இடுகைகள்

அக்டோபர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சைரன் 10

மாற்று மருத்துவத்தைப் பற்றி ஆரம்பித்திருந்தேன்.  உண்மையில் சித்தா ஆயுர்வேத ஹோமியோபதி இன்னபிற மருத்துவம் அதாவது அலோபதிக்கு மாற்றாக உள்ள முறைகளில் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் நிபுணத்துவமான மருத்துவர்களும் அச்சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வும் மிகக் குறைவு. எனக்குத் தெரிந்து என் பழைய நிறுவனத்தின் ரீஜனல் மேனேஜர் இரத்த அழுத்தத்திற்கு ஹோமியோபதி எடுத்து நிவர்த்தி பெற்றார். என் நண்பன் ஒருவன் சிறுநீரக கிரியாட்டினினும் அது சார் இரத்த அழுத்தமும் ஆயுர்வேத மருத்துவத்தில் சிகிச்சை அளிப்பதை சொல்லி வருகிறான். ஒரே ஒரு விசயம் தான். நல்ல மருத்துவர்களின் கையில் நாம் சிக்க வேண்டும். ஏன் என்றால் இப்பொழுது அலோபதியை எடுத்துக்கொண்டால் தலைவலி என்று போனால் கால்பால் எடு செப்ட்ரான் எடு டோலோ எடு என எல்லோரும் கூறுவார்கள். மருத்துவர் போதிய அனுபவம் இல்லை என்றாலும் அந்த அலோபதி மருந்து வேலை செய்துவிடும். இப்படி வெளிப்படைத்தன்மை மாற்று மருத்துவத்தில் இல்லை. எத்தனை மாற்று மருத்துவர்கள் தான் கொடுக்கும் மருந்து யாருக்கும் தெரிந்துவிடக்கூடாதென லேபிள் இல்லாமல் தருகிறார்கள் தெரியுமா. சில ஆயுர்வேத சித்தா

சைரன் 9

ஒன்பதாவது சைரன் ஒலிக்கு உங்கள் குரலையும் எண்ணங்களையும் பிரதிபலிக்கும்படியாய் கேட்டிருந்தேன். சுந்தராஜன் சார் தன்னுடைய பதிவில் கர்ப்பமானப் பெண்களை குனிந்து நிமிர்ந்து வேலை செய்யச் சொல்லி பெரியவர்கள் கண்காணிப்பார்கள் என்றும் இப்பொழுது அப்படிச் செய்தால் சில கணவன்மார்களே அதற்கு ஒத்துழைப்புத் தருவதில்லை எனக் கூறியிருந்தார். உண்மையே. இடுப்பு எலும்பு விரிவடைந்து இருந்தால் சுகப்பிரசவத்திற்கு நல்ல வழி கிடைக்கும். குழந்தைகள் நல்ல ஆரோக்கியமானதாய் பிறக்க அதுவும் உடல் மற்றும் மன ஆரோக்கியமாகப் பிறக்க கர்ப்பத்திலேயே நல்ல ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடவேண்டும். இப்பொழுது பார்த்திருப்பீர்கள் ஹார்லிக்ஸ் போன்ற உணவுப்பொருட்களில் DHA  என்ற ஒரு கொழுப்புச்சத்தைச் சேர்க்கிறார்கள். இது என்ன என்று தெரியுமா. கதைக்கு வருகிறேன். கர்ப்பத்தில் உருவாகும் குழந்தையின் மூளை தண்டுவட புருவம் எல்லாம் உற்பத்தியாவதற்கு கர்ப்பப் பெண்ணிற்கு FOLIC ACID தேவை என்று ஒரு காலத்தில் சொன்னார்கள். அந்த காலத்தில் பெண்களுக்குத் தேவையான் ஊட்டச்சத்துகள் நன்றாகக் கிடைத்தன். இப்பொழுது இருக்கும் பெண்களுக்குக் கிடைத்தாலும் அப்படி சா

