தளும்பல்

கனத்துப் போய்
கிடக்கிறது
ஏதுமற்ற என்றொரு
நிலை.
நீ மாத்திரம்
நிரம்பும்படியான
ஒரு மழைப்பாத்திரத்தில்
தளும்புகிறது
நிறைந்துக் கிடக்கும்
உன்னாலான வெறுமை

கருத்துகள்