சைரன்...மெலிதல் part 1

.விட்ட இடத்துல இருந்து ஆரம்பிக்கலாம் மக்களே.
நடந்தால் உடல் எடை குறையும்னு யாரு கிளப்பி விட்டாங்களோ தெரியல.அவனவன் உடல் எடை கூடிருச்சேனு நினைச்ச அடுத்த மாத்திரத்தில் கேமராவ கட் பண்ணி ஆன் பண்ணா அடுத்த நாள் நடக்க வர்றாங்க. வருஷத்துல முதல் ஐந்து நாளைக்கு அந்த வருஷத்துல சபதம்னுலாம் எடுத்து உடல் எடைய குறைக்க நடக்குறானுக. அப்புறம் ஆஃப் ஆயிராங்க.
 சரிங்க நடக்கலாம். எப்படி நடப்பது. உங்கள் வீட்டு சமையலறையில் இருந்து பூஜை அறைக்குச் செல்வது போல்..நடக்கலாமா..
சிலர் காலையில் நடக்க வருகிறார்கள். அது நடைப் பயிற்சி அல்ல. உலா. மெதுவாக. மெல்ல மெதுவாக. இப்படி நடப்பதனால் உங்கள் எடை குறையும் நம்புகிறீர்களா..
இதில் நம் சில அறிவு ஜீவிகள் உண்டு. மூணு நாட்கள் நடப்பார்கள். பிறகு உடலை எதிரே இருக்கும் பெரிய கண்ணாடியில் பார்ப்பார்கள். எவ்வளவு நடந்தாலும் உடல் எடை குறையுறதில்லை. அப்புறம் எதற்கு நடக்கனும் என்று முடிவு செய்துவிடுவார்கள். அதற்கு அந்த ஐன்ஸ்டீன் கள் வரிசைப்படுத்தும் காரணங்கள்.

1. ஒரு மாசமா நடக்குறேன். குறையல.இனியும் குறையுமா என்ன?
2. பக்கத்துவீட்டு ராமசாமி ஒரு மாசமா நடக்குறாரு. தொப்பை குறையவே இல்ல. நமக்கும் குறையப்போதா என்ன.
3. இது ஜீன் பாஸ். எங்க வம்சாவளிக்கு உடம்பு குறையாது பாஸ்.
4. காலைல எந்திரிக்கிறதுக்கே லேட் ஆகுது. வேலை இருக்கு. நடக்க ஆசை பாஸ். பட் டைம் இல்ல.
5. இது லேடிஸ் ஸ்பெஷல். ஹார்மோன் பிரச்சினை தம்பி. டெலிவரிக்குப் பின்னாடி தான் இப்படி ஆயிட்டேன். அதுக்கு முன்னாடி ஸ்ரேயா ரெட்டிக்குப் பின்னாடி கூட நான் ஒளிஞ்சுக்குவேன். அவ்வளவு ஒல்லி. அப்புறம் வேலை அதிகமா இருக்கு அதுனால நடக்க முடியல. அதான் மெலிய முடியல.

இது தான் கேட்டக் காரணங்கள்.
உண்மையில் நடப்பதால் உடல் எடை குறையுமா என்ன?
குறையலாம். ஆனால் உங்கள் உடல் எடை குறைவதற்கான முதல் முக்கியமான பயிற்சி நடைப்பயிற்சி என்பது அல்ல. அது ஒரு சப்போர்ட்டிவ் எக்ஸ்பெரிமெண்ட் அவ்வளவுதான்.

இந்த புகைப்படம் பாருங்கள்( கடைசில என்னையவும் ஃபோட்டா போடவச்சுட்டானுகளே)



ஒரு பக்கம் ப்ளூ சொக்கா போட்டபடி இருக்குற அந்த ப்ரவுன் தம்பி நான் தான். நல்லா பார்த்தா நீங்க ஜூம் பண்ணாமலே ஜூம் பண்ண மாதிரி புஸ் புஸுனு இருப்பேன்.
அதே இன்னொரு பக்கம் பஞ்சத்துல அடிபட்ட மாதிரி ஒரு பய நிப்பாப்புடி. அதுவும் நான் தான்.

நாப்டால் விளம்பரத்துல எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேனு ஒரு ஆங்கில துணை நடிகருக்கு கரகர குரல்காரனை வச்சு டப்பிங்க் பண்ணுற விளம்பரம் மாதிரி படிக்காதீங்க.

