இடுகைகள்

மே, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மதுரை டூ அரியலூர்

ஒரு கட்டுரையில் புகைவண்டியில் செல்லுவது பற்றிச் சொல்கையில் அது பிடிக்காது  என்று குறிப்பிட்டிருந்தேன்.  எனக்கு ஏன் புகைவண்டி (முதலில் புகைவண்டி னு எழுதுறதுக்கு ட்ரெயின் னு போட்டுக்கிறேன்...தமிழில் எழுதுனா வரிவிலக்கா கொடுக்கப்போறாங்க...)  ட்ரெயின்ல போறது ஏன் பிடிக்காதுனா....அதற்கு ஒரு பிளாஷ்பெக் இருக்கு. கல்லூரி முடித்து வேலை சேர்ந்ததும் 3 மாதத்தில் சென்னையில் மீட்டிங் என்று அழைத்தார்கள்.  நான் பஸ்ஸில் போகலாம் என என் சீனியரிடம் சொன்னேன்.  அவர் அவ்வளவு தூரம் பஸ்ஸிலா என ட்ரெயினில் போலாம் எனச்சொன்னார். ரிசர்வ் பண்ணவேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் நானும் சரி என்றுவிட்டேன்.  8.30 க்கு பாண்டியன். ஆனா 8 க்குலாம் வாப்பா னு அழைத்தார்.  சரினு போனா.. பூட்டியிருந்த கம்பார்ட்மெண்ட் க்கு வெளியேக்யூ இருந்தது.  க்யூ நிற்கனும்னா....அது போகுது...போகுது......மதுரையில கிளம்புற ட்ரெயினுக்கு வரிசை அடுத்த ஸ்டேசன் சோழவந்தான் வரைக்கும் நிற்கும் போல..... சரினு நானும் என் சீனியரும் போய் நிற்கிறோம்... இப்ப ட்ரெயின் அன்ரிசர்வ் கம்பார்ட்மெண்ட்ட திறக்குறாங்க..... கேமராவ கட் பண்ணி ஆன் பண்ணா நானும் என் சீனியரும