இடுகைகள்

மார்ச், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காப்பி

நல்ல அடர் பழுப்பு நிறத்தில் ஆவி பறக்கும்படியானச் சூட்டில திடமான ஒரு காப்பி அருந்த வேண்டுமென்பது ஆசை இல்லை. வெள்ளாவியின் நடுவே பருக எத்தனிக்கையில் கோப்பையின் விளிம்போரத்தில் தெரியும் மென்மையான பழுப்புச் சாயல்கொண்ட விழிகளைப் பார்த்துக்கொண்டே என்றால் சரி. ஒரு காப்பி பருகலாமா மறுபடியும்....

எப்படி இருக்கிறாய்

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு கேட்பதில் எந்தச் சிக்கலுமில்லை. எப்படி இருக்கிறாய் என்ற கேள்விக்குப் பின்னிருக்கும் நெடும் பிரிவும் கொஞ்சம் இயலாமையும் தலைதூக்கும் வரை.

இன்னொரு பிள்ளையார்

உங்கள் வேண்டுதலின் படி அந்தக் கோயிலின் விநாயகர் அருள்பாலிப்பார். ப்ரியங்களைச் சுமந்தபடி ஆலய வாசலில் காத்திருப்பவனுக்கு வேண்டுதல் ஏதுமில்லை. இருந்தாலும் காய்ந்த சருகுகளை மிதிக்காத படி அவன் அருள்பாலிப்பான் அரச மரத்தின் வலிகளை.

தேடல்

உன் பெயரில் யார் யாரோ அழைக்கப்படுகிறார்கள். உன் பெயருக்கு யார் யாரோ திரும்புகிறார்கள். எந்தப் பெயரிலும் இல்லாத இந்தத் தேடலில் நீயும் நானும்.

தளும்பல்

கனத்துப் போய் கிடக்கிறது ஏதுமற்ற என்றொரு நிலை. நீ மாத்திரம் நிரம்பும்படியான ஒரு மழைப்பாத்திரத்தில் தளும்புகிறது நிறைந்துக் கிடக்கும் உன்னாலான வெறுமை

ஞாபக மழை

நீங்கள் இப்பொழுது கவிதையொன்றை எழுத எத்தனிக்கிறீர்கள். எழுதவே முடியாத தழுவலொன்றை விடுபட வகையேதுமற்ற பார்வைக்குள் விழுந்ததைப் பற்றி எழுத எத்தனித்த பழையக் கவிதையொன்றை அது ஞாபகப்படுத்துகிறது. நீங்கள்  இப்பொழுது உங்களது பழையக் கவிதையைத்  தேடிச் செல்கிறீர்கள். உங்களுக்கு  இப்பொழுது ஒரு தழுவலும் விடுபட வகையேதுமற்றதான ஒரு பார்வையும் ஞாபகம் வருகிறது. நீங்கள் இப்பொழுது கடந்த காலத்  தழுவலுக்கானக்  காத்திருத்தலில் மறுபடியும்  காத்திருக்கிறீர்கள்.. தழுவலுக்கு  முந்தையத் தருண லப்டப்புகளை  அப்பொழுதைப் போலவே இப்பொழுதும்  கேட்கிறீர்கள். கடந்தகால  விரலிடுக்கு  இடைவெளிகளில் எல்லாம் இப்பொழுது  அணைத்துக்கொள்ள  சீர் செய்கிறீர்கள். நினைவில் மீளும் மழையென  நனைக்க மறுக்கிறது ஈரப்ரியங்கள். இப்பொழுது அணைப்புக்குள் தகித்தப் ப்ரியத்தீயை நீங்கள் உணர்கிறீர்கள்.. ப்ரியம் கொண்டு விரல் பற்றிப் பார்க்கும்  விழிகள்  உங்களுக்கு ஞாபகம் வருகிறது. நீங்கள் விடுபட விரும்பாத அந்தப் பார்வையை