இடுகைகள்

மே, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாஸ்டர்.

காலைல எந்திரிச்சு மணிய பார்த்தா  ஆறு. அந்தா இந்தானு கிளம்பி நவின் பேக்கரில ஒரு காப்பி தண்ணிய குடிச்சிட்டு வாக்கர்ஸ் கிளப் வாசலுல வண்டிய நிப்பாட்டுனா மணி ஏழாயிரும். வெளிய இருந்து உள்ள போறதுக்குள்ள நெத்தி வியர்த்துரும். இதுக்கே டயர்டா ஆயிட்டா எப்படினு சூரிய பகவான் மூஞ்சில சுள்ளுனு தன்னோட பாசத்தக்காமிப்பாரு. வேகமா வெக்கு வெக்குனு   வியர்த்து விறுவிறுத்து நடந்து வந்தோம்னா நமக்குனு ஒரு போதி மரத்தடி  இடம் இருக்கு. வாக்கர்ஸ்கிளப்போட கடைசி முனை அது. ஒரு ஸ்டோர் ரூம். மூணு மரத்த வெட்டாம அதுக்கு அடில கட்டின கட்டிடம். முன் புறம் ஒரு பெரிய திண்ணைய கட்டிட்டாங்க. காலைல நடக்க வர்ற பெரிய வயசானவங்க அங்க படுத்து உடற்பயிற்சி பண்ணுவாங்க. அப்புறம் அந்த மரத்தடில சேர் போட்டு அரசியல் கலை இலக்கியம் னு எல்லாப் பயலையும் துவைச்சு தொங்க விடுவாங்க. முக்கியமா அந்த வாக்கர்ஸ் கிளப்புக்கு பணம் கட்டாம நடக்குறவன....அப்புறம் அங்க இருக்குற அரசியல் தலைவர் செயலாளர்னு எவன் வந்தாலும் கிளித்து தொங்கவிடப்படுற இடமா அதை பயன்படுத்திக்குவாங்க. அந்த ஸ்டோர் ரூம்ல பாய் இருக்கும். அதை விரித்து படுத்து சிலர் யோகாசனம் செய்வாங்க. சில