உண்ணாமேட்...

சரஸ்வதி பூஜை டைம்ல பல்லடத்துல ஒரு கல்யாணம். எங்க பெரியப்பா பொண்ணு , அக்கா மகனுக்கு. முதல் நாளே அங்க போய் அம்மா அண்ணன் அண்ணினு லக்கேஜ்களை இறக்கிவிட்டுட்டு அப்படியே கோயம்புத்தூர்ல இருக்குற ஒரு ஃப்ரண்ட் வீட்டுல போயி தங்கிட்டா என்னனு யோசிச்சேன்.
எனக்குச் சொந்தக்காரைங்க மத்தில கொஞ்சம் நல்ல பேரு. ஆள் அண்டா பிராணி அப்புறம் மானே தேனே னு போட்டு நம்மள புகழ்வாய்ங்க. அதுலாம் இருக்கட்டும்.
நானும் கல்யாணத்திற்கு வரேனு நம்ம வீட்ல சொல்வோம்னு சொன்னேன்.
பயபுள்ளைக நம்ப மாட்டுறானுக.
டேய் சத்தியமா நானும் சொந்தக்காரன் தான்யா கல்யாணத்திற்கு வரேன் யா னு சொல்லி பேக்கேஜ்ல் ஜாயின் பண்ணிக்கிட்டேன்.
கல்யாணத்திற்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி எதுக்கும் ஃப்ரண்ட் கிட்ட கன்ஃபர்ம் பண்ணிக்குவோம்னு சொல்லி வச்சிருந்தேன்.
அந்த நாள் வந்தது.;
ஒட்டு மொத்த குடும்பமும் இவன் வருவானானு இருந்தது போயி என் தம்பி வருவான் என் தம்பி வருவானு எங்க அண்ணன் பி ஆர் ஓ வேல பாக்க பல்லடத்துல இருந்து எங்க அக்கா ஃபோன்..

தம்பி ..நீ வர்வேல...
என்னக்கா இப்புடி கேட்டுட்ட..என் ஃப்ரண்ட்டட்ட கேக்கனும்... நான் எப்படிக்கா சொல்றதுனு ரோபோ சங்கர் வாய்ஸ்ல ச்சை..சண்முகசுந்தரம் வாய்ஸ்ல ஒரு பெர்ஃபாமன்ஸ் போட்டு வச்சேன்.
என் ஃப்ரண்ட்டுக்கு ஃபோன் பண்ணி,

டேய்...நாளைக் கழிச்சு வந்திருவோம். நாங்க மூணு பேரும். அம்மா அண்ணன் அண்ணிலாம் பல்லடத்துல இறக்கி விட்டு வந்திருவோம். நீ இருப்பேல..உங்க வீட்ல எதுவும் பிடித்தம் இல்லாட்டி வெளிய தங்கிக்கவா..
(இதுல ஒரு கிளைக்கதை இருக்கு., எல்லா வீட்லயும் மாமியாருக்கும் மருமகளுக்கும் தான் ஆகாது. ஆனா என் நண்பன் கதைல மாமியாருக்கும் மருமகனுக்கும் தான் லடாய். அதைச் சீண்டி அவன் படுற சந்தோசத்தைப் பார்ப்பதுல இந்த எளியனுக்கும் ஓர் ஆனந்தம்)

நான் வரலாமா உங்க வீட்ல தங்கிக்கலாமானு ஒங்க மாமியார்ட்ட பெர்மிஷன் வாங்கிட்டியா னு தாங்க கேட்டேன். பயபுள்ள பத்து நிமிஷம் சந்திரமுகியா ஆட்டம் லாம் போட்டுட்டுத்தான் நார்மலுக்குத்தான் வந்தான்.

