இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அருணன் எழுதிய ' தமிழ் இலக்கிய (வழி) வரலாறு நூலை முன்வைத்து..

வசந்தம் வெளியீட்டகம் வாயிலாக , அருணன் எழுதிய ' தமிழ் இலக்கிய (வழி) வரலாறு' நூலை முன்வைத்து.... பழனிக்குமார் மதுரை. கால ஓட்டம் என்பது பத்தாண்டுகளாக, இருபது ஆண்டுகளாக, நூற்றாண்டுகளாகப் பிரிக்கப்படுகிறது. அதனூடே வரலாற்று நிகழ்வுகளாக அரசியல் மாற்றங்கள், புரட்சிகள் நிகழ்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் நியாய அநியாய தர்க்க மோதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. நிகழவும் செய்கின்றன.  தமிழ்மொழியின் இலக்கியங்களின் வாயிலாக அவற்றைப் படைத்த புலவர்கள், கவிஞர்கள் அவரவர் காலத்து அழகியலை, துன்பியலை ஆவணப்படுத்தியிருக்கின்றனர்.  ஒரு பருவத்து தர்க்க மோதல்கள் அடுத்த பருவத்திலும் தொடர்கின்றன.  அப்படியான தர்க்க வாதங்களில் கலந்துகொள்வோர் குறிப்பாக நியாயத்தின்பால் நிற்போர், அறம் பேசுபவர் கடந்த கால அறத்தின் சிந்தனைப் போக்குகளையும் அதற்கு மாற்றாய் விளம்பிய தர்க்கங்களையும் அறிந்துகொள்ளவேண்டும். திராவிடர் கழக அரசியல், கம்யூனிச சித்தாந்த அரசியல் காலகட்டம் தலைதூக்க ஆரம்பிக்கையில் அதன் தொண்டர்கள் மேற்கொண்ட வாசிப்பனுவ வாழியல் முறை அவர்களது நியாயம்சார்போராட்டங்களுக்கு வலு சேர்த்தது.  நாம் கடந்துவந்த வரலாறை நம் மொழி இலக்

'வைன் என்பது குறியீடல்ல...' - தேவசீமா கவிதைத் தொகுப்பை முன்வைத்து

 'வைன் என்பது குறியீடல்ல'  தேநீர் பதிப்பகம் வாயிலாக கவிதாயினி தேவசீமா எழுதிய கவிதைத் தொகுப்பை முன்வைத்து. கவிதைக்கான வாசகர்கள் அருகி வரும் இக்காலகட்டத்திலும் தொடர்ச்சியாகக் கவிதை தொகுப்புகள் வருவது , கவிதை மீதான பிடிப்பையும் கவிதைகளுக்கான இருப்பையும் அவற்றிற்கானத் தேவையையும் தான் காண்பிக்கின்றன. ஒரு சிறுகதை, ஒரு நாவலை அணுகுவது போன்று ஒரு கவிதையை அனைவராலும் அணுகமுடியாது என்றே ஒரே காரணம் தான் கவிதைக்கான வாசகர் வட்டம் குறுகியிருப்பதன் காரணம். மொழி மீது பிடித்தம் உள்ளவர்கள் இதில் முரண்படுவார்கள். காரணம், ஓர் ஒற்றைச் சொல்லில் தொலைந்துபோவதற்கும் ஒரு வாக்கியத்தில் லயித்துப்போவதற்கும் கவிதைகள் தான் வழி தருகின்றன. கவிதை நேசர்களுக்கு அந்த இலகு சாத்தியப்படும்.  'வைன் என்பது குறியீடல்ல' என்பது சமகாலத்தில் சமூக வலைதளத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் கவிஞர் தேவசீமா அவர்களின் தொகுப்பு. சமகால அவதானிப்புகள், சமகால வலிகள் , சமகால உணர்வுகள் என 'வைன் என்பது குறியீடல்ல' தொகுப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.  ஒரு காட்சியைக் கவிதையாக்குவதை விட காட்சியைக் காணும் கனத்தில்/ கணத்தில்

க்ருஷ்ண ஜெயந்தி

எல்லாக்  கிருஷ்ணர்களுக்கும் வேடம் கலைத்தாகிவிட்டது.. ராதைகள் மட்டும் ராதைகளாகவே  உறங்குகின்றனர்...

