இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோவிட் இரண்டாம் அலையும் மனிதர்களும்

கோவிட் இரண்டாம் அலையும் மனிதர்களும்: பழனிக்குமார்.மதுரை. கொரோனா முதல் அலையின் போது இவ்வளவு தாக்கம் இல்லை என்பது எல்லாரும் அறிந்ததே. முதல் அலையில் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் அறுபது வயதைக் கடந்தவர்கள் அல்லது சர்க்கரை மற்றும் இருதய போன்ற பாதிப்பு இருந்தவர்களை வேகமாகத் தாக்கியது. ஆனால் இரண்டாம் அலையில் வயது வித்தியாசம் இன்றி தாக்கிக்கொண்டிருக்கிறது. இதை மக்கள் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். போன முறை பரவிய வைரஸின் ந்யூக்ளியஸில் மாற்றம் ஏற்பட்டு வந்திருக்கும் புதிய வைரஸின் படியில் தாக்குதல் தீவிரமாக இருக்கிறது. அறிகுறிகளும் வித்தியாசமாக வருகின்றன. கொரோனா வைரஸ் சுவாசப்பாதையில் தன்னைத் தகவமைத்துக்கொள்வதால் தான் மூச்சுப்பிரச்சினைகள் வருகின்றன. ஆனால் இது மட்டுமே அறிகுறியாய் இப்பொழுது இல்லை. வயிற்றாழை (டயேரியா) , காய்ச்சல், முதுகுவலி ( பேக் பெயின்) கை கால்கள் வலி, உடல் அசதி, இருமல், சளி, பிறகு கடந்த வருடம் அனைவருக்கும் பரிச்சயமான அறிகுறிகளான மூச்சுவிட சிரமம் இருத்தல், வாசம் அறியாமல் இருத்தல், சுவை அறியாமல இருத்தல் இன்ன பிற. இவை தான் அறிகுறிகள். இவற்றில் எதுவுமே இல்லாமலும் இருக்கலாம்

இதோ உன் தேநீர்கோப்பை

ஒரு பயணத்தின் நடுவே  நீயென்னை அழைத்துச்சென்ற தேநீர் விடுதியைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது.  நீயும் நானும் நெடுநேரம் அமர்ந்து  பருகிய தருணங்களின் எச்சம் அது. ஒரு மிடறுக்குப்  பின் நெடுஞ்சாலையைக்  கவனித்தபடி ஒரு மழை வந்தால் எப்படி இருக்குமென்றாய்... எனை நனைவிக்காத ஒரு மழைக்காக நான் அத்தனை பிரயத்னப்பட்டதில்லை. ஒவ்வொரு மழைப்பயணத்திலும் நீயற்றதைச் சொட்டிக்கொள்ளும் ஞாபக மின்னல்களை இப்படித்தான் எழுதிவைத்திருக்கிறேன் நீயும் நானும் அமர்ந்த  மேஜை இப்பொழுதும் அப்படியே தானிருக்கிறது. பழுப்பேறிய  ஞாபக நரம்புகளில் அடைபட்டுக்கிடக்கும் சொற்களிலொன்று  தானாய் விழுந்ததை நீ இப்பொழுதும் கவனிக்கவில்லை. யாரோ ஒருவர் தேநீர் வேண்டுமா எனக் கேட்கிறார். எதிரே அமர்ந்திருக்கும் கடந்த காலத்தின் நீட்சியாய் உன் ஞாபகங்களைப் பார்க்கிறேன்.  கடந்தகாலத்தில் அமர்ந்துகொண்டு எனக்கானத் தேநீரைப் பரிந்துரைக்கிறாய். அப்பொழுதும் கூட அந்தச்சொல் உனக்கானதெனக் கூற இயலவில்லை. தேநீர் வரும்வரை ஏதாவது பேசலாம்தான் பெருத்த மௌனமென்பது கனத்த மொழியை அடைகாப்பதென்பதைப் பயிற்றுவித்த உன்மத்த நாட்களிலிருந்து மெல்லமாய் சொற்களைத்  தேர்ந்தெடுக்கிறேன