ஆக, சரஸ்வதி பூஜைக்கு நானும் வரேனு சொல்லி பிரகடனம் செஞ்சாச்சு. எத்தனை மணிக்குக் கிளம்பனும். காலைல ஷார்ர்ப்பா 8 மணிக்குனு சொன்னப்ப எங்க அண்ணன் லைட்டா...எட்டு மணிக்காஆஆஆஆஆஆஆஆ னு கேட்டான். அதாவது பின்னாடி போட்ட அந்த எட்டு ஆ..ஆ...வும் கொட்டாவி. (பயபுள்ளைக அங்க எட்டு ஆ..இருக்கானு எண்ணிப்பார்க்குங்க..)
சரி 9 மணி.
கேமராவ கட் பண்ணி ஆன் பண்ணா கிளம்புற அன்னைக்கு மணி 9.30.
அரை மணி நேரம் லேட்டு.
கிளம்புறோம்.
என் ஃப்ரண்ட் ஃபோன்.
கிளம்பிட்டியா...
கிளம்பிட்டேன்.
எப்ப வருவ..
2 மணிக்கு பல்லடத்துல லன்ச் சாப்பிட்டு கிளம்புவேன். உன் வீட்டுக்கு ஒருதடவை தான் வந்திருக்கேன். அட் ரஸ் சொல்லு...
வா...வா...சொல்றேன்.

மணி 11.
ப்ரண்ட் ஃபோன்.
எங்க இருக்க...
திண்டுக்கல்டா..
இப்பத்தானா...
ஆமா ..டீ சாப்பிட்டோம். உங்க வீட்டுக்கு அட் ரஸ் தெரியாது. அது அவுட்டர் ஏரியால . இப்ப டெவலப் ஆயிருக்குமா..எப்படி வரது..
வா..வா..சொல்றேன்.

அவன் இப்பத்தானானு கேட்டதும் எனக்குள்ள பால் வாக்கர் எந்திரிச்சு உக்காந்து ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்துக்காரை உண்டாக்கிட்டான். திண்டுக்கல் ட்டூ ஒட்டன்சத்திரம்ன்றது சர் சர்னு வருவானுக. ஒரே லாரி தான் ஓவர் டேக் பண்ணேன். பக்கத்து சீட்டுல உக்காந்திருந்த எங்க அண்ணன், அவன் பையன்ட்ட பாருடா...சித்தப்பா ரைட் சைட் லயே போறாரு..கோட்டுக்கு இங்குட்டு போகச்சொல்லுடானு வார்னிங்க் ஸ்லைட் வாசிச்சான்.

மணி 12.30
ஃ;ப்ரண்ட் ஃபோன்
எங்க இருக்க
தாரா புரம்
என்ன சார் இவ்வளவு லேட்டா வர்றீங்க.
நான் இயர் ஃபோன் போட்டு இருந்தேன். அவன் கேட்டதும் பக்கத்துல எங்க அண்ணனை பாத்துக்கிட்டேன்.
மணி 1.30. பல்லடம் பக்கத்துல கிராமம். கரையான் புதூர் தாண்டி.
மதியம் சாப்பாடு அக்கா வீட்டுல. முட்டைகோஸ் பொரியல். வெங்காயம் மிதக்க மிதக்க முருங்கக்காய் போட்ட புளிக்கொழம்பு. அப்புறம் அப்பளம்னு எனக்குப் பிடிச்சதா பாத்து பாத்து எங்க அக்கா பண்ணிருக்காங்களேனு நினைச்சு மனசுக்குள்ள நானே எஸ் ஏ ராஜ்குமார் ம்யூசிக்ல ஒரு லலா..லல்லா..லலாவ பாடவிட்டா, எங்க அக்கா வந்து , தம்பி, சாம்பார் நல்லாருக்காப்பானு கேக்குது.
என்னது சாம்பாரா..ங்கொய்யாலே இது புளிக்கொழம்பு இல்லையா..எஸ் ஏ ராஜ்குமார ஓட ஓட விரட்டிவிட்டுட்டு...எங்க அக்காவை பார்த்துக்கிட்டேன்.

