இடுகைகள்

மார்ச், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முதல் பிறழ்வு

முதல் பிறழ்வு முதல் பிறழ்வுனு தலைப்பைப் பார்த்ததும் பிறழ்வு பொறழ்வுனு கவிதை கிவிதை எழுதிருவேனு வயசானவங்கலாம் நெஞ்ச பிடிச்சிர வேணாம். அதுலாம் பண்ண மாட்டேன். பயப்படாம படிக்கனும். அப்புறம் ஏன் பிறழ்வுனு தலைப்புனா அப்படித்தான்....ஒரு அந்தி வேளை நேரம், ஆகச்சிறந்த தருணம், மழைமுடிந்த இரவு, பிரயத்னம், இப்படிலாம் வார்த்தைகள போட்டாத்தான் நமக்கு இலக்கியவாதினு மார்க் போடுறானுக சீனியர் இலக்கியவாதிக... சரி விடுங்க...விசயத்துக்கு வாங்க மக்களே..  சமயத்துல முதன்முதலா ஏதாவது ஏடாகூடமா பண்ணி அது சொதப்பிருக்கும். உடனே இப்படித்தான் அந்த காலத்துல னு சீரியஸா கதை சொல்லாதீங்க..நான் சொல்லப்போறதுலாம் வெட்டிக்கதை தான். முதல் தடவையா பண்ண மிஸ்டேக் பற்றிய வெட்டிக்கதை.( யாருய்யா அது கல்யாணம் அந்த லிஸ்ட்ல வருமானு மனசுக்குள கேக்குறது....) மெடிக்கல் ரெப் ஆகி நான் பஜாஜ் எம்80 வண்டி வச்சிருந்தேன். மதுரைல இருந்து வெளியூருக்கு வண்டில போறதா இருந்தா நானும் என் நண்பனும் சேர்ந்து போவோம். அவன் புதுசா வண்டி வாங்குனான். அதுவும் பைக்.ஸ்பெலணடர் ப்ளஸ் பைக்.  புது பைக் ல திருப்பாசேத்தி ஒரு நாற்பது கி.மீ இருக்கும். போக்லாம்

நெடுவாசல்

வான்வெளியில் வலம் வரலாம் காற்றலைகளுடன் பேசி சிலாகிக்கலாம்... எதிர் குரல் அற்ற மோன நிலையின் அபத்தங்கள் அங்குதான்... பெயர் பொறித்த ஆடையுடன் ஜொலிக்கலாம்.. வண்ண வண்ண விளம்பரங்களில் மிடுக்கலாம்.. எதார்த்தங்கள் தெரியாத மயக்கங்கள் அங்குதான்.. தேவையற்றச் சிலைகளின் காடழுகும் சிலாகிப்புகளை மண்டியிட்டு பிரகடனப்படுத்தலாம்... எங்களின் உடனடித்தேவைகளில் பசி மட்டுந்தான் ஆண்டவரே... பிரார்த்தனைகளில்லை... இதோ... முதுகில் குத்தப்பட்டத் தடங்களோடு மார்பு காட்டி உங்கள் வாசல் கிடக்கிறோம்... வழக்கம்போல் ஒரு நச்சு உங்கள் வசம் இருக்கலாம்... கலைத்து விடவும் அழித்து விடவுமென கடவுச்சொற்கள் உங்கள் வசம் இருக்கலாம்.. அழிந்துபோன நாகரிகத்தின் பெயரால் நாங்கள் அழைக்கப்படும் ஒரு நாளில் பேயெனத்தெரியாமல் மான் கள் உங்கள் காவடி ஏந்தியிருக்கும்..
ஒரு ரோஜாப் பூ போதுமானதாயிருந்தது... ஜெமினி கணேசன் களுக்கு... ஒரு வாழ்த்து அட்டை  போதுமானதாயிருந்தது கமல்ஹாசன் களுக்கு... ஒரு தாஜ்மகாலும் கவிதையும் போதுமானதாயிருந்தது அஜித்களுக்கு.. இப்படித்தானே  ஊடல் தருணங்களின் தடங்கள்  சமரசமாயின... சினிமாத்தனமில்லாத ஓரன்பு இருக்கிறது.. குறுந்தொகை காலத்துத் தலைவியின் ஊடல் பாடும் பசலையின் தலைவனாய்.... வானவில் ரசித்ததை நெடுஞ்சாலை ரயில் பார்த்ததை அடிபட்ட கைவிரல் போலிஸ்காரரின் தடம் சொன்னதை பிடித்தப் பாடலை வக்களித்துச் சிரித்ததை ஏதேனுமொன்றை ஞாபகப்படுத்த ஒரு வடையும் காப்பியும் பருகலாம் தானே....

விளையாடற்காலம் - விமர்சனம்.

கவிஞர் ஆத்மார்த்தி எழுதிய கவிதைத் தொகுப்பு "விளையாடற்காலம்" என்ற புத்தகத்தை முன் வைத்து... தோழர் ராமதாஸ் சென்றாயன் ஏற்பாடு செய்த விடுதலை இலக்கிய பேரவையின் முதற் கூட்டத்தில் "விளையாடற்காலம்" தொகுப்பைப் பற்றி வழங்கிய விமர்சனமும் அது சார் எழுதிய முழு வடிவமும். பொதுவாகக் கவிதை என்பது உளவியல் ரீதியாக எழும்பப்படும் அல்லது எழுப்பப்படும் ஓர் உணர்வு அதிர்வலை.  மிகச் சுருக்கமாக என் பாணியில் சொல்வது என்றால் ஒரு குழந்தையிடம் தூக்கிப் போடப்படும் ஒரு பந்தைப் போன்றது. ஒரு கவிதையின் நல்ல வாசகனுக்கு அந்தக் குழந்தை ஓர் உருவகம் என்பேன். குழந்தையிடம் விழும் அந்தப் பந்தை அந்தக் குழந்தை எடுத்துச் சிலாகிக்கும். சில குழந்தைகள் அந்தப் பந்தை எடுத்து கைகளால் உருட்டி விளையாடும். சில குழந்தைகள் அந்தப் பந்தை திரும்பி நம்மிடம் எடுத்து எறியும். சில குழந்தைகள் எப்போதோ எறியப்பட்ட அந்த பந்தை நினைவில் வைத்துக்கொண்டு கையில் கிடைக்கும் பாத்திரங்கள் காகிதத் துண்டுகள் அலைபேசிகள் பொம்மைகள் என எல்லாவற்றையும் பந்தாக நினைத்துக்கொண்டு தூக்கி எறிந்து விளையாடும். அது போல் தான் ஒரு கவிதையின் வாசகனும். ஒ