இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மருந்து விற்பனை பிரதிநிதியாகிய நான்...

சில நாட்களுக்கு முன் ஒரு மருத்துவர் வீட்டில் துப்பாக்கிமுனையில் ஒரு கொள்ளை சம்பவம் நடக்கிறது. விசாரித்த சில நாட்களில் அச்சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளைக்காரர்கள் பிடிபடுகிறார்கள். துப்பாக்கி சப்ளை செய்த சஸ்பெண்ட் ஆன ஒரு காவல்துறை அதிகாரி கவர்னர் பாதுகாப்புப் பணியில் இருக்கும் ஒரு காவல்துறை அதிகாரி என வட்டம் வருகிறது. கொள்ளைக்காரர்களுக்கு அந்த மருத்துவரிடம் பணம் இருக்கும் என்றும் அவர் வீட்டையும் காண்பித்துக்கொடுத்தவர் ஒரு மருந்துவிற்பனைபிரதிநிதி. இப்படித்தான் செய்தி வெளிவந்துள்ளது. பொதுவாகவே மருந்துவிற்பனைபிரதிநிதி களைப் பார்த்தாலே மக்களுக்கு ஏகப்பட்ட அவல உணர்ச்சிகள் உண்டு. மருத்துவர்களுக்கு டீல் போடும் சூத்திரதாரர்கள் நோயாளிகள் காத்திருக்க அவர்கள் உள்ளே சென்று வெகுநேரம் வெட்டி பேச்சு பேசுபவர்கள். வெயிலிலும் மழையிலும் நாயாய் அலைபவர்களென ஓர் அவல உணர்வோடு இங்கு பார்ப்பவர்கள் உண்டு. இது மிகைப்படுத்தப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால் அது உங்கள் பெருந்தன்மை. உண்மையில் இந்த மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் என்பவர்கள் யார். அயல்நாட்டு பிரதிநி

கொதிநிலை

ஒரு சிறிய பாத்திரத்தில் கொதிக்க வைத்தப் பாலை ஊற்றிப் பிறகு பிரத்யேகமான டீத்தூளை அதில் தூவி தேவைக்கேற்ப சீனி சேர்த்து நல்ல கொதிநிலைக்குக் கொதிக்க வைத்து சிறிதளவு புதினா வெட்டிவேர் வகைகளை மேலே தூவி சில நொடிகளில் அதை இறக்கி வடித்து டீ க்ளாஸில் ஊற்றி பாய் கடையின் மாஸ்டர் நீட்டினால் காத்திருக்கும் கைகள் எனக்கு எனக்கு என நீண்டு எடுக்கும். அப்படி அந்தக் கடை பிரசித்தம். உண்மையில் அந்தக் கடை பிரசித்தமா இல்லை அந்தக் கடையின் டீ பிரசித்தமா எனக் கேட்டால் அந்தக் கடையின் டீ தான் பிரசித்தம். பாய் கடை டீ என்றால் தனி கிக்குத்தான் என்று சொல்லிக்கொண்டே வந்து டீ பருகுவார்கள். அன்று அவனுக்குக் கூட அந்தப் பகுதியில் தான் வேலை. அந்தப் பகுதியில் அவன் வேலைக்கு வந்துவிட்டால் பாய் கடையில் டீ அருந்திவிட்டுத்தான் செல்வான். ஒரு விற்பனையாளனுக்கு டீ சாப்பிடுவது என்பது ஒரு பழக்கம் அல்ல. சமயத்தில் அதுவும் ஒரு வேலை போலத்தான். எதற்காக டீ சாப்பிடுகிறோம் என்று தனித்து உணராதபடிக்குக் கூட அவன் டீ சாப்பிட்டு இருக்கிறான்.  வேலை சரியாக நடக்கவில்லை என்றால் , களைப்பாக உணர்ந்தால், போகும் வழியில் பிடித்த நண்பர்களைப் பார்த்தா

உண்ணாமேட்...