ஃப்ரண்ட் ஃபோன்.
எங்க இருக்க..
டேய் கிளம்ப போறேன். நீ இன்னும் உன் வீட்டுக்கு எப்படி வரனும்னு சொல்லல..ஒங்க மாமியாரு வரக்கூடாதுனு சொல்லியிருச்சா..
முடிஞ்சது கதை. வாட்ஸப்ல லொக்கேஷன் ஷேர் பண்றேன். நான் இருக்குற இடத்தை. அதைப் பார்த்துட்டு வா னான்.
வாட்ஸப் ஓபன் பண்ணா ஒட்டு மொத்த கோவையும் இத்துனுண்டா வந்திருந்தது.
அதுல ஒரு சிவப்புக்கலருல என் ஃப்ரண்ட் இருக்குறது. ஜூம் பண்ணா ஆதிப்பாளையம் னு ஒரு ஏரியா காமிக்குது. பேக்கரி, பெட் ரோல் பங்க், எலக்ட் ரிக்கல் கடைனு எல்லாத்தையும் ஆங்கிலத்துல காமிக்குது.
எங்க போர் கீரு னு வந்தா சீனாக்காரன் வந்து எந்த இடத்தையும் தடவ வேண்டாம் போல..கூகுள் மேப் போட்டு பட்டனைத் தட்டிவிட்டா போதும் போல.
என் ஃப்ரண்ட்  எங்க இருக்கானு ஜூம் பண்ணா உண்ணாமேட் னு ஒரு இடம் காமிக்குது.
மேப் வழி காமிக்குது. கிளம்புறேன்.
என் ஃப்ரண்ட கூப்பிட்டு நான் கிளம்பிட்ட்டேனும் கோவை ஏற்கனவே சில பகுதிகள் வந்திருப்பதனால் உன் ஏரியா எங்க இருக்குனு கேட்டேன். சரவணம்பட்டி பக்கத்துலனு சொன்னான்.
ஓரளவிற்கு ஏரியா தெரியும்ன்றனால ஷார்ட் கட் எங்கனு கேட்டா காரணம்பேட்டை க்கிட்ட ரைட்ல கட் பண்ணிரு. லொக்கேஷன் அனுப்பிருக்கேன். அது கைட் பண்ணும் . பாரு னு சொன்னான்.
ஆமாடா உண்ணாமேட் னு ஒரு ஏரியால காமிக்குது னேன்..
உண்ணாமேடா...தெரியல..அதை பாத்துட்டே வா. ஏதாவது பக்கதுத் தெரு வா இருக்கும்னான்.
போயிட்டே இருந்தேன்.
அவன் சொன்ன காரணம்பேட்டை. ஆனா அவன் சொன்ன இடத்துல மேப் ரைட்ல வளையச்சொல்லல.
மேப் நேரா போகச்சொல்லுச்சு.
போனேன். ஓரளவிற்கு கேரளாக்கு எப்படி போகனும்னு தெரியும். அதுனால பாதை மாறி பாலக்காடு மட்டும் போயிரக்கூடாதுனு தெளிவா இருந்தேன்.
ஸ்டியரிங்க் அடில ஃபோனை வச்சுக்கிட்டு பாத்துட்டே ஓட்டுனேன். நமக்கு ஏரியா புதுசுனா அட் ரினலின் கொஞ்சம் அதிகமா சுரக்கும்னு அன்னைக்குத்தான் கண்டுபிடிச்சேன்.
சூலூர் தாண்டி ஒரு மும்முனைச் சந்திப்பு. சூலாயுதம் மாதிரி மூணா போகுது. மேப்பைப் பார்த்தால் ஒரு நெளிவு வளைஞ்சு போகுது. ஓகேனு நானும் நெளிவா எது இருக்குனு பார்த்தா ஒரு டிப்பர் லாரி முன்னாடி நின்னுக்கிட்டு நெளியறதை காட்டமாட்டுறான். வலது பக்கம் டாப்ல மலபார் நகைக்கடை தமண்ணா ஃப்ளக்ஸ்.
மேப்ல நெளியுறத பாக்குறதா இல்ல ஃப்ளக்ஸ்ல பாக்குறதான்ற குழப்பத்துல ஒரு ரோட்டுல போனேன்.
கூகுள் மேப் ஒரு மெடிக்கல் ரெப்க்கான மேனேஜர் மாதிரி. ஒரு ப்ளான் ல இருந்து சொதப்பி வந்துட்டா கூச்சப்படாம அடுத்தப் ப்ளானைக் காண்பிக்கும்.
விடலையே..நானும் சரியான ரூட்ல தான் போறேனு போய்ட்டு இருந்தேன்.
