தயிர்சாதம்

மதியம் மணி மூணு.
பயங்கரப் பசி.
ஹோட்டலுக்குப் போறோம்
டைனிங் டேபிள் மேல ஏறி உட்கார்ந்து சாப்பிடுறோம்.
அவ்ளோ பசி.
பிரபலமான ஹோட்டல்.
மதிய வேளைகளில் அவ்வளவு கூட்டமாக இருக்கும். சர்வர்கள் பாய்ந்து பாய்ந்து வேலை பார்ப்பார்கள். வெறும் இலைய பாத்துட்டா டபக்குனு சாதத்தைக் கொட்டுற வேலை ஆர்வம் இருக்கும். நிற்க.இதுலாம் நடக்கும். நடக்கணும்.
இன்று நான் போய் அமர்ந்தேன். உயரமான ஒரு ஆசாமி ஹோட்டல் சூப்ரவைசர் போல. வெள்ளை சட்டை கருப்பு பேண்ட். பருத்த சிவந்த அந்த மனிதன் நெற்றியில் குங்குமம்.
சுறுசுறுப்பா நடுவில் நிற்கிறார். நான் அமர்ந்த டேபிளைப் பார்த்தார்.
சாருக்கு என்ன வேணும் கேளு னு ஒரு சத்தம்.
தண்ணிய வை னு அடுத்த சத்தம்.
யப்பா...மிரட்டி வேலை வாங்குறாரே னு ஆச்சரியப்படத் தேவையில்லை. ஏன்னா அங்க ஒரு பக்கியும் வரல.
வெகு நிதானமாக ஒரு மத்திம வயதுக்காரர் வந்தார். ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஆர்டர் எடுக்க டிப்டாப் ஆசாமி இருப்பதைப் பார்த்து காப்பியடித்ததில் சில தவறுகளுடன் இருந்தார். கிழிந்த பேப்பரில் ஆர்டர் எடுக்கப்போகிறார். சட்டையை பேண்ட்டுக்குள் திணிப்பதில் அவருக்கு விருப்பமில்லை போல. இண் பண்ணிட்டு எவ்வி எவ்வி வாலிபால் விளையாண்ட மாதிரி வந்திருக்கார்.
பசி நேரத்துல இவ்வளவு வர்ணனை தேவையானு கேட்காதீங்க. அப்பதான் எழுத்தாளன்னு நம்புறானுக...
இப்ப ஹோட்டலுக்குள போவோமா..
சார் டோக்கன் வாங்கிட்டீங்களா
( மதிய நேரத்தில் லன்ச் க்கு மட்டும் டோக்கன் கொடுப்பார்கள்)
தயிர் சாதம் இருக்கா...
ம்ம்ம் னு பம்முறாரு...இருக்கு சார் னு போயிட்டார்.
அடுத்து அந்த டேபிள்ல கவனிக்குற சர்வர் வந்தார்.
சார் டோக்கன் வாங்கிட்டீங்களா
தயிர்சாதம் தான் வேணும்
ரைட்டு சார் னு அவரும் போயிட்டார்.
யாரும் வரல.
ஏ! சாருக்கு என்ன வேணும்னு கவனி..
அந்த சூப்ரவைசர் கத்துறாரு...
மதியம் ஹோட்டல்களில் லன்ச் டோக்கனை வாங்கிட்டு இலை போடுறதுக்குனே ஒரு கேரக்டர் இருக்கும்.
அந்த கேரக்டர் இப்ப வந்தது.
சார் டோக்கன் வாங்கிட்டீங்களா
தயிர்சாதத்துக்கு டோக்கன் வாங்கனுமா...
ஓ தயிர்சாதமா...
(என்னைய அந்த ஆளு மதிக்கவே இல்லை...போயிட்டார்...)
எதிர்த்தாப்புல ஒரு பச்சை சட்டை இரண்டு பட்டன கழட்டிவிட்டு வேஷ்டி சகிதமா ஒரு பொதுஜனம். கை கால் முகத்தை எல்லாம் கழுவி வந்து உக்காந்திருக்கார். என்னைய ஒரு பார்வை.  நான் என்னமோ சும்மா உக்காந்திருக்கமாதிரி....
( ஹலோ பச்ச சட்ட நாங்களும் சாப்ட தானு வந்திருக்கோம்னு நானும் பார்த்தேன்...)
ஏ! சாருக்கு என்ன வேணும்னு கேளு
அந்த சூப்ரவைசர் தான் கத்துனாரு..
