இடுகைகள்

அக்டோபர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தயிர்சாதம்

மதியம் மணி மூணு. பயங்கரப் பசி. ஹோட்டலுக்குப் போறோம் டைனிங் டேபிள் மேல ஏறி உட்கார்ந்து சாப்பிடுறோம். அவ்ளோ பசி. பிரபலமான ஹோட்டல். மதிய வேளைகளில் அவ்வளவு கூட்டமாக இருக்கும். சர்வர்கள் பாய்ந்து பாய்ந்து வேலை பார்ப்பார்கள். வெறும் இலைய பாத்துட்டா டபக்குனு சாதத்தைக் கொட்டுற வேலை ஆர்வம் இருக்கும். நிற்க.இதுலாம் நடக்கும். நடக்கணும். இன்று நான் போய் அமர்ந்தேன். உயரமான ஒரு ஆசாமி ஹோட்டல் சூப்ரவைசர் போல. வெள்ளை சட்டை கருப்பு பேண்ட். பருத்த சிவந்த அந்த மனிதன் நெற்றியில் குங்குமம். சுறுசுறுப்பா நடுவில் நிற்கிறார். நான் அமர்ந்த டேபிளைப் பார்த்தார். சாருக்கு என்ன வேணும் கேளு னு ஒரு சத்தம். தண்ணிய வை னு அடுத்த சத்தம். யப்பா...மிரட்டி வேலை வாங்குறாரே னு ஆச்சரியப்படத் தேவையில்லை. ஏன்னா அங்க ஒரு பக்கியும் வரல. வெகு நிதானமாக ஒரு மத்திம வயதுக்காரர் வந்தார். ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஆர்டர் எடுக்க டிப்டாப் ஆசாமி இருப்பதைப் பார்த்து காப்பியடித்ததில் சில தவறுகளுடன் இருந்தார். கிழிந்த பேப்பரில் ஆர்டர் எடுக்கப்போகிறார். சட்டையை பேண்ட்டுக்குள் திணிப்பதில் அவருக்கு விருப்பமில்லை போல. இண் பண்ணிட்டு எ

அய்யாக்கண்ணு.....

பத்தாம் வகுப்பு வரை நாங்கள் குடியிருந்தது மதுரை மேலப்பொன்னகரம் பகுதியில். எங்கள் தெருவில் பாய் டீ க்கடை என்று ஒன்று உண்டு. பெயர் எல்லாம் கிடையாது. முஸ்லீம் பாய் கடை என்றால் பிரசித்தம். நடுத்தரக் குடும்பங்கள் நிறைந்தப் பகுதி அது. சில சமயங்களில் நண்பகலில் அல்லது வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் கூட நாங்கள் அந்தக் கடையில் டீ காப்பி பார்சல் வாங்குவோம். அந்த டீக்கடை பாய் க்கு மூன்று மகன் கள் மற்றும் ஒரு மகள். சையது அண்ணன், ஷேக் அண்ணன், கனி அண்ணன். மற்றும் பாத்திமா. ஷேக் அண்ணன் என் அப்பாவின் மாணவர். அந்த அண்ணன் வீட்டிற்கு வந்து படித்ததும் அவர் வீட்டின் வறுமை காரணமாக படிப்பு நிறுத்தப்பட்டதும் எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் கடையில் அந்த அண்ணன் கல்லாவில் இருக்கும்பொழுது நான் போனால் என்னிடம் அன்பாய் பேசுவார். அவர் ஒரு முறை வீட்டிற்கு வந்த பொழுது நான் அழுதேனாம். அப்பொழுது என்னைச் சமாதானப்படுத்தும் படலமாய் " அய்யாக்கண்ணு" என அப்பா என்னைக் கொஞ்சியிருக்கிறார். அதை அந்த அண்ணன் பிடித்துக்கொண்டார். கடைக்குப் பார்சல் டீ வாங்கச்செல்கையில் அய்யாக்கண்ணு  டீ வேணுமா காப்பி வேணுமா எனக் கேட்பார். என

டமிளன்...

தற்செயலாகக் கவனித்தது. இரண்டு மாணவர்கள் ஆங்கிலத்திலேயே பேசிக்கிட்டு டீ குடிக்கிறாங்க. நம்மூர்ல ஆங்கிலம்னா பணக்காரப் பயலுக பேசுவானுக..இல்லாட்டி வெளியூர் காரக சந்திச்சுட்டா பேசிக்குவாங்க.. இங்க இரண்டு பக்கிகளும் தமிழ்நாடு மாதிரி தான் தெரியுது.. சரி பேசட்டும். தமிழ் தமிழ்னு இங்கேயே கிடக்கமுடியாது.. நாலு மொழி தெரிஞ்சாத்தான் பொழப்பு ஓட்டமுடியும். அதுலயும் ஆங்கிலம் முக்கியம். நம்ம படிக்குறப்ப இந்த இங்கிலீஸ்ஸு எப்புடி இருந்தது..... ஒரு கொசுவளையத்த சுத்த விட்டா.... கல்லூரியில் படிக்கும்பொழுது ஆங்கிலம் ஓரளவிற்கு எளிதாக இருந்தாலும் , பல இடங்களில் என் கோர முகம் அம்மொழிக்குப் பிடிக்கவில்லை போலும்.....எனக்கு ஆங்கிலம் வந்தாலும், அதற்கு பழனிக்குமார் வரவேயில்லை. இளங்கலை படிக்கும்பொழுது ஆங்கில பாடத்திற்கு ஒரு லேடி புரோஃபஸர் வந்தாங்க... ரொம்ப நல்லவங்க....பயங்கர சின்சியர்....கரெக்ட்டா க்ளாஸ்க்கு வந்திருவாங்க... அவங்க எந்த அளவுக்கு சின்சியர்னா....ஆங்கிலத்த ஆங்கிலத்தாலேயே பாடம் எடுப்பாங்க.... ஒரு தடவை...வில்லியம்ஸ் வேர்ட்ஸ்வொர்த் எழுதுன " தி குக்கூ..." (The Cuckoo) னு ஒரு போய

