வங்கி


டொட்டடொய்ய்ங்க்(எஸ் எம் எஸ் சத்தம்)
அதாவதப்பட்டது என்னன்னா நாங்க இந்தியன் வங்கி அகில இந்தியாலேயே டாப்டக்கர் சர்வீஸ் கொடுக்குறைவங்க ப்ளா..ப்ளா...னு ஒரு எஸ் எம் எஸ்.
கொஞ்சநாள் கழிச்சு இன்னொன்னு
டொட்டடொய்ய்ங்க்.(எஸ் எம் எஸ் தான்)
 இந்தியன்வங்கி இப்ப சிப் பொருத்தப்பட்ட ஏடிஎம் கார்டுகளை லாஞ்ச் பண்ணிருக்கு. பயன்படுத்தி உய்யவும்ம்னு ஒரு எஸ் எம் எஸ். (இப்பத்தான் சிப் கார்ட் க்கே வர்றீங்களாய்யா..)
இப்படி இந்த இரண்டு மாசத்துல ஏகப்பட்ட டொட்டடொய்ய்ங்க் வந்தது. அதுல ஒண்ணு உங்கட்ட இருக்குற ஏடிஎம் கார்ட் சிப் கார்டா இல்லாம பழைய கார்டா இருந்ததுனா அதை உங்க வங்கியோட கிளையில கொடுத்து மாத்திக்கோங்கனு ஒண்ணு வந்திருந்தது.
  என்னடா இவ்வளவு மெசேஜை அனுப்புறாய்ங்க எதுக்கும் ஒரு எட்டு போய் வாங்கிரலாம்னு  முந்தா நேத்து மங்களகரமா போனேன்.
 இந்த அண்ணாநகர் இந்தியன் வங்கி கிளைல எனக்கு அக்கவுண்ட் ஆரம்பிச்சது கிட்டத்தட்ட 2005 2006 வாக்குல. சம்பளக் கணக்கா ஆரம்பிச்சது. சம்பளக் கணக்குனுறனாலயும் இன்டர்னெட் பேங்கிங்க் வசதி இருக்குறனாலயும் பாஸ்புக் எண்டரி போன்ற சமாச்சாரங்கள் தேவைப்படல. அதுனால இந்தியன் வங்கிக்கும் எனக்கும் உள்ள ஒரே தொடர்பு ஏடிஎம்மைப் பயன்படுத்துவதோடு சரி. உள்ளுக்குள நுழையுறதே இல்ல.  அதுவும் அங்க முழுக்க ஐ ஏ எஸ் கலெக்டர் வேலைக்கு ட்ரை பண்ணவன் ஃபுல்லா இங்க அதே நினைப்புல வேல பாத்துட்டு இருக்கான். நமக்கு செட் ஆகாது.
கடைசியா போனது நான்கு வருடத்துக்கு முன்னாடி டீ மேட் அக்கவுன்ட் ஆரம்பிக்கனும் இந்தியன் வங்கி இன்டர்நெட் பேங்கிங்க் இருப்பதனால் அவைங்களோட இன்ட் பேங்க் என்ற அமைப்பில் டீ மேட் அக்கவுண்ட் ஆரம்பிச்சா பணம் ட்ரான்ஸ்ஃபர் பண்ண வசதியா இருக்கும்னு தேடி இந்தக் கிளைல போய் கேட்டென். மே ஐ ஹெல்ப் னு ஒரு டெஸ்க் இருக்கும். அங்க வழக்கம் போல ஆள் இல்லன்றனால 2வது கவுண்டர்ல் இருந்த ஒரு லேடி ஆபிஷர் ட்ட கேட்டேன் (லேடி ஆபிஷரைக் கிண்டல் பண்றேன்னு பெண்ணீயவியாதிகள் கொடி பிடித்து கேட்டை ஆட்டவேண்டாம். இவ்விடம் எல்லா ஆபிஷர்களையும் பால் பாகுபாடு பார்க்காதகிழித்துதொங்கவிடப்படும்)
மேடம்  இன்ட் பேங்க் எங்க இருக்கு.
இதான் அதுனு சொன்னது.
இல்ல மேடம் டீ மேட், ட்ரேடிங்க் பண்ணுற அமைப்பு.
8வது கவுண்டர் னு சொல்லுச்சு..
என்னடா இது இவ்வளவு பெரிய அமைப்பை ஒரு கவுண்டர் ல அமுக்கிட்டானுகனு பார்த்தா அந்த அம்மா என்னைய அந்தக் கவுண்டர்ல விசாரிக்கச்சொல்லிருக்கு. அங்க போனேன்.
சார்...
ம்...(சார் ஒரு ரிசர்வ் டைப் போல அதிகம் பேசமாட்டார் போல)
இண்ட் பேங்க் னு டீ மேட் ப்ரான் ஞ்ச் எங்க இருக்கு சார்..
இப்பத்தான் நிமிர்ந்து பார்த்தார். நான் அவரைப் பார்த்தேன். இது என்ன மணி ரத்னம் படமா. வசனம் இல்லாம சும்மா பாத்தே கதைய சொல்ல...
சொல்லுங்க னார்
அந்த டீ மேட் ட்ரேடிங்க் பிராண்ச் னு கேட்டேன்.
அதுலாம் தெரியாது சார்னு குனிஞ்சுக்கிட்டார்.
வந்துட்டேன். அப்புறம் இணையத்துல தேடுனா, அந்த ப்ராஞ் நான் போன வங்கியோட கிளை இருக்குற மாடில தான் இருந்தது. அதைக் கூட அவைங்களுக்கு சொல்ல வலிச்சது. அப்ப போனது. அடுத்தவாட்டி ஆதார் கார்டை கொண்டு வந்தப்ப இரு வருடத்துக்கு முன்னாடி போனது.
அடுத்து இப்பத்தான் போறேன்.
இந்தவாட்டி மே ஐ ஹெல்ப் கவுண்டர்ல ஆள் இருந்தாப்புடி.
அண்ணே ஏடிஎம் கார்ட மாத்தனும்.
8வது கவுண்டர் சார் ட்ட போங்க.

