போலும்....

அந்தக் கவிதையை
எழுதி முடித்தப் பின்
உனக்கு அனுப்புவது தான்
உரித்து.

எத்தனையாவது கவிதையெனத்
தெரியாமல்
கவிதைக் குறுஞ்செய்தியை
பிரசுரிக்கிறேன்
உனதலை பேசிக்கு...

மிக அற்புதம்
என்பது கூட
உன் சிக்கன
ஸ்மைலி
காட்டிக்கொடுக்கும்.

இந்த முறை
சரியில்லை
என்ற
ஒற்றைப் பதில்
என் வார்த்தைகளைக்
கலைத்துப்போடுகிறது

செப்பனிடுவதற்கென்றெ
ஒரு
மனப்பிறழ்வு-
பிறழ்விற்கான
எழுத்துகளைப்
பிரிக்கிறது...


குற்றுயிராய்
தொடுத்துக்கொண்ட
வார்த்தைகளினம்
கண்டு
சரியில்லை என்பதைச்
சொருகிருக்கிறாய் போலும்...

கிழித்தெறியப்பட்ட
பழைய காகிதத்தின்
அரைகுறை
வார்த்தையாடைகள்
தப்பித்துக்கொண்டன
ஓரங்கீகார மறுப்பிலிருந்து...

இன்னும்
சில
காகிதங்கள்
எறியப்பட்டாலும்
ஒரு ஸ்மைலி
உத்தேசமாய்
சிரிப்பதற்கில்லை போலும்...

மறுபடியும்
வாசிக்கையில்
உனக்கனுப்பிய
கவிதை வரிகளிலொன்று
இப்படியிருந்தது...


" காதுமடல்களுக்குள்
உன்
மூச்சுக்காற்றுப்
புதைக்கும்
கனவுகள்
இப்பொழுதெல்லாம்
மிகச் சாதாரணம்..."

"சரியில்லை"
என
வெட்கத்துடன்
நீ
சிணுங்கியக்
குறுஞ்செய்திச் சத்தம்
பிடிபடும் வரை
சில காகிதங்களைக்
கிழிப்பது உறுதி போலும்....





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8