இடுகைகள்

ஜூன், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சத்தியசோதனை!

அங்குமிங்கும் செல்வோரில் அங்கும் செல்வோருண்டு! அது பழைய புத்தகக் கடை! எண்பது ரூபாய்க்கெல்லாம் கம்பனின் இராமாயணம் கிடைக்கிறது! என்ன செய்வது? அங்கும் சீதை தீக்குளிக்கத்தான் வேண்டும்! அதிகாரவரம்பின்றி எல்லா அதிகாரங்களையும் முப்பது ரூபாய்க்கெல்லாம் வழங்குகிறார் வள்ளுவர்! கம்யூனிசத்தில் அழுக்குப் படிந்துள்ளது! மூலதனத்தில் ஒட்டு போட்டிருக்கிறார்கள்! வெறுமனே பார்த்துவிட்டு நகர்ந்தோரிடத்தில் கேட்கும் காசிற்கே "சத்தியசோதனை" தருவதாய்ச் சொல்கிறார்கள்..... சத்தியசோதனை!

பால்யக்காதலிகள்

பால்யக்காதலிகள் பரஸ்பரமானவர்கள் அல்லர்! என் இதயக் கல்லுக்கு முதல் உளி செய்து கொடுத்தவர்கள் அவர்கள்! என் கடிகார முட்களை முன்னோக்கியே நகர்த்திக்கொண்டிருந்தவர்கள் அவர்கள்! தாஜ்மகாலை படம் வரைந்து பாகம் குறிக்கச் செய்த மும்தாஜ்கள் என் பால்யக்காதலிகள்! சில தெருக்களின் நீள அகலங்களை அங்கலாய்க்கச் செய்தவர்கள் அவர்கள்! மிட்டாய் துண்டுகளைத் துண்டாடி அதன் பாதியைப் பகிரப் பயிற்றுவித்தவர்கள் என் பால்யக்காதலிகள்! கோயில்விழா இரவு கச்சேரிகளில் இசையை மீட்டுக் கொடுத்தவர்கள் அவர்கள்! கொடுக்காமல் புதைக்கப்பட்ட சில வாழ்த்து அட்டைகளில் இன்னமும் வாழ்பவர்கள் என் பால்யக்காதலிகள்! என் சாளரங்களை வேவு பார்த்த தேவதைகள் அவர்கள்! வெயில் நேரத்து மழையாய் என் வாசல் நனைத்துச் சென்ற மழைக்காயங்கள் என் பால்யக்காதலிகள்! காலியாயிருக்கும் பக்கத்து இருக்கைகளைக் கண்களால் குடிகொள்ளச் செய்தவர்கள் அவர்கள்! மேகம் விலகிய பின்னும் கலையாத வானவில் கூட்டம் என் பால்யக்காதலிகள்! பழைய பூங்காக்கள் கோயில்களின் எனக்கானப் புராதனங்கள் அவர்கள்! என் பால்யப்புகைப்படத்தின் நிழற