மதுரை டூ அரியலூர்

ஒரு கட்டுரையில் புகைவண்டியில் செல்லுவது பற்றிச் சொல்கையில் அது பிடிக்காது  என்று குறிப்பிட்டிருந்தேன்.


 எனக்கு ஏன் புகைவண்டி (முதலில் புகைவண்டி னு எழுதுறதுக்கு ட்ரெயின் னு போட்டுக்கிறேன்...தமிழில் எழுதுனா வரிவிலக்கா கொடுக்கப்போறாங்க...)  ட்ரெயின்ல போறது ஏன் பிடிக்காதுனா....அதற்கு ஒரு பிளாஷ்பெக் இருக்கு.


கல்லூரி முடித்து வேலை சேர்ந்ததும் 3 மாதத்தில் சென்னையில் மீட்டிங் என்று அழைத்தார்கள். 
நான் பஸ்ஸில் போகலாம் என என் சீனியரிடம் சொன்னேன். 
அவர் அவ்வளவு தூரம் பஸ்ஸிலா என ட்ரெயினில் போலாம் எனச்சொன்னார்.


ரிசர்வ் பண்ணவேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் நானும் சரி என்றுவிட்டேன்.
 8.30 க்கு பாண்டியன். ஆனா 8 க்குலாம் வாப்பா னு அழைத்தார். 
சரினு போனா..
பூட்டியிருந்த கம்பார்ட்மெண்ட் க்கு வெளியேக்யூ இருந்தது. 
க்யூ நிற்கனும்னா....அது போகுது...போகுது......மதுரையில கிளம்புற ட்ரெயினுக்கு வரிசை அடுத்த ஸ்டேசன் சோழவந்தான் வரைக்கும் நிற்கும் போல.....


சரினு நானும் என் சீனியரும் போய் நிற்கிறோம்...


இப்ப ட்ரெயின் அன்ரிசர்வ் கம்பார்ட்மெண்ட்ட திறக்குறாங்க.....


கேமராவ கட் பண்ணி ஆன் பண்ணா நானும் என் சீனியரும் மட்டும் தான் நிற்கிறோம்...
எல்லா பயல்களும் ஓடுறானுக,....
மறுபடியும் கேமராவ கட் பண்ணி ஆன் பண்ணா என் சீனியரும் ஓடுறாரு....
பழனி....ஓடுறா...ஓடு....போய் இடத்த போடு...
வேற என்ன...ஒடுறவன் கத்துறான்.....
ரெண்டு கையிலும் பை...அதுவும் சுமை...


சினிமா படத்து க்ளைமாக்ஸ்ல கையில பெட்டியோட ஓடுற ஹீரோவா எல்லாத்தையும் ஓவர்டேக் பண்ணி ஓடிப்போய் ஏறுனா...
.நான் லேட்டு....
எனக்கு முன்னாடி ஏகப்பட்ட ஹீரோக்களும் ஹீரோயினும் ஏறியிருக்காங்க....
உள்ள கால் வைக்க முடியல...
.குட்டி ஹீரோக்களும் இருக்காங்க...
.டேய் நீங்களாம் எப்படிடா வந்தீங்க....இடம் பிடிக்க ஜன்னல் வழியா குழந்தைய போட்டாங்களா,,,,


எப்படியோ நம்ம சீனியர் அந்த கம்பார்ட்மென்ட்ல அப்பர் பெர்த் மாதிரி இருக்குறதுல இடம் பிடிச்சுட்டார். 3 பேர் உக்காந்துருகாங்க....என்னையும் சேத்து நாலு பேர்.
நல்லா கவனிங்க மக்களே.....கால தொங்கவிடமுடியாது...சமணங்கால் போட்டு உட்கார்ந்து அப்புறம் கையில கொண்டு போன லக்கேஜ்.
எப்படி அமர்ந்தோமோ அப்படியே தான் இருக்க வேண்டும்.
கால தொங்கவிட்டால் கீழ உக்காந்திருக்கிறவன் திட்டுவான்.
 கால எதிர்தாப்புல வச்சா அங்க உக்காந்திருக்கிறவன் திட்டுவான். 
இறங்கிட்டா இடம் இருக்காது. 
அதுனால அப்படியே....அப்படி அப்படியே


