இடுகைகள்

ஆகஸ்ட், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மதியப் பொழுதும் மழையும்

சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டு  மல்லிகைச் சாரத்தைக்  காண்பித்தவளை ஒருமுறை பார்த்துவிட்டு இன்னொருபக்கம்  உன்னையும் பார்க்கிறேன்... சிரித்துக் காண்பித்த  உன் மதியப் பொழுது... நெடுஞ்சாலையின் ஓரத்தைக்  கிழித்துச் செல்லும் தொடர்வண்டியைப் பார்த்து கை நீட்டுகிறாய்.. உன் விரல் நுனியிலிருந்து மழலையின் பேரானந்தமாய் தொடர்வண்டி புகைகிறது... அரளிப்பூக்கள் பூத்துக்கொண்ட அந்தப் பாதையெல்லாம் நீயும் நானும்  முளைத்துக்கொண்டோம் ஒரு 'நாமாக' கைகள் கோர்த்துக்கொண்ட அந்த மதியத்தின் மத்திம பொழுதில் ஒரு மழையும்  நனைந்தது நம்மை நனைத்து.... இப்படித்தான்  அந்த நாளின்  நாட்குறிப்பேட்டு பக்கம் நனைந்திருந்தது ப்ரியத்தின் ஈர எழுத்துகளாய்.... பிறிதொரு நாளின்  தனிப் பயணத்தில் மல்லிகைச் சாரங்கள் நெறிக்கின்றன நீயற்ற தருணத்தின் உன் வாசங்களை... இருப்புப் பாதையில் நீ காட்டிய உன் விரலின் நுனி இன்னும் நிலை குத்தி நிற்கிறது உன்னில்லாமையின் இருப்பிற்குள்... பூக்களைச் சுமக்கும் சாபங்களை ஏந்திக்கொண்டு  மனத்தோட்

ப்ரிய சகி.....

ட்ரிங்..ட்ரிங்.... ஹலோ..சொல்லு.. என்னடா வேகமா பேசுற.. என்ன சொல்லு. எங்க இருக்க... வேலைக்குக் கிளம்பிட்டு இருக்கேன்.என்னனு சொல்லு எங்க இருக்கனு சொல்லு... ஏ..சொல்லு..லேட் ஆச்சு... இவ்ளோ வேகமாலாம் என்ட்ட பேசவேணாம். வேலைய முடிச்சிட்டு கூப்பிடுடா.. டக்குனு கட் பண்ணிட்டா செல்வி. செல்வி எப்போதும் இப்படித்தான். சில அல்ல பல சமயங்களில் ப்ரவீன் என்ன செய்வது என்பது அவனுக்குத் தெரியாத போது அவளது பார்வையில் அதை எடுத்துச் சொல்வாள். எடுத்துச் சொல்வது என்ன , தாறுமாறாக அதை ஆராய்ந்து கிளித்துத் தொங்க விடுவாள். அப்பொழுது தான் ப்ரவீனுக்குப் புரியும் இப்பொழுது கூட அவளுக்கு அலுவலகம் செல்லும் வழியில் சிக்னலில் நின்ற போது  ஒரு துணிக்கடையில் வெளியே பொம்மைக்கு போட்டு வைத்திருந்த சட்டையில் தன் ப்ரியமானவனை ஒரு கனம் நினைத்துப் பார்த்து, அந்த சட்டை அவனுக்குப் பொறுத்தமாக இருக்கும் என கற்பனை பண்ண சட்டென சிக்னலில் யூ டர்ன் அடித்து அந்தக் கடையில் அந்த பொம்மையின் சட்டை உறுவச்சொல்லி வாங்கி விட்டாள். அதை அவனுக்குக் கொடுக்க வேண்டும். ப்ரியத்தின் சுனாமிதான் செல்வி. எக்கனமும் அவனை நினைத்த

கரை குறிப்பு 3

காலின் அடியில் நகரும் நீர்நிலமாய் நழுவுகிறது தூக்கிச் சுமந்த ப்ரியத்தின்  சொல்லொன்று... ##கண்ணீரலையின் கரை குறிப்பு

கண்ணீரலையின் கரை குறிப்பு 2

உலர்ந்த பின் உதிரும் விரலிடைத் துகளாய் கனக்கிறது ப்ரிய அலையொன்றின் மௌன ஈரம்... ##கண்ணீரலையின் கரை குறிப்பு

கரை குறிப்பு

கால் தழுவாது கரைந்து போன கடலுக்குள் அத்தனையும் உப்பு... கண்ணீரலையின் கரை குறிப்பு...