பூ பூத்ததைப் போல..

எல்லாமும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒரு பூ பூத்ததைப் போல நிகழ்ந்துவிட்ட சந்திப்புகளைத் தவிர எல்லாமும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

அசோகமித்திரனின் 'அப்பாவின் சிநேகிதர்' தொகுப்பை முன் வைத்து...

பழனிக்குமார் மதுரை. அசோகமித்திரன் எழுதிய " அப்பாவின் சிநேகிதர்" தொகுப்பை முன்வைத்து. மொத்தம் ஒன்பது சிறுகதைகள், இரண்டு குறு நாவல்கள்.  சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல். கடந்த செப்டம்பர் மாத புத்தக கண்காட்சியில் நற்றிணை பதிப்பகத்தில் இதைப் பார்த்ததும் வாங்கியாகிவிட்டது. அசோகமித்திரனின் எழுத்துகளை அவ்வப்போது முகநூலிலோ , இணையத்திலோ ஆங்காங்கே படித்ததுண்டு. அசோகமித்திரனின் தொகுப்பாக இது தான் எனக்கு முதல் புத்தகம். ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரு தொகுப்பிற்கோ அல்லது எழுதிய பல நூல்களுக்கோ பெயர் பெற்றவராயிருப்பார். நண்பர் ஒருவரிடம் அசோகமித்திரனின் எழுத்துகளைப் படிக்கவேண்டும் எதை எதையெல்லாம் படிக்கலாம் என்று கேட்டபோது இந்த 'அப்பாவின் சிநேகிதர்' ம் சொல்லியிருந்தார்.  தொகுப்பில் அடங்கியுள்ள அனைத்துக் கதைகளும் 1990 காலகட்டத்தில் எழுதப்பெற்றவை என்று குறிப்பு சொல்கிறது. பெரும்பாலான காட்சி அமைப்புகள் ஹைதராபாத்தை மையமாக வைத்தும் சில இடங்கள் சென்னையை மையமாக வைத்தும் எழுதப்பட்டிருக்கின்றன. தொடர் வாசிப்பனுபவத்தில் நமக்குக் கிடைப்பது வேகமாகக் காட்சியமைப்பிற்கு நம் மனதிற்குள் நம்மால் காட்சிகளைப

கொரோனாவும் இராமர் கோயிலும்

பழனிக்குமார், மதுரை. பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளில் 'OWNERSHIP QUALITY' ஐ நிர்வாகத்தில் தலையிலிருந்து வால் வரைக்கும் இருக்கும்படி பார்த்துக்கொள்வர். அதுவே அவர்களது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். 'OWNERSHIP QUALITY' என்பது வேறொன்றும் இல்லை, கந்தசாமி படத்தில் வடிவேல் கனவில், சாமி தோன்றி கம்பால் தன்னைத்தானே அடித்துக்கொள் என்று சொல்வார். வடிவேல் அப்படி அடிப்பார். சாமி போன பிறகும் அவர் அடித்துக்கொண்டே இருப்பார். அதிகப்படியாய் விசுவாசமாய் இருப்பதைக்காட்டிலும் அதிகப்பிரசங்கித்தனமான சுய விசுவாசக் கோளாறு அது. அப்படியான 'OWNERSHIP QUALITY' யை நிர்வாகத்தின் எல்லோருக்கும் ஊட்டுவார்கள். அந்த உணர்வின் வழியாகக் கார்ப்பரேட் கம்பெனிகள் தங்களது குறிக்கோள் / விற்பனை / இலட்சியம் இவற்றைச் செயல்படுத்துவார்கள். உதாரணத்திற்கு மருந்து கம்பெனியில் திடீரென ஒரு நிதியாண்டின் தொடக்கத்தில் ஒரு மருந்தின் பக்கம் லைட்டைத் திருப்புவார்கள். இதை நாம் அதிகம் விற்கவேண்டும் என்பார்கள். 'நோஞ்சான் அலுப்பு மருந்து ' என்று பேச்சுக்கு எடுத்துக்கொள்வோம். அதை அதிகம் விற்கவேண்டும். போகும் இடமெல்ல