ரமணா படத்துல கட்டிடம் இடிஞ்ச பின்னாடி சிம்ரனும் குழந்தையும் அமர்ந்தமாதிரி ஒரு சாம்பல் கூடு இருக்கும்ல அந்த மாதிரி எக்மோர்ல இருந்தேன். கால விரிக்கவேமுடியல....
இன்னிக்கு கூட்டம் கம்மி தான்னு சொன்ன சீனியர என்னத்த சொல்ல...


இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ட்ரெயின் அதுவும் ரிசர்வ் பண்ணாம போறதே இல்ல.


திருமணம் முடிந்த பிறகு அரியலூரில் மனைவியின் அக்காள் வீட்டிற்குச் செல்வதற்கு ட்ரெயின் தான் எளிது எனச் சொல்லப்பட்டது.
  காலை 7 மணிக்குக் கிளம்பும் வைகை ட்ரெயின் .
 ரிசர்வ் பண்ணாமல் அதுவும்.
அடிக்கடி ட்ரெயின்ல போனா தட்கல் அது இதுனு தெரியும்.


எந்த முயற்சியும் செய்வதற்கு அனுமதிக்காமல் திடீரென கிளம்பினா அப்படித்தானே.


D கோச் என்று ஒன்று இருக்கிறது. அதில் ஏறிக்கோ...நினைச்ச இடத்தில உக்காந்துக்க....னு மனைவி சொன்னாங்க..
டிடிஇ வந்தா...எடுத்த டிக்கெட்ட காமி ஒரு 50 ரூபா கொடு...அவரே நல்ல இடத்த காமிப்பாரு....
சத்தியமா இப்படித்தான் சொன்னாங்க....
டிடி.இ வல்லனா....உக்காந்துக்க...ரிசர்வ் பண்ணவன் வந்தான்னா எந்திரிச்சு வேற இடத்துல உக்காந்துக்க....
அரைகுறையா கேட்டு அடுத்தநாள் ட்ரெயின்ல ஏறிட்டேன்.


அது பெரிய கொடுமை.
அடுத்தவன் சிட்ல உக்காந்திருக்கிறது.
எவன் சீட்டுக்காரன்னு வர்றவன் எல்லா முகத்தையும் பாக்குறது...


நான் இப்படி வர்றவன் போறவன் முகத்தைப் பார்த்துட்டே உட்கார்ந்தேன்.
ரிசர்வ் பண்ணி வந்தவங்கலாம் பணக்காரங்க மாதிரியும் நாட்டுல அப்போதைக்கு இருக்குற அதிகார வர்க்கம் ரிசர்வ் பண்ணி வர்றவங்கதானும், இல்லாதவங்க இந்த மாதிரி D கோச்ல அன்ரிசர்வ் டிக்கெட் எடுத்தவங்கனு தத்துவார்த்த பார்வையா பார்த்தேன்.(..ச்ச்..ச என்னமா எழுதுறேன்..செல்ப் மோட்டிவேஷன்)


