இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசபக்தர்களின் மனச்சாட்சியை எப்படி தட்டுவது

 தேசபக்தர்களின் மனச்சாட்சியை எப்படி தட்டுவது பழனிக்குமார், மதுரை.  தேசிய புள்ளியியல் துறையில் இன்றைக்கு ( 31/5/21) பிஜேபியினர் மற்றும் பிஜேபியின் ஆதரவாளர்களுக்குப் புத்தியில் உரைக்கும்படியான அறிக்கை ஒன்றை தந்திருக்கிறார்கள். அது இந்திய நாட்டின் கடந்த ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான அளவைச் சொல்லியிருக்கிறார்கள். சுருக்கமாக GDP .  கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவில் -7.3 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. அந்த 7.3 சதவீதத்திற்குமுன் இருப்பது வெறும் கோடு அல்ல. அது மைனஸ் அதாவது எதிர்மறையான குறியீடு. இன்னும் சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் கடந்த வருடத்தில் நம் தேசத்தின் பொருளாதார வீழ்ச்சி மைனஸ் எதிர்மறை 7.3 சதவீதமாக விழுந்துள்ளது. அதாவது அதலபாதாளம்.  இது ஏற்கனவே எதிர்பார்த்தது தான் என்று அதிகாரிகளும் அமைச்சர்களும் சொல்லக்கூடும். ஏனென்றால் கடைசி நிதியாண்டின் கடைசி காலாண்டில் ( ஒவ்வொரு நிதியாண்டும் ஏப்ரல் மாதத்திலிருந்து மார்ச் வரை கணக்கிடப்படும்)  ஜனவரி 21ல் நடப்பு நிதியாண்டிற்கான வளர்ச்சியில் ஜனவரி பிப்ரவரி மார்ச்சில் கூடும் ஆனால் ஒட்டுமொத்தமாகக் குறைந்திருக்கும். காரணம் முதல் காலாண்டி

G D P யும் தேச பக்தர்களும்...

சில இணையங்களை உற்று நோக்கினால் ஒரு செய்தி பல மேதைகளால் பரப்பப்படுகிறது. 2021-2022ம் ஆண்டில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாய் இருக்கும் என்று. இது எப்படி இருக்கிறது என்றால்,  நீங்கள் சராசரியாக மாதமாதம் நூறு ரூபாய் சம்பாதிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.  ஒரு மாதம் நீங்கள் வேலைக்குப் போகவில்லை. உங்களுக்கு வரவேண்டிய நூறு ரூபாய் கிடைக்கவில்லை. இப்படி பல மாதங்களாய் வேலைக்குப்போகாமல் சம்பளமற்று இருக்கிறீர்கள், திடீரென ஒரு மாதத்தில் வேலைக்குப்போகும்போது உங்களுக்கு ஐம்பது ரூபாய் சம்பளம் தருகிறார்கள், உடனே உங்கள் மனைவியோ/ கணவனோ, பாருங்கள், போன மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்தமாதம் எங்காளு அதிகமாய்ச் சம்பாதிக்கிறார் என்பது போல் இருக்கிறது இந்த ஒப்பீடு. இன்னும் தெளிவாகச் சொல்கிறேன்.  நான் வேலை பார்த்த மருந்து நிறுவனங்களில் ஒரு கூத்து நடக்கும்.  ஒரு மெடிக்கல் ரெப் வேலை  பார்க்கும் ஊரில் தொடர்ந்து அவர்க்கு வழங்கப்பட்டிருக்கும் டார்கெட் நடக்காது.  மாதாந்திரக் கூட்டத்தில் அவரது விற்பனையை GRAPH PRESENTATION போட்டுப் பார்த்தால் முந்தைய வருடத்தைவிட நெகட்டிவாய் போயிக்கொண்டிருக்கும். அந்த நிதியா

உத்தேசம்

  படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்திலிருந்து ஒரு வரி பிடித்த பாடலின் நடுவே சமிக்ஞையுடன் ஒரு குரல் யாரென்றே தெரியாத ஒரு முகத்தில் நெற்றி வழியும் ஒரு தாரைக்கூந்தல். அடிக்கடி சூடிக்கொள்ளும் பிடித்தமான பூ பெயர் சொல்லி விற்பவரின் குரல்.. கால்களுக்குள் ஓடியோடி ஒளியும் எல்லா நாய்க்குட்டிகளும்... நெடுஞ்சாலையின் பக்கவாட்டில் விரையும் புகைவண்டி... ஏரியும் நாணலும் மழையும் ஒரு குவளை காப்பியும்... இவற்றின் முகங்களைத் தந்துவிட்டு உன் முகத்தை மறுபடியும் பெற்றுக்கொள்ள எப்பொழுது உத்தேசம்...