சரஸ்வதி பூஜை டைம்ல பல்லடத்துல ஒரு கல்யாணம். எங்க பெரியப்பா பொண்ணு , அக்கா மகனுக்கு. முதல் நாளே அங்க போய் அம்மா அண்ணன் அண்ணினு லக்கேஜ்களை இறக்கிவிட்டுட்டு அப்படியே கோயம்புத்தூர்ல இருக்குற ஒரு ஃப்ரண்ட் வீட்டுல போயி தங்கிட்டா என்னனு யோசிச்சேன். எனக்குச் சொந்தக்காரைங்க மத்தில கொஞ்சம் நல்ல பேரு. ஆள் அண்டா பிராணி அப்புறம் மானே தேனே னு போட்டு நம்மள புகழ்வாய்ங்க. அதுலாம் இருக்கட்டும். நானும் கல்யாணத்திற்கு வரேனு நம்ம வீட்ல சொல்வோம்னு சொன்னேன். பயபுள்ளைக நம்ப மாட்டுறானுக. டேய் சத்தியமா நானும் சொந்தக்காரன் தான்யா கல்யாணத்திற்கு வரேன் யா னு சொல்லி பேக்கேஜ்ல் ஜாயின் பண்ணிக்கிட்டேன். கல்யாணத்திற்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி எதுக்கும் ஃப்ரண்ட் கிட்ட கன்ஃபர்ம் பண்ணிக்குவோம்னு சொல்லி வச்சிருந்தேன். அந்த நாள் வந்தது.; ஒட்டு மொத்த குடும்பமும் இவன் வருவானானு இருந்தது போயி என் தம்பி வருவான் என் தம்பி வருவானு எங்க அண்ணன் பி ஆர் ஓ வேல பாக்க பல்லடத்துல இருந்து எங்க அக்கா ஃபோன்.. தம்பி ..நீ வர்வேல... என்னக்கா இப்புடி கேட்டுட்ட..என் ஃப்ரண்ட்டட்ட கேக்கனும்... நான் எப்படிக்கா சொல்றதுனு ரோபோ சங்கர் வாய்

வங்கி

டொட்டடொய்ய்ங்க்(எஸ் எம் எஸ் சத்தம்) அதாவதப்பட்டது என்னன்னா நாங்க இந்தியன் வங்கி அகில இந்தியாலேயே டாப்டக்கர் சர்வீஸ் கொடுக்குறைவங்க ப்ளா..ப்ளா...னு ஒரு எஸ் எம் எஸ். கொஞ்சநாள் கழிச்சு இன்னொன்னு டொட்டடொய்ய்ங்க்.(எஸ் எம் எஸ் தான்)  இந்தியன்வங்கி இப்ப சிப் பொருத்தப்பட்ட ஏடிஎம் கார்டுகளை லாஞ்ச் பண்ணிருக்கு. பயன்படுத்தி உய்யவும்ம்னு ஒரு எஸ் எம் எஸ். (இப்பத்தான் சிப் கார்ட் க்கே வர்றீங்களாய்யா..) இப்படி இந்த இரண்டு மாசத்துல ஏகப்பட்ட டொட்டடொய்ய்ங்க் வந்தது. அதுல ஒண்ணு உங்கட்ட இருக்குற ஏடிஎம் கார்ட் சிப் கார்டா இல்லாம பழைய கார்டா இருந்ததுனா அதை உங்க வங்கியோட கிளையில கொடுத்து மாத்திக்கோங்கனு ஒண்ணு வந்திருந்தது.   என்னடா இவ்வளவு மெசேஜை அனுப்புறாய்ங்க எதுக்கும் ஒரு எட்டு போய் வாங்கிரலாம்னு  முந்தா நேத்து மங்களகரமா போனேன்.  இந்த அண்ணாநகர் இந்தியன் வங்கி கிளைல எனக்கு அக்கவுண்ட் ஆரம்பிச்சது கிட்டத்தட்ட 2005 2006 வாக்குல. சம்பளக் கணக்கா ஆரம்பிச்சது. சம்பளக் கணக்குனுறனாலயும் இன்டர்னெட் பேங்கிங்க் வசதி இருக்குறனாலயும் பாஸ்புக் எண்டரி போன்ற சமாச்சாரங்கள் தேவைப்படல. அதுனால இந்தியன் வங்கிக்கும் எனக