டக்குனு ஒரு யூத் ஆசாமி வந்தார்.
டிஷர்ட் ஜீன்ஸ் இயர் போன் காலேஜ் பேக் ஷூ .
மதுரைல கார்ப்பரேஷன் ஸ்கூலில் படிச்சிட்டு அழகர் ஆத்துல இறங்குற திருவிழால தெருவுக்குத் தெரு ஊத்துற ஓசி மோர் பந்தலில் மோர் குடிச்சிட்டு தடாலுனு மெட்ரோ சிட்டிக்கு போயிட்டு  I HATE CROWD னு பாரதிராஜா குரலில் பேசுற தொணி அந்த யூத்.
டிக்கெட் எடுத்திருப்பான்....சென்னைவாசி ஆயிட்டான்ல...
கம்பார்ட்மெண்ட்ல ஏறுனவன் பாக்குறான்....சீட் நம்பர் பாக்குறான்...வரிசையா வர்றான்...
நான் உக்காந்திருக்கிற 56  ம் நம்பரா இருக்குமோ...
நான் அவன பாக்கிறேன்...
இப்ப அவன் என்னைய பாக்குறான்.
எனக்கு எதிர் சீட்டுல உக்காந்துட்டான்...
இப்ப நான் அடுத்தவன பாக்கனும்.
ஒவ்வொருத்தரா ஏறுறாங்க...எல்லாத்தையும் பாக்குறேன்.
என் பக்கத்துல வர்றாங்க ஆனா என் சீட்டு இல்ல,,
ஒரு வழியா ட்ரெயின் கிளம்புச்சு..


ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பாடா...
எனக்கு நிம்மதி.



எனக்கு எதிர்தாப்புல இருந்த யூத் ஆசாமி  எனக்கு பக்கத்து இடத்துல கால் வச்சு நீட்டி சாய்வா காதுல இயர் போன் போட்டு கண்ண மூடிட்டான்...
ரிசர்வ் பண்ணிட்டு வந்தா நம்மளும் சொகுசா தூங்கலாம்.
இப்ப திண்டுக்கல் வந்த்து,.
எனக்கு இப்ப முக்கியமான வேலை.
எவன் என்னைய பாத்துட்டே  வர்றபோறானோ...


 ஒரு லேடி வந்தது...
ஒவ்வொரு சிட்ட பாத்துட்டே வந்தது,
டிக்கெட் கையில் வச்சிருக்கு.
நம்பர தேடுது...
56 ஆ இருக்குமோ..
பக்கத்துல வந்ததும் ஜன்னலோரம் இருக்குற நம்பர பாத்துட்டு என்னைய பாக்குது..
இதுக்கு மேல நம்ம உக்காரக்கூடாது...எந்திரிச்சுரலாம்னு இருக்கேன்
பக்கத்துல வந்து அந்த யூத் கிட்ட சார் எந்திரிங்க இது என் சீட்டுனு சொல்லுச்சே பாக்கலாம்
ஓ...சாரினு  எந்திரிச்சு எனக்கு அடுத்த சீட்டுல போய் உக்காந்தான்
டேய் நீ ரிசர்வே பண்ணலையா...நீயும் என்ன மாதிரிதானா.....
அப்புறம் என்னடா பகுமானமா தூங்குற...முழிச்சிட்டே எல்லார் முகத்தையும் பாருடா னு சொல்லத்தோணுச்சு
பயபுள்ளைக்கு அடுத்தவன் சீட்டுல உக்காந்திருக்கிறோமேனு பயமே இல்ல.


கொய்யாலே....ரிசர்வ் பண்ண மாதிரியெ பில்டப் பண்ணான்யா....
எல்லாம் ஓகே....பகுமானமா கால என் பக்கத்துல வச்சு கண்ண மூடி பாட்ட கேட்டான்யா...அதுதான் ...கொய்யாலே அதுக்கே அவன நறுக் நறுக் னு கேள்வி கேக்கனும்...
இந்த நிகழ்ச்சியும் இனி ட்ரெய்ன்ல போனா ரிசர்வ் பண்ணனும் னு சொல்லிக்கொடுத்தது


 இப்ப ரிசர்வ் பண்ணி போறேன்....
இப்பத்தான் கச்சேரி ஆரம்பம்...