அங்க ஐம்பது வயது மதிப்புள்ள ஒருத்தர் இருந்தார். கொஞ்சம் கருப்பு. அதுல பழுப்பு நிறம். கலந்தாப்புடி மாநிறம்.
நல்லா சிரிச்ச முகமா, கண்களுல குளுமையா பாத்து வணக்கங்க என்ன விசயம்ங்க அப்படினு கேட்டாருனு சொல்லனும்னு தான் நானும் பாக்குறேன். ஆனா வந்தவர் நான் ஏழாவது படிக்குறப்ப பயந்து பயந்து நடுங்குன பி ஈ டி சார் அந்தோணி மறு அவதாரத்துல வந்த மாதிரில இருந்தார்.
கையில பிரம்பு மட்டும் தான் இல்ல. ஊர் சிவகாசியானு தெரியல வெடிச்சுட்டே இருந்தார். முகத்தைப் பார்த்தே அவருக்கு பைல்ஸ் இருக்கானு கண்டுபிடிக்குற டாக்டர்க இருந்தா அவரைப் பார்த்து கன்ஃபர்ம் பண்ணனும்.
அவ்வளவு தீபிளம்பா பேசினாப்புடி.
சார்.
நிமிர்ந்து பார்த்தார்.
விஷ் பண்றேன்
தலையாட்டுறார்
ஏடி எம் கார்ட மாத்த சொல்லி எஸ் எம் எஸ் வந்திருக்கு.
சரி..(சரினா..என்னத்த சொல்றது)
அதை மாத்தனும் சார்.
ஒரு தடவை தலையாட்டுனார். பக்கவாட்டுல இருக்குற ஃபைல எடுத்து ஃபார்ம்ம்மை தேடுனார்.
நம்ம நேரம் அந்த ஃபார்ம் இருக்குமா...இருக்காது தானே
அட்டெண்டரைக் கூப்பிட்டு அந்த ஃபார்ம் எங்கப்பா எடுக்குறீங்க ஒரு கத்து கத்துனார்.
ஆபிஷர் ஃபார்ம் விசயத்துல ஃபார்ம்ல இருக்காருபோல.
ஒரு ஃபார்ம்மை எடுத்துட்டு
உங்களுக்கு பாஸ்புக் இருக்கா னு கேட்டார்
இல்ல சார்
பாஸ்புக் இல்லாம எப்படி அக்கவுண்ட் ஓபன் பண்ணிங்க...எப்ப பண்ணது..
இல்ல சார் இது சேலரி அக்கவுண்ட். அப்ப தரல. கம்பெனில இருந்து ஆரம்பிச்சது.
ஒரு பார்வை பார்த்தார்.
சரி இந்த ஃபார்ம்ல டிக் அடிச்சுக்கொடுங்க. டூப்ளிகேட் பாஸ்புக் வேணும்னு ஆப்ஷன்ல டிக் அடிங்க னு கொடுத்தார்.
நான் ஃபார்மை வாங்கிட்டு பாஸ்புக் இருந்தாத்தான் கார்ட் மாத்துவீங்களா  சார்னு கேட்டேன்.
