இடுகைகள்

பிப்ரவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - கருத்து.

" ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" நூலை முன் வைத்து....... ஏதோ ஒரு மூலையில் நமக்கு இப்பொழுது மிகவும் பரிச்சயப்பட்ட ஒரு வசனமாகிய ' ஒருவனை ஏமாற்ற வேண்டுமானால் முதலில் அவனது ஆசையைத் தூண்ட வேண்டும் ' என்பது போன்ற ஓர் அடிப்படைத் தத்துவத்தை அதற்குப் பின்பான நம் சுயநலத்தை நிலைநாட்டுவது மற்றும் மனிதன் - மனிதன்  அல்லது ஒரு சமூக இன்னொரு சமூக நம்பிக்கைத் துரோகம் என்பது ஒரு கட்டத்தில் நாகரிகம் வளர வளர நாடு விட்டு நாடு பரவுதல் அல்லது பரப்புதல் அல்லது தன் பலத்தை அடுத்த ஆள் மீது திணித்து, தான் மட்டும் வாழ்தல் என்ற அரக்கத்தனம். என்றோ நடந்தது இன்று வரலாறு. இன்று நடப்பது இன்னொரு வரலாறு. ஆனால் 'நாகரிகம் வளர வளர' என்ற ஒரு சொற்றொடர் கூட போதுமானதாய் இருக்கிறது நம்மை நாமே சீர் குலைத்து சீர் அழிய. இதை ஒரு வரலாறாகப் படித்துக்கொண்டிருக்கிறோம். ஆனாலும் நடந்து முடிந்தக் கதையாக இல்லாமல் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை இப்பொழுது நம்மால் முழுதாய் கண்கள் அகல மூளை அகல பார்க்க முடிகிறது. தமிழில் இரா.முருகவேள் மொழிபெயர்த்த ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய '

சைரன் மெலிதல்..பாகம் 3

முதலில் ஒரு டிஸ்க்ளைமர் போர்ட் வைத்துவிடுவோம். நான் எந்த டயட் முறைகளுக்கும் எதிரானவன் அல்ல. இந்தப் பதிவில் எந்த டயட் முறைகளிலும் டயட்டை ஃபாலோ செய்பவர்கள் தான் ஒரு டயட்டிஷியனாகவே நினைத்துக்கொள்கிறார்கள் என்ற பகடி முழுக்கக் கற்பனையானதே. நீங்க எந்த டயட்டிலும் இருங்க. சைவமா இருங்க. வெறும் கீரை ஸ்மூதிய குடிச்சு இலை தழைகள திண்ணு தலைல கொம்பு வளருற வரை திங்குற க்ரூப்ல கூட இருங்க... பறக்குறதுல ஆகாயவிமானத்தையும், ஊர்றதுல புகைவண்டியையும் தவிர மற்ற எல்லாத்தையும் வயித்துக்குள்ள போடுற பரிசுத்த அசைவமாக் கூட இருந்துக்கோங்க, நான் கறிக்கொழம்பு ஊத்திக்குவேன். ஆனா கறி தொடமாட்டேன்ற தெய்வப்பிறவி டயட்டாக் கூட இருந்துக்கோங்க. எந்த டயட்டையும் ஃபாலோ பண்ணுங்க. நான் உங்க எந்த க்ரூப்புக்கும் எதிரானவன் இல்ல. இந்தப் பதிவு எழுதக் காரணம், நான் மெலிவதைப் பார்த்தவர்கள் அல்லது மெலிந்ததைப் பார்த்த சில ட்ரெண்டிங்கா இருப்பவர்கள் கேட்ட முதல் கேள்வி , ' பாஸ் , நீங்க பேலியோ வா". எரிச்சல் தரக்கூடிய இந்தக் கேள்விக்காகத்தான் நான் எழுதவே யோசித்தது. ஏனெனில் பேலியோ டயட் என்பது இப்பொழுது ட்ரெண்டிங்க், அது ஒரு ஃ

சைரன் மெலிதல் I I

நடந்தால் எடை குறைவதற்கான வாய்ப்புகள் கம்மினு சொன்னது மாதிரி அப்ப நடக்கத்தேவையில்லையா னு கேக்குறாங்க. நம்ம ஒரு விளையாட்டு விளையாடுவோமா. உங்க எல்லார்ட்டயுமே ஆண்ட்ராய்டு ஃபோன் இருக்கலாம். சேம்சங்க் இப்ப எல்லா மாடலிலும் s-health னு ஓர் ஆப் வச்சிருக்கான். அது இல்லாதவங்க பெடோமீட்டர் மாதிரியான ஆப் களை டவுன்லோடு பண்ணி அதுல நீங்க நடக்குற ஸ்டெப்ஸ கவுண்ட் பண்ற மாதிரி ஆன் பண்ணிக்கோங்க. அதாவது நீங்க நடக்குற ஒவ்வொரு ஸ்டெப்பையும் அதன் அதிர்வு வச்சு அது கணக்குப் பண்ணிக்கனும். உடனே தம்பி ஃபோன எப்ப பாத்தாலும் நான் கையிலேயே வச்சிருக்கமுடியுமானு கேப்பீங்க. நீங்க ஒரு ரூம்ல இருந்து இன்னொரு ரூம் போறப்ப வேல பாக்குறப்ப உங்க சீட்ல இருந்து உங்க மேலாளர் ரூம் போறப்பனு கையில வச்சு பாருங்க. ஒரு நாள் முழுக்க எவ்வளவு நடக்கமுடியும் னு நினைக்கிறீங்க. நல்ல ஹெல்தியான நடை என்பது காலை முதல் இரவு வரை 15000 ஸ்டெப்ஸ் வந்திருக்க வேண்டும். நான் ஒரு மெடிக்கல் ரெப். உங்கள் சொலவடையில் நாயா அலையும் வேலை என்பார்கள். அதைப் பற்றியக் கவலையில்லை. நான் அந்த ஆப் டவுன் லோட் செய்த நாளில் வேலை நிமித்தமாக ஏழு வெவ்வேறான இடங்களில் ஏ