d6 கம்பார்ட்மெண்ட். 24 வது சீட்....ரிசர்வ் பண்ணி ட்ரெயின்ல போறது எனக்கு மெரிட்ல மெடிக்கல்காலேஜ் சீட் மாதிரி.
போய் உக்காந்தேன்.
பக்கத்துல ஒரு பெரிய குடும்பம்.
புதுசா கல்யாணம் பண்ண தம்பதி .
 மாப்பிள்ளையோட அப்பா அம்மா அக்கா அக்கா புருஷன்....அண்ணன் அண்ணி...இத்தனை பேரு..
அனேகமா மறுவீட்டுக்கு போறாங்க...(பகல் கொள்ளைல இந்த விருந்து இருக்கானு தெரியல)


ஜன்னலோர சீட் எனக்கு...
என் பக்கத்துல புது மாப்பிள்ளை..
அப்புறம் அவன் மனைவி...
எதிர்தாப்புல ஒரு பொது ஜனம். அவருக்குப் பக்கத்துல அவன் அம்மா, அப்புறம் அண்ணி..


மணி 6.50. ட்ரெய்யின் டைம் 7.00


ஏன் அண்ணே ஜன்னலோர சீட் கிடைக்கலயா  இது புதுமாப்பிள்ளை..
யாருக்குமே கிடைக்கலயாம்....இது அவன் அண்ணி
இப்ப புது மாப்பிள்ளை என்ன பாக்குறான்...
அனேகமா ஜன்னலோர சீட்ட கேப்பான் போலேயே....


இப்ப ஒரு குழந்தை வந்தது..


".சித்தப்பா."..அது அவன் அண்ணன் குழந்தை.
வாடி குட்டி....சித்தி மடில உக்காரு உன்னை சித்தப்பா போட்டோ எடுக்குறேன்...
(ம்ம்ம்ம்...இவனுக்கு இவன் பொண்டாட்டிய எடுக்கணும்...அதுக்கு அந்த குழந்தைய ஊறுகாய் ஆக்கிட்டான்....)
அந்த குழந்தை அந்தப் புது பொண்ணு மடியில சாஞ்சது...


இவன் போட்டோ எடுத்தான்...
அவன் போட்டோ யார எடுத்தானு ...எதிர்பார்ப்பு கூடுதா.. எனக்கும் தான்..நான் கேமராவ பாத்தேன்


அந்த குழந்தையோட தலைய பாதி வச்சு அவன் புது மனைவிய போட்டோ எடுத்திருந்தான்...(நான் முதலேயே சொன்னேன்ல...இவன் இவன் ஊத்துக்கு அந்த குழந்தையை ஊறுகாய் ஆக்கிட்டான்னு....எனக்கு எப்டி தெரியும் னு கேக்குறீங்களா...எல்லா இடத்துலயும் தப்பு செஞ்சவனுக்குத் தப்பு எங்க நடந்தாலும் தெரியும் மக்களே....எப்டி நம்ம பஞ்ச்)


அப்படி இப்படி னு ஒரு மூணு போட்டோ எடுத்தான்.


திட்டம் போட்டு அவைங்க குடும்பத்துல ஒரு சதி பண்ணி ரிசர்வ் பண்ணிருக்காங்க....அவனோட அக்காவையும் அக்கா புருஷனையும் பக்கத்து கம்பார்ட்மெண்ட்டுக்கு தள்ளி டிக்கெட் எடுத்துருக்காங்க....இது தெரியாம அந்த லூசு பய (அதாங்க அவ அக்கா புருஷன்) வந்தான்....


என்னா தங்கச்சி...உங்க ஊருக்கு எங்கள கூட்டிட்டு போறீயா...


நல்லா பாருங்க மக்களே...கல்யாணம் முடிஞ்சு மறுவீட்டுக்கு பெண் வீட்டுக்கு இத்தன பேரு....அதுலயும் அவ அக்கா புருஷன் மூஞ்சிய பாத்தா..அவன யாரும் கூப்பிடல...அவனா வர்ற மாதிரி இருக்கு....


