இடுகைகள்

ஜூலை, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடிதமாய்...

மழையை நனைத்த படி இறகு விரிக்கும் காதல் பறவைகளின் ஞாபகத்தில் நீயும் நானும் நனைந்து கொண்ட ஓரீரப் பொழுது. சந்தோசக் கீற்றுகளை எழுத்தாக்கும் வித்தைகளேதும் அற்றுப்போய் வெறுமனே வார்த்தைகளை மட்டும் தருவதில் நம்மை நனைத்த மழை மீள நனைப்பதில்லை... நெற்றிமுடி கலைந்த அது சார் தொட்டுத்தீர்த்த விரல் ரேகைகள் வளைந்துகொண்டதை எழுத்துகள் எழுதிக் காட்டுவதில்லை.. தூரங்கள் குறைய விலகியதும் பிடித்துக்கொண்ட விரல் பிரிய மறுத்ததும் இன்னொரு கவிதையாகப் பிறக்க எத்தனித்த விபத்திலொன்று கண்மூடி பார்க்கையில் முழுக்க உன்னை உணர்ந்தது... நுகரும்படியாய் காதுமடல்களுக்குள் காதல் சொல்லிய மாயப்பொழுதின் முடிச்சுகளில் இறுகிக்கொண்டது உனை அழைக்கும் ஓர் அன்பின் கடவுச்சொல்.. நகர்ந்த பிறகு இருக்க ஒரு தடயம் கேட்டு வாங்கும் மாயைகளின் மாயையென உனை விழிக்கும் ஏக்கக்காரனின் தாகம்.. இராக்கள் எல்லாம் உன் முகங்கொண்டு குறுகும் தூக்கங்களில் ஆகச்சிறந்த நனவுகளின் கனவு நீ.... அன்பைச்சொல்லித் தீர்ந்துபோன ஆதிப்பேனாக்கள் ஏதேனுமொன்று உயிர்பெறுமாயின் உரக்கக்கதறும் என் மௌனத்தின் அடர

கபாலி

படம்
எல்லாரும் பார்த்திருப்பீங்க. இல்லாட்டி விமர்சனம்னு படிச்சிருப்பீங்க. என் கைக்கு கபாலி ஃபீவர் இன்னும் குறையவில்லை. இது என்னோட பார்வை. பெரிய மார்க்கெட்டிங் வெற்றிகள் எல்லாமே சாதாரண ஒரு ஐடியாலத்தான் அமையும். பெரிய அளவுல மூளைய சிந்திக்க விடாம சர்வச் சாதாரணமாக அமையும் சில கருவிகள் தான் வெற்றி. ஒரு கதை கிடைச்சிருக்கு. அந்தக் கதைக்குச் சரியான பாத்திரம் அமைத்துவிட்டால் வெற்றி.  ரஞ்சித்துக்கு ரஜினி. ரஜினிக்கு என்ன பண்ணலாம் ரஜினிய வச்சு என்ன பண்ணலாம் இது தான் அடிப்படை. ரஞ்சித் எடுத்தது இரண்டாம் வகை. சதுரங்க வேட்டை வசனம் பில்லா இரண்டாவது பாகத்துல வர்ற கூர்மையான வசனம் இது போன்ற வசனங்களை விட இப்பொழுது பேசப்படும் வசனத்தின் வீச்சு அதிகம் என்றால் அதற்கு ரஜினி மட்டும் தான் காரணம்.  ரஞ்சித்தின் சாதி வெளியே தெரியாமல் இருந்திருந்தாலும் ரஞ்சித் பேசப்பட்டிருப்பார். வசனங்கள் வந்து அடைந்திருக்கும்.  ரஞ்சித்தைப் பொறுத்தவரை ரஜினியை பயன்படுத்திவிட்டார். சாதிக் கூண்டை நாம் ரஞ்சித்திற்கு வைப்பது அழகல்ல. படைப்புகள் சாதிகளை மீறி ஒளிருபவை. கபாலி அப்படித்தான். ஒரு புதிய இயக்குனராக இருந்திருந்தால்