சைரன்...மெலிதல் part 1

.விட்ட இடத்துல இருந்து ஆரம்பிக்கலாம் மக்களே. நடந்தால் உடல் எடை குறையும்னு யாரு கிளப்பி விட்டாங்களோ தெரியல.அவனவன் உடல் எடை கூடிருச்சேனு நினைச்ச அடுத்த மாத்திரத்தில் கேமராவ கட் பண்ணி ஆன் பண்ணா அடுத்த நாள் நடக்க வர்றாங்க. வருஷத்துல முதல் ஐந்து நாளைக்கு அந்த வருஷத்துல சபதம்னுலாம் எடுத்து உடல் எடைய குறைக்க நடக்குறானுக. அப்புறம் ஆஃப் ஆயிராங்க.  சரிங்க நடக்கலாம். எப்படி நடப்பது. உங்கள் வீட்டு சமையலறையில் இருந்து பூஜை அறைக்குச் செல்வது போல்..நடக்கலாமா.. சிலர் காலையில் நடக்க வருகிறார்கள். அது நடைப் பயிற்சி அல்ல. உலா. மெதுவாக. மெல்ல மெதுவாக. இப்படி நடப்பதனால் உங்கள் எடை குறையும் நம்புகிறீர்களா.. இதில் நம் சில அறிவு ஜீவிகள் உண்டு. மூணு நாட்கள் நடப்பார்கள். பிறகு உடலை எதிரே இருக்கும் பெரிய கண்ணாடியில் பார்ப்பார்கள். எவ்வளவு நடந்தாலும் உடல் எடை குறையுறதில்லை. அப்புறம் எதற்கு நடக்கனும் என்று முடிவு செய்துவிடுவார்கள். அதற்கு அந்த ஐன்ஸ்டீன் கள் வரிசைப்படுத்தும் காரணங்கள். 1. ஒரு மாசமா நடக்குறேன். குறையல.இனியும் குறையுமா என்ன? 2. பக்கத்துவீட்டு ராமசாமி ஒரு மாசமா நடக்குறாரு. தொப்பை குறையவே இல்ல.

சைரன் ..மெலிதல் ..அறிமுகம்

போன வருடம் எனக்குத் தெரிந்ததை உபயோகப்படுறமாதிரி எழுத நினைத்து அதை ஒரே பதிவாக எழுத முடியாமல் போனது . பிறகு தொடர்ந்து எழுத நினைத்தேன் . அது ஒரு சீரிஸ் ஆக வந்ததை உணர்ந்து அதற்கு சைரன் எனப் பெயரிட்டு எழுதி வந்தேன் . என் நண்பர்கள் அதைத் தானாக வந்து பாராட்டினார்கள் . சிலர் அது பயனுள்ளதாக இருந்தது எனக் கூடச் சொன்னார்கள் . எப்பொழுதும் லைக் போடும் பிரபலங்கள் பிரயோஜனமான ஒரு பதிவிற்கு வேண்டுமென்றே லைக் போடாமல் கடந்தார்கள் . சிலர் நானென்ன மருத்துவனா எனக் கூடக் கல்லெறிந்தார்கள் .  ஆனாலும் தொடர்ந்து எனக்குத்தெரிந்ததை பொழுதுபோக்காக எழுதிப் பார்த்தேன் அவ்வளவே . இப்பொழுது வேறொரு கருத்தை எழுத நினைத்தால் இரண்டு பதிவுகளுக்குப் போகும்படியாகத் தெரிகிறது . ஆதலால் புதிய தலைப்பை வைத்துக்கொள்ள கொஞ்சம் கர்வம் துடிக்கிறது . பழக்கப்பட்ட சைரன் ஐயே எடுத்து அப்டேட்டட் வெர்ஷனாய் தொடர இன்னும் ஆசையாக   இருக்கிறது . ஆதலால் ஒரு மூன்று பதிவுகளுக்கு இப்பொழுது பேச இருப்பதால் சைரன் .. மெலிதல் என நானே பெயர் வைத்துக்கொள்கிறேன் .