"அங்க நல்லா சமைச்சு போடும்மா...சமைக்கத்தெரியும்ல...."
"அதுலாம் நல்லா சமைப்பாப்ல..".இது யாருனு தெரியும்ல..நம்ம புது மாப்ள..
அவுகள கேட்டா இவுக பதில் சொல்றாக...
சொல்லிட்டு...மனைவிய பாக்குறான் போல...
அவன் அங்கிட்டு அவன் பொண்டாட்டிய பாக்குறான் ...இங்கிட்டு இவனோட தோள்பட்டை கை எல்லாம் என்னைய அழுத்துது...இதான் உடல்மொழி போல...


மணி 7.05..
.இவைங்க அக்கப்போறுல ட்ரெயின்ன இன்னும் எடுக்கமாட்றாய்ங்க....


இப்ப புது மாப்பிளைக்கு வியர்க்குதாம்...அந்தப் பொண்ணோட ஷால வச்சு முகத்தத் துடைக்கிறான். துடைச்சிட்டு....
என்ன சோப்பு போடுற....அப்டினு கேட்டான்...


இட்லி..பொங்கல் மசால் வடை...
இட்லி ..பொங்கல் மசால் வடை..


ஒரு லூசு பய ஜன்னலோரமா வந்து விக்குறான்....
அந்தப் பொண்ணு என்ன சோப்புனு சொன்னதுக்குள்ள இவன் சவுண்ட்...


"பொங்கல் சாப்டுறீயா..."நம்மாளு...
"புளியோதர கட்டி கொண்டு வந்திருக்கு...எதுக்கு பொங்கல்லு...".இது அவன் அம்மா...இப்படி சொன்னா நல்லாருக்காது....தமிழ் சீரியல் மாதிரி சொல்லனும்னா அந்தப் புது பொண்ணோட மாமியாரு.
இவர் உடனே அமைதியாயிட்டார்.
மகனே ...உன் பொண்டாட்டி மட்டும் பொங்கல் வேணும்னு கேட்டுருக்கணும்...நீ பொங்கல் தாண்டீ...மாப்ளேய்.....(நம்ம மைண்ட் வாய்ஸ்)


மணி 7.15 ட்ரெயின் கிளம்புது....


உடனே இவைங்க புளியோதரைய ஓபண் பண்றானுக..
புதுமாப்பிள்ளை கைய கழுவ போயிட்டு வந்து என்னைய ஒரு இடி அந்தப் பொண்ண பல இடி இடிச்சு உக்காருறாரு...
கையில இருக்குற ஈரத்தை ஷால வச்சு தொடைக்கிறாரு....
அந்தப்பொண்ணை பரிமாறச்சொல்றாங்க...
புளியோதர வைக்குது. 
ஒரு கரண்டி...
இரண்டாவது கரண்டி....
போதும் றான்...
அந்தப் பொண்ணு நிப்பாட்டிருச்சு...
"ஆனா நீ வச்சா இன்னும் சாப்பிடுவேன்...."இது நம்மாளு...(இந்தா டயலாக்குலாம் எங்க இருந்து புடிக்குறாய்ங்கனே தெரியல...புளியுறாய்ங்க)
அந்தப் பொண்ணு சிரிக்குது...
இவன் சாப்பிடுறான்...
இடது கையால தட்ட புடிச்சிருக்கான்....
அவன் முழங்கை..என் கழுத்துக்கு வச்சிருக்கான்....
ஒரு வாய் வலது கையால வைக்குறதுக்குள அவன் இடது முழங்கை என் நெஞ்சில இருந்து கழுத்து வர வந்து இடிக்குது...
டேய் உன் பொண்டாட்டி அந்தப் பக்கம் உக்காந்திருக்கா...னு என் மைண்ட் வாய்ஸ்...
நீ புளியோதர சமைப்பியா....னு கேக்குறான்


மசால் வடை ..பிரெட் ஆம்லேட்...
மசால் வடை..பிரெட் ஆம்லேட்


இப்ப ஒருத்தன் உள்ளேயே விக்குற சவுண்ட்...
அந்தப் பொண்ணு என்ன சொன்னாலோ தெரியல...
இவன் குலுங்கி குலுங்கி சிரிக்கிறான்......மன்னிக்கவும்...என் கழுத்துல குத்தி குத்தி சிரிக்கிறான்....


