளின் புறா இருப்பை.... 11/01/2021 23.25