இன்னொரு பிள்ளையார்

உங்கள்
வேண்டுதலின் படி
அந்தக் கோயிலின்
விநாயகர்
அருள்பாலிப்பார்.
ப்ரியங்களைச் சுமந்தபடி
ஆலய வாசலில்
காத்திருப்பவனுக்கு
வேண்டுதல் ஏதுமில்லை.
இருந்தாலும்
காய்ந்த சருகுகளை
மிதிக்காத படி
அவன் அருள்பாலிப்பான்
அரச மரத்தின்


வலிகளை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என்னை வளர்த்த ஆசிரியர்கள் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8

மனக்குதிரை