மறுபடியும் என் மைண்ட் வாய்ஸ் ....டேய் உன் பொண்டாட்டி அந்தப்பக்கம் இருக்கா...


அவன் அம்மா....அதான் அந்தப் பொண்ணோட மாமியாரு...
ஏம்மா நீயும் சாப்பிடு...

இல்ல அப்புறம் சாப்டுறேன்....அந்தப் பொண்ணு..
ஏய்..என் தட்டுல சாப்டுவியா....இது நம்மாளு...
டேய்...புளியோதரையிலருந்து புளி வழியுது...தொடச்சுக்க...(நம்ம மைண்ட் வாய்ஸ் தாங்க...)


சாப்டு முடிச்சு கை கழுவிட்டு வந்தான்....
ஏம்மா..உன் ஷால்ல கொடுமா...அவன் கைய துடைக்கட்டும்...அப்பப்ப நம்ம மைண்ட் வாய்ஸ் நல்லா வொர்க் பண்ணும்...
சார் இப்ப குனிஞ்சு முகத்த கைய வாய இப்டி ஷால்லால துடைக்கிறாரு போல...நம்மள ஜன்னலோரமா அமுக்கிட்டாரு....


இப்ப அவைங்க அக்கா புருஷன் வந்தான்..


."என்ன சாப்பாடு..( நான் சொல்லல ...இவன் சாப்டுறதுக்குத்தான் வந்திருக்கான்னு)"
புளியோதர மாமா....நம்மாளு...
"ஏன் தங்கச்சி டிபன் லாம் உங்க ஊருல தான் போடுவியா..."அந்த லூசு பய புதுப்பொண்ணுட்ட கேக்குறான்...(டேய்...உன் அக்க்ப்போறு தாங்காமத்தான் உன்னைய அடுத்த கம்பார்ட்மெண்ட்ல போட்ருகாய்ங்க...இது தெரியாம டிபன்னாம்....)


அந்தப் பொண்ணு எதுவும் சொல்லல...
உடனே நம்மாளு..அதுலாம் டிபன் நல்லா பண்வாப்ல....
"எதுமா நல்லா சமைப்ப..." இது அந்த லூசு பய
இப்பயும் அந்தப் பொண்ணு அமைதியா இருக்கும்னு நான் நினைச்சேன்...ஆனா அந்தப் பொண்ணு " உப்புமா.." னு பதில் சொல்லுச்சே பாக்கலாம்...
"உப்புமா அதுலாம் நல்லா பண்வாப்ல....".இது யாரு சொன்னானு நான் சொல்லவே தேவையில்ல....
இப்ப போன் எடுத்தான் செல்பி எடுக்கப் போறான்....
இடது கையால என் தலையில் ஒரு இடி....கேமராவ பிடிக்கிறானாம்...
நான் பாத்தேன்...பாஸ் நீங்க வேணும்னா ஜன்னலோரம் உக்காந்திகிறீங்களா...னு கேட்டு அவனோட அந்த அப்பாவி புது மனைவி அப்புறம் அவன், அதுக்கப்புறம் பக்கத்து வரிசைல இருந்த அவன் அக்கா வ மாத்தி நான் பக்கத்து வரிசைக்குப் போய் உக்காந்துட்டேன்.


திருச்சி வந்திருச்சு....
ஷ்ஷ்ஷ்ப்பா என்னா இடி இடிக்கிறான்யா....