ஆபிஷர் அதுக்குள்ள அடுத்த வாடிக்கையாளர் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார். அவர் ஒரு நகைக் கடனைத் திருப்பி அடைச்சுட்டு நகையை மீட்க வந்தவர்.
நான் கேள்விய கேட்டுட்டு நிண்ட்டுட்டே இருந்தேன். அந்தாளு அடகு வச்ச நகைக்கானக் கடனை அடைச்சுட்டு மீட்க நிண்டுட்டே இருந்தார்.
நிமிர்ந்து என்னைப் பார்த்தவர் ஃபார்மை படிங்க சார். எல்லாத்தையும் கேட்காதீங்கனு கோபப்பட்டார்.
இப்ப நான் என்ன தப்பா கேட்டுட்டேனு கோபப்படுறானு நினைச்சுட்டு ஃபார்மை நிரப்புனேன்.
பாஸ்புக் வேணும்னு ஒரு டிக்
கார்டு வேணும்னு ஒரு டிக். பக்கத்துல ஃபோட்டோ அட்டாச் பண்ணு னு போட்டு இருந்தானுக. நல்லவேள இவைங்க எப்ப ஒத்த ராத்திரில பணம் லாம் செல்லாது , புது நோட்டு வேணும்னா இதுலாம் கொண்டுவா னு சொன்னானுகளோ அப்பல இருந்து ஆதார் கார்டு பான் கார்டு வோட்டர் ஐடி ஃபோட்டோ அது இது னு தினா படத்துல ஒரு சீன்ல அஜித் தன் உடம்புல பல இரும்ப எடுக்குற மாதிரி ஒரு பர்ஸ் ஃபுல்லா பணம் இருக்கோ இல்லையோ நான் பழனிக்குமார் தான் நிரூபிக்க அத்தனை வச்சிருக்கேன்.
ஒரு ஃபோட்டோ எடுத்து அதோட இணைச்சு ஆபிஷர்ட்ட போனேன்.
நகைய மீட்க வந்தவர் அங்க நிண்டுட்டு இருந்தார்.
அவங்க பாஸ்புக் இருக்கானுகேட்டார்.
அவர் கொண்டு வரல.
லோன் கணக்கிற்கான ரசீதை வைத்திருந்தார். கடன் முடிஞ்சதுக்கான ரசீது வைத்திருந்தார்.
அதைப் பார்த்து தன்னோட சிஸ்டத்துல அவரது முகத்தைப் பார்த்திருப்பார் போல.
இப்ப மீசை இல்லையா உங்களுக்குனு கேட்டார்.
ஆஹா....நான் என் கணக்கை ஆரம்பிச்சப்ப என் முகத்தை நினைச்சுப் பார்த்தேன். அப்ப கேட்ட ஃபோட்டோவுல ஷேவ் பண்ணி இருந்தேனா இல்லையானு தெரியலையே. டக்குனு தாடி வளர்த்துட்டு உடம்பை ஏத்திட்டு வர நான் என்ன சூர்யாவா..என்னங்கடா இது அமெரிக்கா விசா ஆபிஷர் வேலைக்கு போனவனை பேங்க்ல விட்டது.