இலை போடுற ஆசாமி வந்தார்
எதிர்த்த பச்ச சட்டை டோக்கன கொடுத்தார்.
இலைய போட்டார்...
ஏ! சாருக்குத் தண்ணிய வை...னு சத்தம்..
ஒருத்தன் தண்ணிய கொண்டு வர்றான்..
நம்ம பச்ச சட்ட அதை உள்ளங்கையில் ஊத்தி சலக் சலக்னு மூணு இடத்துல இலைல தொளிச்சார்.
இரண்டு இழு...இலைய கழுவுறதுக்குள ஒருத்தன் சோத்துக் குண்டாவ கொண்டு வந்துட்டான்.
இருக்குற ஆர்வத்துக்கு அந்தாள் பச்ச சட்டைல கொட்டிராதடா சாதத்தை...
முட்டைக்கோஸ் கேரட் பட்டாணி போட்ட பொறியல்
வெண்டைக்கா பச்சடி
சேனைக்கிழங்கு ஃப்ரை
கீரைக் கூட்டு...
அப்பளம்
பாயாசம்
(தேட் இஸ் டோக்கன் வாங்கியிருக்கலாமோனு யோசிச்ச மொமேண்ட்)
எல்லாம் பச்ச சட்டைக்கு நிரப்பியாச்சு.
இப்ப சர்வர் வந்தான்.
சார் உங்களுக்கு சொல்லீட்டிங்களா
சொல்லிட்டீங்களாவா...அடப்பாவிகளா நீங்க இன்னும் எடுக்கப்போகலையா...
ஏங்க நான் சொன்னேன்ல..
அவர் கொண்டு வரலையா...
யாருமே வரல...
இருங்க சார்..
அதுக்குள எதிர்த்த பச்ச சட்ட ஆமா சார் ரொம்ப லேட்டாக்குறாங்க...கொழம்பு ஊத்த எவ்வளவு நேரம் ஆக்குறாங்க பாருங்கனார்....
டே வேணாம்..கொல வெறில இருக்கேன்...இருக்குற பசிக்கு உன் இலைல இரூந்து இரண்டு வாய் முட்டைக்கோஸ் கேரட் பொறியல ஆட்டைய போட்றலாம்னு இருக்கேன்....
ஒருத்தன் சாம்பார் கொண்டுவந்து ஊத்தப்போனான்...
ஏ. இரு ப்பா..பருப்பு நெய்ய ஊத்து..
உடனே சத்தம்..
ஏ பருப்ப கொண்டு வா அண்ணனுக்கு...
ஒருத்தன் நெய்ய ஊத்த
இன்னொருத்தன் பருப்ப ஊத்த
அடப்பாவிகளா எங்கடா என் தயிர்சாதம்...
லன்ச்க்கு டோக்கன வாங்குனா  மறுவீட்டுக்கு வந்த மாப்பிள மாதிரில சாப்டுறாஙைக...
பச்ச சட்டை இப்ப சாதத்துல ஊத்துன பருப்பு நெய்ய பிசையுறாரு...
பிசையுற பிசைல ஆள்காட்டிவிரலுக்கும் நடுவிரலுக்கும் நடுவுல  சோறு தெறிக்கும்போல அப்படி ஒரு பிசை...
இலைல பறக்குற ஆவிக்கும் நெய் வாசத்துக்கும் முட்டைக்கோஸ் காம்பினேஷன் க்கும்......அடாடாடாடாடாடா
ங்கொய்யாலே..எங்கடா என் தயிர்சாதத்த....
ஏ! சாருக்கு என்ன வேணும்னு கேளு
அதே சூப்ரவைசர்...
டே உனக்கு இந்த டயலாக் டீஃபால்ட் செட்டிங்கா...னு முறைச்சேன்...
நான் முறைச்சத பாத்துட்டு எங்கிட்ட வந்து
சார் பார்சல் எதுவும் சொல்லியிருக்கீங்களா...
(ங்கொய்யாலே....யாரும் சிரிக்கக்கூடாது...)
அண்ணே தயிர்சாதம் சொல்லி ரெண்டு நாளாச்சு..
ஏ! சாருக்கு ஒரு தயிர்சாதம்..அப்டினு சத்தம்..
ஐய்யா...ஒருத்தன் ஒரு கிண்ணத்துல பழைய கஞ்சி மாதிரி கொண்டுவர்றான்...எதா இருந்தாலும்
பிசையுறோம்.
தெறிக்க விடுறோம்......
என்ன..தெறிக்கவிடலாமா.......

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....