திருச்சி ல ஒரு குடும்பம்.. ஷாத் ஷாத்  ஐயங்கார் குடும்பம்.


குடும்பத் தலைவன் ஒரு நாமம்.
குடும்பத் தலைவி ஒரு சந்திர பிறை வடிவ பொட்டு
13 வயது இருக்கும் ஒரு பையன்
7 வயது இருக்கும் இன்னொரு பையன்..
பையன்கள் நெத்தியிலும் நாமம்.


பையங்கள் அப்புறம் மாமி மூணு பேரும் எதிர்தாப்புல....
மாமா என் பக்கத்துல அதுக்குப் பக்கத்துல ஜன்னலோரத்துல யாரோ ஒரு பொதுஜனம்..


ட்ரெயின் காவிரி ஆத்தத் தாண்டுது...


இப்ப இவைங்க கூத்த பாக்குறேன்


சார்ஜ் எடுத்தாச்சா?
எடுத்தாச்சு...
அந்த பத்திரிக்கை...?
எடுத்தாச்சு....
பச்சை துண்டு...?
மடிச்சு வச்சாச்சு....
கேள்வி கேட்டதுலாம் மாமி...
பதில் சொன்னதுலாம் மன்னிக்கனும்....வேலை செஞ்சிருக்கிறதுலாம் மாமா....


மாமா இப்ப எந்திரிக்கிறார்...
இப்ப எதுக்கு எந்திரிக்கிறீங்க.....
டபக்குனு அந்த மாமா உக்காந்துட்டாரு.....
டேய்...மாமா...என்னாடா பொசுக்குனு உக்காந்துட்ட...(நல்லவேள என் பொண்டாட்டி என் கூட வரல....வந்திருந்தா பாத்துட்டு என்னைய ஒரு பார்வை பார்த்திருப்பா...அவ சொன்னதும் அவ புருஷன் டக்குனு உக்காந்துட்டான் பாருங்க னு கேட்டிருக்க மாட்டா...ஏன்னா எங்க பக்கத்து வீட்ல ஒருத்தன் அவன் பொண்டாட்டிய தினமும் சாய்ங்காலம் வெளிய கூப்பிட்டு போறானு எங்கிட்ட கேட்டா..." மாலினிய அவ புருஷன் டெய்லி வெளிய கூப்டு போறானு , நீங்களும் தான் இருக்கீங்களே....
அதுக்கு நான் சொன்னேன்...." நான் கூட ரெடி தான்...ஆனா அவ என் கூட வருவாளா...னு..இந்த நிகழ்ச்சிக்குப் பின்னாடி என் பொண்டாட்டி ரொம்ப உசாரு...)


இப்ப மாமா க்கு வருவோம்...


மொபைலை மாமா நோண்டிக்கிட்டு வர்றாரு.....
அந்தம்மா கையில இருக்குற பைய இந்த மாமாகிட்ட கொடுத்துச்சு...
மாமா அந்தப் பைய மேல இருக்குற லக்கேஜ்ல போட எந்திரிச்சாரு....
"அங்க ஏன் வைக்கிறீங்க...."
இல்ல மேல வச்சிருவோம்...
"வேணாம் னு சொல்றேன்ல..".னு கொஞ்சம் சத்தமா அதட்டுச்சு...
டபக்குனு மாமா மறுபடியும் உக்காந்துட்டாரு....




இப்ப அந்த ஜன்னலுக்கு மேல இருக்குற க்ளாம்ப்ல மாட்ட எந்திரிக்கிறாரு....
"நான் சொல்லிட்டே இருக்கேன்...வேணாம் னு...".னு இப்ப மறுபடியும் ரொம்ப சத்தமா கத்தி அதட்டுச்சு...
டேய்..மாமா..சும்மா உக்காருயா...அடிச்சிரப்போறா உன் பொண்டாட்டி...இது நம்ம மைண்ட் வாய்ஸ் ...
மாமா உக்காந்துட்டு..."கையிலேயே வச்சிட்டு வர்றதுக்கு அதுல தொங்கவிடலாம்ல....."
"நான் வேணாம்னு சொல்றே ன்......திரும்ப திரும்ப......"னு ஒரு பார்வை பாத்துச்சு....