இந்த புகைப்படத்தில் காணப்படும் அன்பான நல்ல பண்பான இந்தப் பையர் பல  வருடங்களாக நடந்தவர். தினமும் காலையில் நடந்தவர் தான். ஆனால் உடல் எடை குறைந்தபாடில்லை தான்.

நடைப் பயிற்சி என்பது உங்கள் கொழுப்பு அளவைக் கட்டுப்படுத்த உதவும். அதன் மூலமான எடை குறைப்பு ஓரளவு சாத்தியம் ஆனால் நீங்கள் விரும்பும் அளவு அனுஷ்கா அளவோ, சூரியா, விக்ரம் அளவோ சட்டுனு குறைக்க முடியாது.
மேலை நாடுகளில் ஓர் ஆராய்ச்சி செய்தார்கள். தினமும் நடப்பவர்கள் அவர்களது அலுவலகத்தில் காணப்படும் சிக்கலானப் பிரச்சினைகளுக்கு வெகு எளிதாகத் தீர்வு காண்கிறார்கள் என்பதாம். இதற்குப் பின்பு இருக்கும் சூத்திரம் ஒன்று தான்.
நடப்பதனால் இரத்த ஓட்டம் சீராகிறது. மூளைக்கு இரத்த ஓட்டம் சீராகப் பாய செரிபிரல் செல்கள் தங்களோட கடமையைச் சிறப்பாகச் செய்கின்றன. உங்கள் வாட்ச்மேன் க்கு நீங்கள் சரியாக ஊதியம் தரவில்லை என வைத்துக்கொள்ளூங்கள். என்னாகும். வேலை செய்யமாட்டான்.
அது போல் தான் அந்தச் செல்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இல்லையென்றால் அவை சாப்பிடக்கூடிய ஆக்ஸிஜன் சரியாகக் கிடைக்காது.
நீங்கள் நடக்க இரத்த ஓட்டம் சீராக ஆக்ஸிஜன் அவைகளுக்குக் கிடைக்க ஆரம்பிக்க அவை தன்னோட கடமைகளைச் செய்கிறது. விளைவு மூளையின் சிந்தனையின் திறனில் புதிய எண்ணங்கள் தோன்றும்.
அது தான் இதயத்திற்கும். அதனால் இதய நோய் வருவது குறையும்.

இதைப் படித்துவிட்டு எங்க ஊர்ல பத்துவருடமா நடந்தவன் பைத்தியம் பிடிச்சு அலையுறான் என்றும், ஹார்ட் அட்டாக்ல செத்தவன் நடக்கும்போதே மண்டைய போட்டான் என கேட்டை ஆட்ட வேண்டாம்.

ஆக, நடைப் பயிற்சி என்பது ஓரளவிற்கு வேலை செய்யும். ஆனால் நாம் உடல் எடை குறைக்கும் அளவிற்கு வேலை செய்யுமா..பார்க்கலாம்.

நடப்பதிலும் சில டிப்ஸ் உண்டு.நாங்கள் ஒரு பூங்காவில் நடக்கிறோம். ஒருவர் இர்க்கிறார். 2 கிமீஐ 40 நிமிடம் நடக்கிறார். நான் இருக்கிறேன். 3.6 கிமீ ஐ 24-25 நிமிடங்களில் நடக்கிறேன்.
ஒவ்வொருவருக்கும் வேக அளவீடுகள் மாறுபடலாம். ஆனால் சராசரியாக ஒரு கிமீ என்பதை எந்த வேகமும் இல்லாமல் நீங்கள் 15 நிமிடங்களில் நடக்கிறீர்கள் என்றால் நீங்கள் இலக்கு வைத்துக்கொள்ளுங்கள். மறுநாள் அது 13 நிமிடம் என்று.
நீங்கள் நடப்பது என்பது சாதாரணமானது அல்ல. அதில் எத்தனை கலோரிகளை எரிக்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.
தினமும் ஒரு கிமீ தூரத்தை இருபது நிமிடம் நேரத்துக்கு பேர் நடப்பது அல்ல. உலா. நகர்வலம்.
சராசரியாக 13 நிமிடம் என்பது ஓரளவிற்கு நல்ல வேகம்.

ஆக, நடந்தால் எடை குறையாது. குறைய உதவி செய்யும் .

சரிப்பா...ரொம்ப பேசுற...நடந்தா எடை குறையாதுன்ற...அப்புறம் எடைய எப்படி குறைக்கிறதுனு சொல்லித்தொலைனு தானே கேக்குறீங்க...

ஹா..ஹா...

மெலியுறோம்....காத்திருங்கள் சைரன் மெலிதல் 2  நாளை.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....