டமிளன்...
தற்செயலாகக் கவனித்தது. இரண்டு மாணவர்கள் ஆங்கிலத்திலேயே பேசிக்கிட்டு டீ குடிக்கிறாங்க.
நம்மூர்ல ஆங்கிலம்னா பணக்காரப் பயலுக பேசுவானுக..இல்லாட்டி வெளியூர் காரக சந்திச்சுட்டா பேசிக்குவாங்க..
இங்க இரண்டு பக்கிகளும் தமிழ்நாடு மாதிரி தான் தெரியுது.. சரி பேசட்டும். தமிழ் தமிழ்னு இங்கேயே கிடக்கமுடியாது.. நாலு மொழி தெரிஞ்சாத்தான் பொழப்பு ஓட்டமுடியும். அதுலயும் ஆங்கிலம் முக்கியம். நம்ம படிக்குறப்ப இந்த இங்கிலீஸ்ஸு எப்புடி இருந்தது.....
ஒரு கொசுவளையத்த சுத்த விட்டா....
கல்லூரியில் படிக்கும்பொழுது ஆங்கிலம் ஓரளவிற்கு எளிதாக இருந்தாலும் , பல இடங்களில் என் கோர முகம் அம்மொழிக்குப் பிடிக்கவில்லை போலும்.....எனக்கு ஆங்கிலம் வந்தாலும், அதற்கு பழனிக்குமார் வரவேயில்லை.
இளங்கலை படிக்கும்பொழுது ஆங்கில பாடத்திற்கு ஒரு லேடி புரோஃபஸர் வந்தாங்க... ரொம்ப நல்லவங்க....பயங்கர சின்சியர்....கரெக்ட்டா க்ளாஸ்க்கு வந்திருவாங்க...
அவங்க எந்த அளவுக்கு சின்சியர்னா....ஆங்கிலத்த ஆங்கிலத்தாலேயே பாடம் எடுப்பாங்க....
அவங்க எந்த அளவுக்கு சின்சியர்னா....ஆங்கிலத்த ஆங்கிலத்தாலேயே பாடம் எடுப்பாங்க....
ஒரு தடவை...வில்லியம்ஸ் வேர்ட்ஸ்வொர்த் எழுதுன " தி குக்கூ..." (The Cuckoo) னு ஒரு போயம்...கவிதை...
அத அந்த அம்மா நடத்துனாங்க.....முதலில் வரிகள வாசிச்சாங்க....நாங்க புத்தகத்த பார்த்தோம்..
திடீருனு புத்தகத்துல இல்லாத வரிகள அந்த அம்மா சொன்னாங்க...நானும் புத்தகத்துல எந்த வரினு தேடுறேன்.
கண்டுபிடிக்கமுடியல...
என்னனு பார்த்தா....அந்த அம்மா...புத்தகத்துல இருந்த வரிக்கு விளக்கமும் ஆங்கிலத்திலேயே கொடுத்துக்கிட்டுருக்கு...இதுலாம் சொல்லனும்ல...
.சரி...னு..அவங்கள பாத்துக்கிட்டு இருந்தேன்.
திடீருனு..."பழனிக்குமார்...புத்தகத்த பாரு...என் முகத்திலியா...இருக்கு..னு சொன்னாங்க...."
அப்புறம் தான் தெரியும்...அது புத்தகத்தில இருக்கிறதவாசிக்கிறாங்க னு...
.எது வேர்ட்ஸ்வொர்த் சொன்னது....எது இந்த அம்மா சொல்லுதுனே தெரியாம இருந்தேன்...(நல்ல வேள பழனிக்குமார் புத்தகத்த பாரு னு தமிழில் சொன்னாங்க...யாருக்குத் தெரியும்..ஒரு வேள ஆங்கிலத்துல சொன்னத...நான் வேர்ட்ஸ்வொர்த் சொன்ன poem னு விட்டுட்டேனோ என்னமோ...)
இந்த நிலைமை எனக்குமட்டுமில்லை..என் நண்பர்களுக்கும் சில சமயங்களில் ஏற்பட்டதுண்டு...