ஃபீனிக்ஸ்

அடுப்பில் பால்பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அம்மாவை படுக்கையில் இருந்து எழுப்பி சுவற்றில் சாய்ந்திருக்குமாறு அமர வைப்பதற்கு கொஞ்சம் தாமதமாகி விட்டது. வேகமாக அடுப்படிக்குள் ஓடி வந்து அடுப்பை அணைத்துவிட்டு பாலை இறக்கினாள். வெள்ளாவியாய் பாலிலிருந்து ஆவி பறந்தது போல் இருந்தது. பால் பாத்திரத்தை நகர்த்தியதும் வெள்ளையில் மஞ்சள் பூத்த அந்தப் பாலின் நிறம் சூடானது தெரிந்தது. சற்று பால் ஆறுவதற்குள் பாத்ரூமிற்குள் சென்று குழாயை மெதுவாகத் திறந்து அதனடியில் பெரிய வாளியை வைத்தாள். அம்மாவிற்கு காஃபி போட்டுவிட்டு வருவதற்கும் அந்த வாளி நிறைவதற்கும் ஏற்றபடி அந்தக் குழாயைச் சன்னமாகத் திறந்துவைத்தாள். இப்பொழுது அவளுக்கு நேரம் இல்லை. அம்மா ஒரு சர்க்கரை நோயாளி. சர்க்கரை அதிகமாகி ஒரு காலில் விரலை வெட்டி விட்டார்கள். ஒரே மகள் என்றால் அம்மாவிற்கு யார் இருக்கிறார்கள். அப்பா டிவிஎஸ் ஆலையில் மேற்பார்வையாளர். இந்த டிவிஎஸ் ஆலையில் வேலைபார்ப்பவர்களுக்கு விசுவாசம் எப்படித்தான் வருமோ தெரியாது. அந்த ஊழியர்களின் வீட்டில் எல்லாம் அந்த தாத்தா பாட்டியின் படம் வைத்துவிடுகிறார்கள். ஓவர் டைம் என்றால் முகம் சுளிக்காது ப

தி நேரேட்டர்..

ஒரு வாரத்திற்கு முன் எனக்குத் தெரிந்த financial consulting கம்பெனி முதலீடு சம்பந்தமான ஒரு கூட்டம் நடத்துவதாக மெயில் அனுப்பியிருந்தார்கள். ஏற்கனவே  ஒரு வருடத்திற்கு முன் இது போல் கூட்டம் நடத்தி அதற்கு நான் போகவில்லை. ஆர்வமும் இல்லை. இந்த முறை அந்த அலுவலகத்தின் மேலாளரே தொடர்புகொண்டு வரும்படி இரு முறைஅழைத்திருந்தார். இன்னொன்று பேச அழைத்திருந்த சிறப்பு விருந்தினர்களில் ஒருவர் பஜாஜ் ஃபின்செர்வ் மற்றும்  ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் முன்னாள் தலைமை அதிகாரியாக இருந்தவர். சரி போய்த்தான் பார்ப்போமே என்று கூட்டம் ஆரம்பித்த அரைமணி நேரம் கழித்து உள் நுழைந்தேன். கிட்டத்தட்ட ஹவுஸ்ஃபுல் ஹால் அது. எண்பது வரை ஆடியன்ஸைத் திரட்டியிருந்தார்கள். கிட்டத்தட்ட பாதிபேர் ஓய்வு பெற்றவர்கள். எனக்குத்தெரிந்தே வாக்கர்ஸ் க்ளப் உறுப்பினர்கள் நான்கைந்து ரிட்டையர்ட் வங்கி மேலாளர்கள் இருந்தார்கள். அந்த நிறுவனம் வங்கியோடு இணைந்து மியூச்சுவல் இன்வெஸ்ட்மெண்ட் லாம் பகிர்வதால் பல நபர்களை அப்படி அழைத்து வந்திருந்தார்கள். முதலில் பேசியவர் ஹெச்டிஎஃப்சி மேலாளர். சுருக்கமாக அந்தக் கூட்டத்தின் சாராம்சம் மியூச்சுவல் ஃபண்டில் இன்வெஸ்ட்ம