இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

லைஃப் இஸ் கோயிங்க் ஆன்...

ப்ரவீனுக்கு பர்சேஸ் வரவேண்டும் என்று வரவில்லை. ஏதோ ஒரு அழுத்தம். வந்துவிட்டான். நண்பர்கள் இல்லாமல் இப்படி அவன் மால் போன்ற இடங்களுக்கு வருவதில்லை. கடைசியாக அவனுக்குப் பிடித்த கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு நண்பர்களை அழைத்த போது யாரும் வரமுடியவில்லை. முதல் நாளே பார்த்தே ஆகவேண்டும் எனத் தனியாளாகப் போனான். டிக்கெட் கவுண்டரில் இருந்தவர் கூட என்ன சார் தனியா எப்படி படம் பார்க்குறீங்க என்றார். அவனுக்கு அது கூச்சத்தை அதிகப்படுத்தியது. அவன் தனியாகப் படம் பார்ப்பது அது தான் முதல் தடவையாக இருந்தது. இப்பொழுது ஒரு சட்டை வாங்கலாம் என்று மால் ன் நான்காவது மாடியில் இருக்கும் ஒரு ஏசி கடைக்குள் தனியாகத்தான் வந்திருக்கிறான். இரண்டு கட்டம் போட்ட சட்டைகள் எடுத்துத் தனியாக வைத்திருக்கிறான். அவனுக்குத் துணி எடுக்க உதவியாக வந்த ஷோரூமின் உதவியாளர் பையன், அந்தச் சட்டைகள் கேஷ்வல் டைப்  ஸ்லிம் ஃபிட் என்றும் லேடிஸ் கூட இதைப்போடலாம் எனவும் கூறியிருந்தான். ஸ்லிம் ஃபிட்களில் ப்ரவீனுக்கு விருப்பம் இல்லை தான்.  இருந்தாலும் ஒரு சட்டையை எடுத்துக்கொண்டு ட்ரையல் ரூம் உள்ளே சென்று போட்டுப்பார்த்து விட்டு வெளியே வந்

சுற்றுச்சூழல் தினம் - செய்தி

மதுரையிலிருந்து அழகர் கோயில்போகும் வழியில் ராமசந்திரமிஷன் என்று ஒரு ஆசிரமம் இருக்கிறது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபொழுது நாட்டு நலப்பணித்திட்டத்தில் இருந்தபோது அந்த ஆசிரமத்தில் மரம் நடுவிழா என்று போயிருந்தோம். சரியாம ஒரு நாள் முழுக்க வேலை நடந்தது. பத்து நாட்கள் கழித்து மறுபடியும் சென்றோம். இப்பொழுது நாம் அழகர்கோயில் போகும்வழியில் பார்த்தால் ராமசந்திரமிஷனின் பக்கவாட்டில் இருக்கும் அடர்த்தியான மரங்கள் தெரியும். அவை தான் நாங்களும் எங்கள் நண்பர்களும் மண் ஒதுக்கி பள்ளம் தோண்டி நட்டுவைத்தவை. 1999ல் வெறும் கட்டிடம் மட்டும் தான் இருந்தது. இப்பொழுது கட்டிடம் தெரியாத அளவு மரங்கள் தெரிகின்றன. அதேபோல் ஒரு முறை ராமக்ருஷ்ண மிஷன் அழைத்திருந்தார்கள். இப்பொழுது இருப்பது போல் கட்டிடங்கள் அப்பொழுது இல்லை. குடிசை அமைப்பு தான் இருந்தது. ஆனால் முன்பக்க பக்கவாட்டு மரங்களும், பக்கவாட்டுத் தோட்ட அமைப்பிற்கு மண்ணும் தண்ணீர் போக வாய்க்காலும் அப்பொழுது ஒரு நாள் தியாகராசர் கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் பார்த்தது தான். அன்று வந்த மாணவர்களுக்கு நான் தான் பொறுப்பாளர். பொதுவாக நாட்டு நலப்பணித்திட்ட நிகழ்வுகளில்