ஆன்லைன் ட்ரக் மார்க்கெட்டிங்

நாளை மருந்து வணிகர்கள் முழுகடையடைப்பு.
எதற்காக என்றால்ஆன்லைன் மார்க்கெட்டிங்கில் மருந்துகளை விற்க அரசின் முடிவிற்கு எதிராக.

ஒரு ஃபர்னிச்சர் ஆன்லைன் மார்க்கெட்டிங்ல வந்தபொழுது இவ்வளவு எதிர்ப்பு வரவில்லை.
தொலைதொடர்பு சாதனங்கள் வந்தபொழுது அதை விற்ற வணிகர்கள் இவ்வளவு எதிர்ப்பைத் தரவில்லை.

ஆனால் மருந்து வர்த்தகம் அப்படியல்ல.

சரியாக மூன்று மாதங்களுக்கு முன்னதாக தென்தமிழகம் டெங்குவால் பாதிப்படைந்தது. சாதாரணக் காய்ச்சல் என மக்கள் சாதாரணமாய் இறந்தனர். அப்பொழுது மருந்து கட்டுப்பாட்டுத் துறையினரால் மருந்துக்கடைகள் மீது விதிமுறைகள் பறந்தன. மருத்துவரின் பிரிஸ்கிரிப்ஷன் சீட்டு இல்லாமல் மருந்து விற்றால் தண்டனை , உரிமம் ரத்து , வழக்கு மற்றும் லஞ்சம் இப்படி மன உளைச்சலுக்கு உள்ளானார்கள். ஆனாலும் விதிமுறைகளை மதித்தனர்.
இப்பொழுது கதைக்கு வருவோம் . ஆன்லைனில் மருந்து விற்றால் யாரோட பிரிஸ்கிரிப்ஷனனு எப்படி கேள்வி கேட்கப்போகிறார்கள்.

போலிமருந்துகளைக் கண்டுபிடிக்கும் கட்டுப்பாட்டுத்துறை ஆன்லைனை எப்படி வேவு பார்க்கும்.

ஒரு ஃபர்னிச்சர் கடையில் பில் இல்லாமல் என வரி ஏய்ப்பு செய்து வியாபாரம் செய்துவிடமுடியும்.

ஆனால் மருந்து வர்த்தகத்தில் அது முடியாத காரியம். ஒரு மொத்த மருந்து விற்பனையாளரிம் பில் இல்லாமல் அதிகம் வேண்டாம் ஆயிரம் ரூபாய்க்கு மருந்துகளை வாங்கச்சொல்லுங்கள் பார்ப்போம்...முடியாது.

எங்கேயோ மும்பையில் பாராசிட்டமால் மூலப்பொருளைப் பிரித்து ஒரு தொழிற்சாலை கால்பால் மாத்திரையாக தயாரித்து வினியோகம் நடந்து கிலோமீட்டர்கள் கடந்து இங்குள்ள தேனிக்கோ அதனுள் இருக்கும் பூதிப்புரம் கிராமத்திற்கோ சென்றால்கூட அதன் வழித்தடத்தை நம்மால் கண்டுபிடிக்கமுடியும். அந்தந்த வர்த்தகப்படி அரசாங்கத்திற்கு வரி வருமானமும் கிடைக்கிறது. இது ஆன்லைனில் இந்த நேர்மையும் அரசாங்க வருமானமும் முக்கியமாகத் தரமும் காப்பாற்றமுடியுமா? மக்கள் காசுக்கு ஓட்டுப்போடும் முட்டாள்களாய் இருந்தாலும் அவர்களை ஏமாற்றும் ஒரு கூட்டம் உருவாகும்.

எக்ஸ்பைரி மருந்துகளை வைத்திருந்தால் கடுமையான தண்டனைகள் உண்டு என கடைக்காரர்கள் விற்காத மருந்துகளைக் கையில் வைப்பதில்லை. உடனை நிர்வாகங்களுக்கு அனுப்பிவிடுவர். இது சாத்தியமா ஆன்லைனில்.

சில மருந்துகள் தகுந்த வெப்பநிலையில் தான் பராமரிக்கப்படவேண்டும். உதாரணமாய் சில குழந்தை மருந்துகள். குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பராமரிக்காவிட்டால் குழந்தைகளின் நோய் கூடும். இது ஆன்லைனில் காக்கப்படுமா....

எந்த நோய்க்கு எந்த மருந்து என்பதையும் எந்த நோயாளிக்கு எந்த மருந்து என்பதையும் மருத்துவர் முடிவெடுப்பார். அதை ஆன்லைனில் பெறுவது எப்படி .

கடைசியாக பணத்தில் கொழுத்துக்கிடக்கும் நவநாகரிக தகவல்தொழில்நுட்ப ஆன்லைன் நுகர்வோர்களுக்கும் மற்ற கண்மூடித்தனமான சமூகப் பொறுப்பற்ற பாட்டாளி துரோகிகளுக்கும் பயன்படுவதைத் தவிர இந்த ஆன்லைன் மருந்து வர்த்தகம் பல குடும்பங்களைக் காவு வாங்குவது உறுதி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....