சைரன் 8

நேற்றையப் பதிவில் நண்பர் முருகேசன் குழந்தைகளுக்கான தடுப்பூசி வகைகள் அது போட வேண்டிய காலம் பற்றி எழுதச் சொல்லியிருந்தார்கள். போன பதிவில் அதைப் பற்றி எழுத நினைத்தாலும் அது நீண்டு தனிப் பதிவாக வரும் என்றும் அதை விட்டு விட்டேன். இருந்தாலும் நண்பரின் ஆசைக் கிணங்க சில கருத்துகள். உங்களுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என உங்கள் கையில் குழந்தையைத் தந்த உடனேயே இன்னொரு அட்டவணையையும் தருவார்கள். அது தடுப்பூசி அட்டவணை. சில மகப்பேறு மருத்துவமனைகளில் அந்த அட்டவணையைத் தருவதுடன் அங்கேயே நீங்கள் ஊசி போட்டுக்கொள்ளலாம் எனச் சொல்வார்கள். சில மகப்பேறு மருத்துவர்கள் குழந்தை மருத்துவரிடம் காண்பித்து போட்டுக்கொள்ளூங்கள் என்று சொல்வார்கள். தடுப்பூசிகளைப் பொறுத்தவரை நீங்கள் கண்டிப்பாக போட வேண்டும். அரசாங்க சார்பில் ஒரு அட்டவணையையும், பிரைவேட் குழந்தை மருத்துவர்கள் சார்பில் ஒரு அட்டவணையையும் வைத்திருக்கிறார்கள். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் கண்டிப்பாகப் போட வேண்டிய ஊசிகள் அரசு சார்பாகக் கொடுக்கப்பட்டிருக்கும் நிரலில் இருக்கும். தனியார் குழந்தை மருத்துவ மையம் சார்பில் தந்திருக்கும் கொடுக்கப்பட்டிருக்கு

சைரன் 7

யுனெஸ்கோ என்ற அமைப்பு நமது இந்தியாவைப் பார்த்து ஓர் அறிக்கை சமர்ப்பித்தது. அதாவது இந்தியாவில் இருக்கும் குழந்தைகளுக்கு வைட்டமின் d3 குறைவாய் இருக்கிறது. அப்படியாஆஆஆஆஆஆஆ னு வாயைப் பிளக்காதீங்க. இது நடந்து நான்காண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.  ஒரு காலத்துல குழந்தை பிறந்ததும் சூரய வெளியில் தினமும் காலையில் காட்டி சன் பாத் எடுத்த இனம் நம்ம நாட்டு இனம். ஆனால் இப்ப பார்த்துக்கொள்ளூங்கள். சூரிய வெளியிலிருந்து கிடைக்கும் விட்ட டி3 நமக்கே பற்றாக்குறையாம்.  குழந்தை பிறந்ததும் மருமகள் மாமியார்ட்ட தர யோசிக்கிறா. மருமகன் தன்னோட மாமியார்ட்ட தர யோசிக்கிறான். அவங்களுக்குள ஒரு எண்ணம் . அவங்க குழந்தைகளைப் பராமரிக்கத்தெரியாது. இன்பெக்ஷன் ஆயிரும் னு. ஆனா அந்த காலத்துப் பாட்டிமார்களுக்க்த் தெரியும் ஒரு குழந்தையை எப்படி கையாளனும்னு. ஆனால் போகிற  போக்கைப் பார்த்தால் நமது பேரக் குழந்தைகளைக் கையாள்வதற்கு நாம் வெளி நாட்டிலிருந்து ஆட்களை இறக்குமதி செய்யவேண்டி வரும் என நினைக்கிறேன். அந்த காலத்தில் லேக்டோஜென் 1 2 3 னு லாம் எண்ணிக்கைல இருக்காது. சத்து மாவுக் கஞ்சிய அவங்களே தயாரிச்சுட்டாங்க. கண்டிப