நான் முதுகலை படித்துக்கொண்டிருந்த பொழுது பிரிவு உபச்சார விழாவிற்கு ஏற்பாடு செய்தோம்.
அதை ஏற்பாடு செய்வதற்கென்றே ஒரு குழு அமைக்க்ப்பட்டது....தறுதலைத்தனமான வேலைனா....நம்ம தான முன்னாடி இருப்போம்...நானும் சில நண்பர்களும் அதை ஏற்பாடு செய்தோம்.
அவ்விழாவை நடத்துவதற்கு முதலில் ஆடிட்டோரியத்தை புக் செய்து விட வேண்டும்...பிறகு பேனர் , ரேடியோ...மைக்..எல்லாம்..
அதற்கான வழிமுறை என்னனா...
பாயிண்ட் நம்பர் ஒண் - பிரின்சிபால் ட்ட அனுமதி வாங்கனும்...
பாயிண்ட் நம்பர் டூ - அவர் கையெழுத்துப் போட்ட கடிதத்த நம்ம அகத்தியர் ட்ட( எங்க H.O.D க்கு நாங்க வச்ச செல்லப்பெயர்) கொடுக்கணும்....
சரினு பிரின்சிப்பல் ரூம் க்கு போறோம்...போற வழியிலேயே எங்க அகத்தியரைப் பார்த்துட்டோம்...
அவர் எங்களைப் பார்த்ததும் , எங்க போறோம் னு கேட்டார்.
விவரத்தைச் சொன்னோம்...
உடனே அவர் இப்படி பேச ஆரம்பிச்சார்....
" Good...you must conduct function after getting permission from our principal.
first you write a letter and get signature from him. Now our principal is at class. He is at II M.A., class.
So you go after half an hour.. then come to my room"
இப்படி சொல்லிட்டு போயிட்டார்.
நானும் வகுப்பிற்கு திரும்புறேன்//
ஆனா கூட வந்த இரண்டு நண்பர்கள் எங்கடா போற னு என்னைய கேட்டாங்க......
நீங்க எங்கடா போறீங்க னு நான் கேட்டேன்.
பிரின்சிப்பல்ல பாக்க......னு சொன்னானுக....
டேய்....அவர் க்ளாஸ்க்கு போயிட்டாரு......
உனக்கு எப்படி தெரியும் னு கேட்டானுக....
இப்பத்தான் H.O.D சொன்னாருல...னேன்...
அகத்தியரு இதுலாமா சொன்னாரு....னு ஒரு நண்பன் கேட்டான்...
அவர் பேசுன ஆங்கிலத்தை அவனால் புரிஞ்சுக்கவே முடியலை.
அதுல இருந்து இப்ப வரைக்கும் அந்த நண்பன் எங்க துறைத்தலைவருக்கு (நானும் தான்) மரியாதை கண்ணாபிண்ணானு தர்றான்...
இப்பக்கூட இதே நிலைமை தாங்க....மருத்துவர்கள பாக்கப் போறப்ப ஆங்கிலத்திலேயே கம்பெனி என்ன சொல்லிக்கொடுத்துச்சோ...அத ஒப்பிப்போம்....பதிலுக்கு ஏதாவது ஒரு மருத்துவர்...சாரி...சாரி..டாக்டர்...நாங்க ஆங்கிலத்துல பேசுறோம்னு தப்பா நினைச்சுட்டு பதிலுக்கு ஆங்கிலத்துல கேள்வி கேட்க ஆரம்பிச்சா....உடனே..."வணக்கம்...நான் பழனிக்குமார்....உங்களுக்கு எவ்வாறு தகவல் அளிக்கலாம்...னு சன் டி.வி. கஸடமர் கேர் ஆபிஸர் மாதிரி சுத்த தமிழுக்கு மாறிடுவோம்......
தமிழனுக்கு இதுலாம் சாதாரணம்ப்ப்பாஆஆஆஆஆ...
கருத்துகள்
கருத்துரையிடுக