பட்டர்ஃப்ளை மெஷின்

படம்
காலையில் நடக்கும் நடையாளர் கழகத்தில் உறுப்பினர்களுக்காக உடற்பயிற்சி உபகரணங்கள் வாங்கி போட்டு வைத்திருக்கிறார்கள். முதலில் ட்ரெட் மில் போன்று வாங்கி வைத்தார்கள். நீங்கள் உடனே ட்ரெட் மில் என்றதும் மோட்டர் லாம் போட்டு ஹார்ட் பீட் பாக்குற பெரிய மிஷின்லாம் நினைக்காதீங்க. அந்த அமைப்பு முழுக்க முழுக்க டொனேஷன் மற்றும் சந்தா மூலமாக இயங்கும் ஒரு அமைப்பு. 100 பேர் நடக்க வந்தா 20 பேர் தான் சந்தா கட்டுவான். அது வெறும் 500 ஓவா வருஷத்துக்கு . பெரிய கோடிஸ்வரனா இருப்பான். பெரிய பேங்க் மேனேஜர் ரிட்டையர்ட்னு பீலா விடுவான். தம்பி வருச சந்தா 500 ஓவா கட்டலயே னு கேட்டா அதுவரை வாக்கிங்க் போயிட்டு இருந்தவன் ஜாக்கிங் போக ஆரம்பிச்சிருவான். அதுனால அது ட்ரெட் மில் ல பார்த்து வடிவமைக்கப்பட்ட இரும்பு பார் தான். கைப் பிடி இரண்டு இருக்கும். கால் வைக்க இரண்டு பெடல் இருக்கும். ஏறிக்கிட்டு நடக்குற மாதிரியோ பெடல் மாதிரியோ இயக்கலாம். லெஃப்ட் ரைட்டுக்கு ஏதுவா கைப்பிடி தானா நகரும். அதையும் பிடிச்சிக்கிட்டு கைகளையும் ஆட்டலாம். சில பயபுள்ளைக அதுல நிண்ட்டுக்கிட்டு ஊஞ்சல் மாதிரி ஆடும் . அதை டொனேட் ப

பெத்தாரு

வேகமாக சைக்கிளை ஓட்டிக்கொண்டு வீட்டு வாசலுக்கு துரை வரும்பொழுது மணி ஒன்பது.   நீச்ச தண்ணியையும் காய்கறி மிச்சத்தையும் வாசலில் இருக்கும் உரலில் கொட்டிக்கொண்டே இருந்தாள்மாயக்காள்.  அதற்குள் இதற்காகவே வரும் அந்த வெள்ளைப் பசு வாயைத் திணிக்க கொம்பு மாயக்காளை இடித்தது. அம்மா பாத்து முட்டிறப்போகுதுனு துரை சொன்னப்பின்னாடி தான் மகன் வந்துவிட்டதைப் பார்த்து பிறகு முகத்தைத் திருப்பிக்கொண்டாள். ஒரு வித எரிச்சலுடன்  நீ வேற என்னத்த்துக்கு அவசரப்படுற ..என்று சொல்லிக்கொண்டே முழங்கையால் பசுவின் முகத்தைத் தள்ளி விட்டு உரலுக்குள் கழனித்தண்ணியை ஊற்றினாள். காய்கறிகளைக் கொட்டினாள். பசு மெல்ல மெல்லமாய் குடித்து, வாயில் சிக்கும் காய்கறிகளை மென்று கீழே சிந்தியது. உனக்கு ஈனவும் தெரியல...நக்கவும் தெரியல..எதுக்கு இந்த பவுசு னு சாடை பேசினாள் மாயக்கா. எதுவும் பேசாமல் உள்ளே நுழைந்தான் துரை. இரவிலேயே எழுந்து சிம்மக்கல் போயி காய்கறிகள் வரும் லாரிகளில் காய்கறி மூட்டைகளை விலைக்கு வாங்கி அவற்றை ட்ரை சைக்கிளில் ஏற்றி சென்ட் ரல் மார்க்கெட்டுக்கு வந்து விற்று பொதுவாய் வீடு வர மதியம் ஆகிரும். இன்று வேலைக்கு ஆளை நிமிர்