மெயின் ரோட்டுல இருந்து ஒரு இடத்துல வளைஞ்சது. கிராமத்துக்குப் போற ரோடு.
உண்ணாமேட் ரோடு. அது என்ன மேட்...பீள மேட் னு இங்கிலீஸ்ல சொல்வானுகளே அப்படியா.. வண்ணாரப்பேட்..அது மாதிரி போல..
வண்டி சந்து பொந்தா போகுது.
ஆள் அரவம் இல்லாம அந்த ரோட்டுல எங்க கார் மட்டும் போகுது.
ஒரு சின்ன பகுதில ரொம்ப நெருக்கமா இடது பக்கம் வலையுறமாதிரி கூகுளாண்டவர் காண்பிக்க, நானும் வளைஞ்சா அது ஒரு முட்டுச்சந்து.
அந்தச் சின்ன சந்துல இருந்ததே அஞ்சு வீடு. எல்லாப் பயலும் காரை வெளியே நிப்பாட்டிருக்கானுக. இன்னொரு பக்கம் வாசலுல மரம் செடி னு வளர்த்துருக்காங்க. அச்சுபிடிச்சாப்புடி ஒரு கார் மட்டும் தான் போக இடம் இருக்கு.
இதுலாம் ஏன் சொல்றேனா..நான் ரிவர்ஸ் எடுத்து நீங்க பார்த்தது இல்லையே.
ஒட்டன் சத்திரம்ரோட்டுல உக்காந்திருந்த பால் வாக்கரை புடணில தட்டி அனுப்பிவிட்டு ஷாத் ஷாத் நான் உக்காந்திருந்தேன்.
முன்னாடி போயி பின்னாடி போயி முன்னாடி போயி பின்னாடி போயினு நான் அல்லல் படுறதுக்குள்ள கூகுளாண்டவர் ஸ்பீக்கர்ல அவரோட பொண்டாட்டி யூ டேக் டைவர்ஷன் அன்ட் யூ டர்ன் அன்ட் கோ 50 மீட்டர்னு பேசிட்டு இருக்கு.
அப்பாடா...ஒரு வழியா வண்டிய அந்த முட்டுச்சந்துல இருந்து வெளிய எடுத்துப் பார்த்தா மேப் அடுத்த வழியக் காண்பிச்சது.
வண்டிய நிப்பாட்டி ஒரு அயர்ன் காரர்ட்ட உண்ணாமேட் எப்படி போறதுனு கேட்டேன்.
அவர் பேந்த பேந்த னு முழிச்சார்.
இன்னும் 20 கிமீனு மேப் காண்பிச்சது.
சரி வேற வழி இல்லனு கூகுளை நம்பி போனேன்.
அடுத்தச் சந்துல இரண்டு வளைவு இருந்தது. மேப் வளைய சொல்லுச்சு. எந்த வளைவுனு பாத்து மெதுவா வளைஞ்சேன். பின்னாடி வந்த மோட்டர் பைக் பையன் என் ஸ்டியரிங்க் எதுவும் ஸ்ட் ரக் ஆச்சோனு பாத்துட்டு போனான்.
ஒரு வழியா ஃப்ரண்ட் போன் பண்ண சில லேண்ட் மார்க் சொல்றப்பத்தான் தெரிஞ்சது. நான் ரூட் மாறிட்டேனு.
அது எங்கனு கரெக்டா புடிச்சான் பாயிண்ட். நான் தமண்ணா பாத்த இடத்துல தான். பாதை நெளிஞ்சு போற இடத்துல நான் நெளிஞ்சு வளைஞ்சிருக்கேன்.

டென்ஷன் ல மேப் காட்டுற வளைவு தெரியல சரி....
அந்த ஆதி பாளையம் இருக்கே...அது அத்திப்பாளையமாம். அந்த கூகுள் பன்னாடை ATHIPALAYAM னு காட்டுச்சு. ஒண்ணும் பிரச்சினை இல்லை. ஏன்னு கேட்டா சீனாக்காரனைக் குழப்ப மோடி பண்ண ப்ளான் டி இதுனு சொல்வானுக.

ஒரு வழியா வீட்டுக்கு வந்துட்டேன். இந்த ஏரியா பேர் உண்ணாமேட் டானு கேட்டேன்.
இல்லையே அப்படினு அவன் சொன்னான்.
நான் மேப்பை கொஞ்சம் உத்துப் பார்த்தேன் அது UNNAMED.
அன்னேம்ட் டாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....