இடுகைகள்

நவம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நனை...

எங்க பார்த்தாலும் மழையாம். ஆனால் நியூஸ்ல காமிக்கிறமாதிரி மதுரைக்கு அவ்வளவு பெரிய மழை இல்லைதான். இந்தச் சென்னைல மழை பெஞ்சதும் பெஞ்சது எல்லாப் பக்கமும் அதான் செய்தி.  டிவிலயும் அதைத்தான் காமிக்குறான்.  பேப்பர்லயும் அதைத்தான் போடுறான்.  சரினு ஃபேஸ்புக் வந்தா இங்கேயும் இதான். இவைங்க காமிக்கிறத பார்த்தா டிவி பார்த்துட்டு இருக்குற  எனக்கே மழைல நனைஞ்ச மாதிரி இருக்கு.. மழையில் நனைதல்ன்றது ஒரு வரம்.  அது ஒரு ஜென் நிலை. காலைல ஆபிஸுக்குப் போயிட்டு சாயங்காலம் வீடு திரும்புற நேரம் பார்த்து மழைனு அப்படியே சிலையா நிக்குறத் தொழில் என்னுடையது இல்லை. மார்க்கெட்டிங். முடிஞ்சவரை மட்டுமில்ல...முடியாதவரை கூட ஓடிட்டே இருக்கனும். ஆனா மழைல நனையனும்னா எனக்கு அது தொழில் இல்லை. மகிழ்ச்சி. வேலைக்கு வந்த புதிதில் என்னிடம் பஜாஜ்M80 வண்டி இருந்தது. நானும் என் நண்பனும் வேலை நிமித்தமாக 25கிமீ தொலைவிலுள்ள திருபுவனம் ஊருக்குப் போயிட்டு வர்ற வழியில் மழை. கையில் அப்போது அலைபேசி எல்லாம் இல்லை. ஆதலால் சங்கடமில்லாமல் நனையலாம். எல்லாரும் குறிப்பா புல்லட்ல போறவனே மழைக்கு ஒதுங்கி நிற்க நாங்க மட்ட

கதை விமர்சனம் - ஒரு இரு நாட்டு மன்னர்

1977 கணையாழி இதழில வெளிவந்த ஒரு சிறுகதை ' ஒரு இருநாட்டு மன்னர்' . நான் ரசித்துப் படித்தக் கதைகளில் இதுவும் ஒன்று.  அந்தக் கதைப் பற்றிய ஒரு மினி திரை விமர்சனம். ஒரு ஊர். அங்க ஒரு ஆளு. வைத்தியன் னு எல்லோரும் கூப்பிடுறாங்க. பெயர் என்னனு அந்தாளுக்கே தெரியல. நாடு விட்டுப்போன ஒரு ஆளு பேர்ல அந்த வைத்தியன் ஓட்டுலாம் போடுறான். அது கள்ள ஓட்டுனு எல்லாத்துக்கும் தெரியும். இந்த முறை நடக்குறது அந்த ஊரோட ஊராட்சிமன்ற உள்ளூர் தேர்தல். இரண்டு பேர் போட்டி போடுறாங்க. பூசணிக்கா சின்னத்துல ஒருத்தர். உருளை சின்னத்துல ஒருத்தர். இரண்டு பேருமே மைத்துனர்கள். பொண்ணு எடுத்து பொண்ணு கொடுத்த மாதிரி. கள்ள ஓட்டு விழுந்திரக்கூடாதுனு இரண்டு பேத்து ஆள்களும் விவரமா வேலை பாக்குறாக. பூசணிக்காயோட தேர்தல் குழுல ஒருத்தன் அந்த வைத்தியனோட உண்மையான பெயர் என்ன னு வாக்காளர் புத்தகத்துல இருக்கும்னு சந்தேகத்துல பாக்குறான். அப்படி கிடைச்சா பூசணிக்கா சின்னத்துல ஓட்டு போட ஒரு ஆள தயார் செஞ்ச்ரலாம்னு. ஒவ்வொரு பெயரா பாக்குறப்ப அணஞ்சபெருமாள் னு பெயர் இருக்கு. வயது 82. பெயருக்கும் வயதுக்கும் ஒத்துப்போகுது. விவரம் தெரிஞ்சு அந்

நல் தீபாவளி

நரகாசுரனை நினைக்க சில நேரம் சிவகாசியே எரிகிறது! அந்தச் சுருட்டிற்குள் சுருண்டிருப்பது எங்கள் இளம் ஏசுக்களின் உயிர்போதை.. சில வெடிகள் வெடிக்காமல் போனதற்குக்கூட சில கண்ணீர்துளிகளில் தான்! 1998ம் ஆண்டு தியாகராசர் கல்லூரி ஆண்டுவிழா மலருக்காக அங்கு படித்தபொழுது எழுதியது. ஒரு பட்டாசு தொழிற்சாலை வெடித்து ஒரு சிறுவன் தீயில் கருகிய கையோடு ....கையோடு என்றால் விரலோடு உள்ளங்கை இல்லை. முகம் முழுதும் தீக்காயம். கை வலியின் உச்சத்தில் அவன் முகம் வெந்த பாகங்கள் எரிச்சல் தந்திருக்க அவனும் உணர்ந்திருக்க வாய்ப்பு இல்லை. அருகில் அவனது அம்மா சடலம். கருகிப்போன உடல் இரத்தத் திசு கிழிந்து தீ கொக்கரித்த அந்த புகைப்படத்தை நாளிதழில் பார்த்து இப்படி ஒரு பட்டாசு வெடிக்கவேண்டுமா என்ற ஒரு கேள்வித்தீ தான் என் சிறுவயது பட்டாசுக்கனவுத் தீயை அணைத்தது.... பட்டாசுகளை வெறுக்கத் துணிந்தேன். புகையும் புகை சார் நாளுமெனத் தீபாவளி புகைவதை வீட்டு மாடியில் அமர்ந்து பார்த்த தீபாவளிகள் ஏராளம். சாஸ்திரத்திற்கு ஒரு கம்பிமத்தாப்பென்ற அம்மாவின் ஆசை கூட புரியவைக்கப்பட்டது . படிப்பு முடிந்து வேலை வருகையில் வெடி வெடிப