இடுகைகள்

அக்டோபர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஹேப்பி தீவாளி.....

தீபாவளினு ஒண்ணு வந்தாலே எனக்குப் பல ஃப்ளாஷ்பேக் போயிருது. சின்னப்பிள்ளைல தீபாவளினா புது ட்ரஸ், வெடி , ஸ்வீட். கீழ் வீட்டு ரஞ்சிதம் அத்தை சுட்டுத் தர்ற அப்பம். இதான் தீபாவளி. அப்ப மதுரைல மேலப்பொன்னகரம் எட்டாவது தெருல இருந்தோம். அங்க இருந்து க்ராஸ் ரோட்டுப்பக்கம் எங்கேயோ நடந்து ஒரு கல்லு சந்துக்குள்ள குடும்பத்தோட போவோம். அங்க தான் இருக்கும் வெங்கட் ராமன் கடை. அந்தக் கடை பேரு வெங்கட் ராமனா இல்ல ஓனர் பேரு வெங்கட் ராமனா னு தெரியாது. அது ஒரு பத்துக்கு பத்து இருக்குற ஒரு சின்ன ரூம் கடை. கீழ தரைல பாய் விரிச்சிருப்பானுக. கொஞ்சம் கொஞ்சம் ஞாபகம் வச்சுப் பார்த்தா அந்தக் கிழிஞச பாய்லாம் வருஷா வருஷம் நாங்க எடுக்குற துணில நல்ல பாய விரிச்சுட்டானுக. துணியா எடுத்து வெளிய தைக்க கொடுப்போம். சட்டை டவுசர் தான்.  எனக்குத் தெரிஞ்சு  அஞ்சாவது படிக்குறப்ப கூட படிச்ச பாலசுப்பிரமணியன் என்றவன் வெங்கட் ராமன் கடைலயா எடுக்குற...பாத்து டவுசர் கிழிஞிசுருமேடா.....கால தூக்கிறாத னான். முடிஞ்சது கதை. சைக்கிள்ல டக் அடிச்சு உக்காந்ததுமே டக்குனு குனிஞ்சு பாத்துக்குவேன். அந்த தீபாவளிக்கு வெங்கட் ராமன் கடைனா

செஞ்சுரியன்

அவர் பேரு செஞ்சுரியன். நான் நடக்குற ஏரியாலத்தான் நடக்குறாரு. வயது ஒரு நாற்பத்தைந்துக்கு மேல இருக்கும். கொஞ்சம் குட்டை. கொஞ்சம் பருமன். கொஞ்சம் நரை. நிறைய கஞ்சம். ஏதாவது மீட்டிங்க்னா வந்து பேசுறவன் யாருனு பாக்ககூட மாட்டாரு. கிளப்புல ஏதாவது வேலைனா வந்து கலந்துக்கவும் மாட்டாரு. மீட்டிங்க் முடிஞ்சு சாப்பாடுனா வந்து நிப்பாப்புல... பஃபே சிஸ்டத்துல ஒருத்தன் எத்தனை பந்திக்கு சாப்பாடுறானு கண்டுபிடிக்க முடியாதுன்ற சட்டத்து ஓட்டைய செஞ்சுரியன் நல்லா பயன்படுத்திக்குவாரு. ஆமா நான் ஏன் செஞ்சுரியனு பேர் வச்சிருக்கேன்னு தெரியுமா. அதை கடைசியா சொல்றேன். இப்ப சொல்ற கதைய எடிட்டிங்க் மனசுல பண்ணி வேகம் வேகமா காட்சிகளை நகர்த்திப் பாக்கனும். ஃப்ளாஷ்பேக் ஒன்று. (ஆறு மாதத்துக்கு முன்னால்) நானும் இன்னொரு நண்பரும் நடக்குறோம். செஞ்சுரியன் வந்தாப்புடி. எவ்வளவு நடந்தாலும் பிரச்சினை போகமாட்டிங்குதே... என்ன சார் உங்க பிரச்சினை. ..இது நாங்க. மூலம் மலச்சிக்கல், செரிமானப் பிரச்சினை...இப்படி செஞ்சுரியன் அடுக்குனாரு. நல்லா நடங்க சார் ..இது என் நண்பர். மூச்சு வாங்குதே...இது செஞ்சுரியன்.. யோகா பண்ண