அந்தாளு இப்ப மீசை வைக்கிறது இல்ல சார் னார்.
ஆபிஷர் இவர் கணக்கைப் பார்த்துட்டு இன்னும் உங்களுக்கு எவ்வளவு கடன் இருக்கு னு கேட்டார்.
நாலு லட்சம் சார் னார் இவர்.
ஆபிஷரும் அவர் பக்கத்துல அந்த நகையை வைத்திருந்த மதிப்பீட்டாளரும் ஒருவரை ஒருவர் நக்கலா பார்த்து சிரிச்சுக்கிட்டாங்க.
அதைப் பார்த்த இவர் என் கணக்குல ஒரு லட்சம் தான் சார். என் மனைவி பேர்ல மூணு லட்சம் இருக்குனார்.
ஓ..அவங்க பேர்ல வேற வச்சிருக்கீங்களா..என்றார்.
இவர் என்னைப் பார்த்துக்கிட்டே ஆமா சார் என்றார்.
அடுத்தவாட்டி பாஸ்புக் வராட்டி நகைய திரும்பி தரமாட்டேன் என்றார்.
இவர் சரிங்க சார் என்றார்.

ப்பா..என்ன ஒரு கண்டிப்பு.. இவைங்கள லாம் மும்பை டெல்லினு போட்டு இருந்தா ஒரு நாதாரி நாட்டவிட்டு ஓடிருப்பானா..சிங்கம் ஒத்தை ஆளா நிப்பாட்டி கடமைய ஆத்து ஆத்துனு ஆத்திருப்பாருலனு தோணுச்சு.

இப்ப என் டர்ன்.

ஃபார்மை கொடுத்தேன்.
ஆதார் கார்ட் இருக்கா
ஏற்கனவே லின்க் பண்ணிருக்கேனே சார்.
இல்ல இப்ப ஆதாரத்துக்கு வேணும்.
ஃபோட்டோவும் நானுமே போதாதா சார். என் கணக்கோடு இருக்குற ஆதார் கார்டை உபயோகப்படுத்த முடியாதா சார்.
இது ரூல் சார்.
இருங்க சார் ஜெராக்ஸ் எடுத்துட்டு வரேன்
போய்ட்டு வந்து ஜெராக்ஸ் கொடுத்தேன்.டிக் அடிச்சு அடுத்தக் கவுண்டர்ல பாஸ்புக் வாங்கிட்டு வாங்க என்றார்.அந்த ஃபார்மில் ஒரு கையெழுத்து போட்டு அனுப்புனார்.அந்தக் கவுண்டரில் அதைக் கொடுத்ததும் அதை அவர் ட்ராவில் போட்டுவிட்டு ஒரு புது பாஸ்புக் கொடுத்தார்.அதை வாங்கிக்கிட்டு ஆபிஷர்ட்ட வந்தேன்.அதைக் கொடுத்தேன். அந்த ஃபார்ம் எங்கனார்.
அதை அவர் வச்சுக்கிட்டார். நான் கேட்கலையே சார்.
சரி பரவாலனு இன்னொரு ஃபார்மைக் கொடுத்தார்.
அதே ஃபார்ம்
என்ன சார்
மறுபடியும் ஃபில் பண்ணிக்கொடுங்க என்றார்.
பாஸ்புக்குக்கா சார் என்றேன்
என்னைப் பார்த்தார்.
சதக் சதக் னு சத்தம் கேட்டுருக்கனும்ல....
இப்பத்தான சார் எழுதிக்கொடுத்தேன். அதுலயே எனக்கு கார்ட் வேணும்னு கொடுத்தேனே சார் என்றேன்.
அதை அவர் வச்சுக்கிட்டாருல. அதான் தனியா எழுதிக்கொடுன்க என்றார்.

சரினு முதல்ல இருந்து எழுதிக்கொடுத்தேன்.

நீங்க பாஸ்புக் இல்லாம எப்படி அக்கவுண்ட் ஓபன் பண்ணீங்க என்றார்.
இந்த ப்ரான்ச் ஆரம்பிச்சப்ப கஷ்டமர்ஸ் யாரும் அதிகமா வரலை. அப்ப மேனேஜரும் சில அதிகாரிகளும் வீடுவீடா வந்து எங்க பேங்க்ல வந்து சேருங்கனு சொல்லிட்டு திரிஞ்சாங்க. அப்பலாம் சேரல சார்.
எங்க கம்பெனிக்காரைங்க இழுத்துவிட்டாய்ங்க சார். இல்லாட்டி எதுக்கு சார் ஓபன் பண்ணிட்டு கஷ்டப்படனும்.
கோட்டாக் ல விர்ச்சுவல் கார்ட் வசதியவே கொண்டு வந்துட்டாங்க.  இப்ப டேக்ஸ்க்கு லிங்க் ஆயிருக்கு அதான்.
பாஸ்போர்ட் ஆபிஸை பிரைவேட் கம்பெனி அவுட் சோர்ஸ் எடுத்தமாதிரி கவர்ன்மெண்ட் எல்லாத்தையும் கொடுத்துட்டாங்கனா எல்லோருக்கும் நிம்மதி தான சார் என்றேன்.

(நம்மாளுக்கு தெரியல. நம்ம டாபிக் இல்லாமலே அரைமணி நேரம் பேசுவோம்னு)
பல சதக் சத்தம் கேட்டுட்டு சிரிச்சுட்டே கார்டைக் கொடுத்தனுப்பினார்.

அல்லோ..எச் உச் மீ...இன்னும் கார்டை ஆக்டிவேட் பண்ணல...அதுனால இன்னும் முடியல...என்ட் கார்டை போட்டுராதிங்க மக்களே. பெருசா எழுதியாச்சுனு பப்ளிக் கர்டசி பார்த்து நானே முடிச்சுக்கிட்டேனாக்கும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....