பிரெட் ஆம்லெட்..மசால் வடை
பிரெட் ஆம்லெட்..மசால் வடை....


மாமா அத விக்குறவன பாக்குறாரு...
விக்குறவன் மாமா வ பாத்தான்...


மசால் வடை...சூடா...மசால் வடை....
மசால் வடை...சூடா...மசால் வடை....
என்ன டெக்னிக்கா விக்குறான்யா.....


இப்ப மாமா அந்த பைய கீழ வைக்கப் போனாரு....
நீங்க ஒண்ணுமே பண்ண வேணாம்...அத கொடுங்க...னு விடுக்குனு அந்தப் பைய மாமி புடுங்கிருச்சு....
மாமி புடுங்குனது மாமாவோட பைய மட்டுமில்ல...
மாமாவோட எல்லாத்தையும்....


ச்ச்ச...தமிழ்நாட்டோட ISO.  முத்திரை குத்துன ரெண்டு புருஷங்கள பாத்துட்டேன்...நல்லவேள இத நான் மட்டும் பாத்தேன்...என் பொண்டாட்டி பாக்கல.....


டீ...காப்பி.....டீ....காப்பி....
"ஏம்மா...தங்கச்சி..டீ நல்லா போடுவியா..".இது யாருனு தெரியுதா...பக்கத்து வரிசைல புளியோதர குடும்பத்து லூசு பய...அக்கா புருஷன்.
"அதுலாம நல்லா போடுவாப்ள...".இது யாருனு தெரியுதா.....நம்மாளு தான்...


"டீ சாப்பிடுறீயா...."
இப்பத்தான தோசை சாப்டீங்க அதுக்குள...என்ன டீ....
மேல சொன்ன உரையாடல் யாருடையதுனு நான் சொல்லத் தேவையில்ல....
ஆனாலும் மாமா...நீ ரொம்ப பாவம் யா...
எங்கெங்கேயோ கஷடப்படுற தமிழன மீட்கனும்னு எம்.பி குழு போகுது...
இங்க ஒரு தமிழன் கண்ணுக்கு முன்னாடி உக்காந்திருக்கான்...


பிரெட் ஆம்லெட்...மசால் வடை....(அதே ஆளு)
மசால் வடை..சூடா..மசால் வடை...(அதே ஆளு)


"உங்க ஊருல மசால் வடை பேமஸ் போல...."( அந்த லூசு பய)
"இவுங்களும் தான்....."(அந்த இன்னொரு லூசு பய....மாப்ள...)


நீங்க சென்னையா....மாமா என்னைய கேக்குறாரு...
அரியலூருங்க.....
ஏம்மா..சார் அரியலூராம்...இறங்கினதும் இங்க வந்திருயா....
எதுக்கு..வசதியா அடி வாங்க.....ஓய்..மாமா..உமக்கு ஜாஸ்தி ஓய்...இது நம்ம மைண்ட் வாய்ஸ் தாங்க.....
அரியலூர் பக்கத்துல வர்றப்போகுது.....
நான் எந்திரிச்சு பை எடுக்குறேன்....
"இந்தப் பைய அந்த இடத்துல வச்சிரவா...."நம்ம மாமா....
ம்கும்......இவன் சென்னை இறங்குறதுக்குல ஒரு போடு வாங்காம இறங்கமாட்டான் போல....ஆனாலும் மாமா உன் பொண்டாட்டிய பாத்தா எனக்கே பயமா இருக்கு...உனக்கு தைரியம் ஜாஸ்திதான் ஓய்......


அரியலூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது...











கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8