இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

A separation ஈரானிய மொழி திரைப்படம்

A  Separation ஈரானிய மொழி திரைப்படத்தை முன்வைத்து. பொதுவாக வளரக் கூடிய நாடுகளில் மனிதனின் வாழ்வியல் என்பது அங்கு நிலவக்கூடிய பொருளாதார நிலைமைகளை வைத்து என்ற படியே இருந்தாலும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஏற்ற படி பல காரணிகள் இருக்கின்றன. வேலை பார்க்கும் சூழல் நிமித்தமாக புலம் பெயர்தல் என்பது நாம் கேள்விப்பட்டதுண்டு.   மிகவும் பிற்போக்கான கருத்துகளைப் பின்பற்றும் தேசங்களில் கூட கல்விக்காகவோ, பொருளாதாரத்திற்காகவோ புலம் பெயர்தல் அவசியப்படுகிறது. ஆனால் தனிமனிதன் ஓர் இடத்தில் தன்னைத் தகவமைத்துக்கொள்ள பல காரணிகளைத் தின்று செரிக்கிறான். சிலர் அதைத் தியாகம் என்று அழைக்கிறார்கள். ஈரானிய மொழி திரைப்படமான 'A Separation" கூட அப்படியானச் சில அளவைகளை முன் வைத்து ஒரு குடும்பத்திற்குள் நிகழும் நிகழ்வுகளைச் சொல்கிறது. 11 வயது ஆகும் மகளிற்கு நல்ல கல்வி கொடுக்க வேறு இடம் செல்ல வேண்டும் என்பது குடும்பத்தலைவியின் ஆசை. இந்த ஊரில் அவளுக்கு நல்ல கல்வி கிடைக்காது என்பதை விட இங்கு கிடைப்பதை விட மேம்பாடானக் கல்வி என்பது அவளது நிலைப்பாடு. குடும்பத்தலைவனுக்கு 80 வயதில் இருக்கும் Alzhiemers (மறதி போன்ற ந

பொல்லாதமைனாக்கள்( ஸ்ரீவள்ளி)

பழனிக்குமார் மதுரை உயிர்மை பதிப்பித்து ஸ்ரீவள்ளி எழுதிய "பொல்லாத மைனாக்கள்" கவிதைத் தொகுப்பை முன்வைத்து.. ஈசிஜி மெஷினில் மேலும் கீழுமாய் ஓடிக்கொண்டிருக்கும் அலைவெண்களைப் போல பயணம்.  ஒரு நெடும் பயணத்தில், சாலையினோரத்தில் யாராவது ஒருவர் ஆசுவாசமாய் மரத்தடியில் அமர்ந்துகொண்டோ படுத்துக்கொண்டோ அல்லது வெறுமனே வயல்பரப்புகளைப் பார்த்துக்கொண்டோ இருந்தால் பெரும் பொறாமை தொற்றிக்கொள்வதைப் போலவே இப்பொழுதெல்லாம் கவிதை வாசிப்பவர்களையும் எழுதுபவர்களையும் கண்டால் அப்படித் தொற்றிக்கொள்கிறது.  கவிதை எழுதும் மனநிலை அபூர்வமானது. அதற்குச் சற்றும் சளைத்ததல்ல கவிதைகளை வாசிக்கும் மனநிலையும். எவ்வளவு விலை கொடுத்தேனும் அத்தருணங்களைப் பெறமுடியாது.  அப்படியொரு அபூர்வ மனநிலையில் பொல்லாத மைனாக்கள் .  பொருட்காட்சியில் ஒவ்வொரு அரங்கமாக வைத்திருப்பார்கள் (stall). ஒரு அரங்கத்தில் வீட்டிற்கான அத்தியாவசியப் பொருள் இருக்கும். இன்னொரு அரங்கம் மரவேலைப்பாடுமிக்க கலைக்கூடமாக இருக்கலாம்.  அடுத்த அரங்கம் மண் வேலைப்பாடு மிக்க கலைக்கூடமாய் இருக்கலாம்.  அப்படித்தான் "பொல்லாத மைனாக்கள்" ன் ஒவ்வொரு கவிதையும் ஓர் உல

அருஞ்சொற்பொருள் விமர்சனம்

அருஞ்சொற்பொருள் (தமிழ் அறிவோம் 2) கவிஞர் மகுடேசுவரன். பொதுவாக சமூகவலைத்தளத்தில் வட்டாரமொழி என்ற பெயரில் புழங்குபவன் நான்.  அதேபோல் தமிழ் இலக்கணம் குறிப்பாக வல்லெழுத்துகள் மிகும் இடங்களை மிகச் சரியாகத் தவறாக எழுதுபவன்.  ' அருஞ்சொற்பொருள்' போன்ற நூலுக்கு என் வாசிப்பனுபவத்தை எழுதுகையில் எந்தத் தவறும் இடக்கூடாது என்றே பயமாக இருக்கிறது. அந்தளவிற்கானத் தேர்ந்தப் புத்தகம்.  அடிப்படை தமிழ் இலக்கணமாக எழுத்து சொல் திணை என ஆரம்பித்து வேற்றுமை உருபுகளில் வலிமிகும் மிகா இடங்கள் எனப் பட்டியலிடுகிறார்.  அது தவிர அவரிடம் அவரது நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்தப் பதில்களும் இடம்பெற்றுள்ளன.  உதாரணமாக  முயற்சித்தான், முயல்கிறான் எது சரி என்ற கேள்விக்கு  முயல் என்ற வினைவேரிலிருந்து ஆரம்பிக்கிறார். பயிற்சித்தான் வருவதில்லை. பயின்றான் என்கிறோம். ஆட்சித்தான் வருவதில்லை. ஆண்டான் என்கிறோம். அதுபோல் முயற்சித்தான் என்று அல்ல, முயன்றான் என்று கூறுகிறார். DVD என்பதற்கு எண்ணியற் பன்திற வட்டு என்று மொழிபெயர்த்ததன் நியாயத்தை விளக்குகிறார். சுவாரஸ்யத் தகவல்களாக,  சல்லி என்று ஒரு பகுதி வருகிறது.  சல் என