ஆன்லைன் ட்ரக் மார்க்கெட்டிங்

நாளை மருந்து வணிகர்கள் முழுகடையடைப்பு. எதற்காக என்றால்ஆன்லைன் மார்க்கெட்டிங்கில் மருந்துகளை விற்க அரசின் முடிவிற்கு எதிராக. ஒரு ஃபர்னிச்சர் ஆன்லைன் மார்க்கெட்டிங்ல வந்தபொழுது இவ்வளவு எதிர்ப்பு வரவில்லை. தொலைதொடர்பு சாதனங்கள் வந்தபொழுது அதை விற்ற வணிகர்கள் இவ்வளவு எதிர்ப்பைத் தரவில்லை. ஆனால் மருந்து வர்த்தகம் அப்படியல்ல. சரியாக மூன்று மாதங்களுக்கு முன்னதாக தென்தமிழகம் டெங்குவால் பாதிப்படைந்தது. சாதாரணக் காய்ச்சல் என மக்கள் சாதாரணமாய் இறந்தனர். அப்பொழுது மருந்து கட்டுப்பாட்டுத் துறையினரால் மருந்துக்கடைகள் மீது விதிமுறைகள் பறந்தன. மருத்துவரின் பிரிஸ்கிரிப்ஷன் சீட்டு இல்லாமல் மருந்து விற்றால் தண்டனை , உரிமம் ரத்து , வழக்கு மற்றும் லஞ்சம் இப்படி மன உளைச்சலுக்கு உள்ளானார்கள். ஆனாலும் விதிமுறைகளை மதித்தனர். இப்பொழுது கதைக்கு வருவோம் . ஆன்லைனில் மருந்து விற்றால் யாரோட பிரிஸ்கிரிப்ஷனனு எப்படி கேள்வி கேட்கப்போகிறார்கள். போலிமருந்துகளைக் கண்டுபிடிக்கும் கட்டுப்பாட்டுத்துறை ஆன்லைனை எப்படி வேவு பார்க்கும். ஒரு ஃபர்னிச்சர் கடையில் பில் இல்லாமல் என வரி ஏய்ப்பு செய்து வியாபாரம் செய்துவிடமுடிய

போலும்....

அந்தக் கவிதையை எழுதி முடித்தப் பின் உனக்கு அனுப்புவது தான் உரித்து. எத்தனையாவது கவிதையெனத் தெரியாமல் கவிதைக் குறுஞ்செய்தியை பிரசுரிக்கிறேன் உனதலை பேசிக்கு... மிக அற்புதம் என்பது கூட உன் சிக்கன ஸ்மைலி காட்டிக்கொடுக்கும். இந்த முறை சரியில்லை என்ற ஒற்றைப் பதில் என் வார்த்தைகளைக் கலைத்துப்போடுகிறது செப்பனிடுவதற்கென்றெ ஒரு மனப்பிறழ்வு- பிறழ்விற்கான எழுத்துகளைப் பிரிக்கிறது... குற்றுயிராய் தொடுத்துக்கொண்ட வார்த்தைகளினம் கண்டு சரியில்லை என்பதைச் சொருகிருக்கிறாய் போலும்... கிழித்தெறியப்பட்ட பழைய காகிதத்தின் அரைகுறை வார்த்தையாடைகள் தப்பித்துக்கொண்டன ஓரங்கீகார மறுப்பிலிருந்து... இன்னும் சில காகிதங்கள் எறியப்பட்டாலும் ஒரு ஸ்மைலி உத்தேசமாய் சிரிப்பதற்கில்லை போலும்... மறுபடியும் வாசிக்கையில் உனக்கனுப்பிய கவிதை வரிகளிலொன்று இப்படியிருந்தது... " காதுமடல்களுக்குள் உன் மூச்சுக்காற்றுப் புதைக்கும் கனவுகள் இப்பொழுதெல்லாம் மிகச் சாதாரணம்..." "சரியில்லை" என வெட்கத்துடன் நீ சிணுங்கியக் குறுஞ்செய்திச் சத்தம் பிடிப