சைரன் 6

மூன்று மாதக் குழந்தையின் கையில் வசம்பைக் கட்டியிருக்கிறீர்களா என்றுதான் முந்தையப் பதிவை முடித்தேன். அந்த காலத்தில் இருந்தே சில பழக்க வழக்கங்களை நாம் பின்பற்றுகிறோம். அந்த காலத்து அறிஞர்கள், சித்தர்கள் என நமது மருத்துவமுறைகளை வகுத்து அதைப் பின்பற்றும் படியும் அறிவுறுத்தியுள்ளார்கள். அதில் ஒன்று வசம்பைக் குழந்தையின் கையில் கட்டுதல். எதற்காகக் கட்டுறோம்னு நம்ம வீட்டு பாட்டிக ட்ட கேட்டா கரெக்டா சொல்லுவாங்க. குழந்தைகளுக்கு செரிமானம் ஆகுறதுக்குனு. வாந்தி வராம இருக்கிறதுக்குனு சொல்வாங்க. சரி தான். அது முற்றிலும் உண்மை தான் . வசம்பின் மருத்துவ குணங்களில் குழந்தையின் செரிமானத்தைச் சரி செய்யும்.. அதே போல் பால் குடிக்கும் குழந்தைகளின் தொண்டையில் அந்த பால் துளிகள் சேகரமாகி படிந்திருக்கும். கிராமங்களில் அக்கரம் என்று சொல்வார்கள். வசம்பை தேனில் குழப்பி கொடுத்தால் அது வெளியேறும். இது தான் கதை. ஆனால் நாம் அதை எப்படி பயன்படுத்துகிறோம். தேவைப்பட்டால் வசம்பு கொடுக்கலாம். இல்லை அந்தப் பிரச்சினை இருக்கும் குழந்தைகளுக்கு வசம்பு கொடுக்கலாம். இந்தா வச்சுக்கோ...எனக்கு கை வைத்தியம் தெரியும் னு குழந்த

சைரன் 5

கடைசியாகக் கேட்கப்பட்டக் கேள்வியின் அர்த்தம் நீங்கள் சிறுநீர் போகும்போது பார்த்தீர்களா என்று மட்டுமல்ல.. உங்கள் உடலை கண்காணிக்கிறீர்களா என்ற அர்த்தத்தில் தான்.. இப்பொழுது மருத்துவமனையில் மாஸ்டர் செக் அப் என்று சொல்கிறார்கள். அதாவது நமது உடலை முழுதுமாய் ஒரு பார்வை பார்ப்பது. அதாவது அக்கு வேறு ஆணி வேறு என்று. நாற்பது வயதுக்கு மேல் இருப்பவர்கள் அதைப் பார்த்துக்கொள்ளலாம். எல்லா மருத்துவமனைகளிலும் அது செய்கிறார்கள். உங்களுக்கு வசதியான மருத்துவமனை  எது என்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். நான் சில ஐடியாக்களைத் தருகிறேன். அ) உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் மாஸ்டர் செக் அப் செய்யலாம். ( ஏன் என்றால் வெறும் வயிற்றில் காலையில் வரச்சொல்வானுக. போயிட்டு சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வரச்சொல்வானுக..அதுனால நீங்க பாட்டுக்க பத்து கிமீ தூரம் இருக்கிற மருத்துவமனைக்கோ இல்லாட்டி உங்க அப்பா அம்மா தாத்தா பாட்டினு வயசான்வங்களோட போயிட்டு மறுபடியும் அலையக் கூடாதுல..அதான்) ஆ) உங்கள் குடும்ப மருத்துவர் எந்த மருத்துவமனையைப் பரிந்துரைக்கிறாரோ அங்கு போய் செய்யலாம்.( ஏன்னா, மறுபடியும் அந்தா

சைரன் 4

நமக்கென்று ஒரு குடும்ப மருத்துவரைத் தேர்ந்தெடுத்துவிட்டோம். அவர் சரியில்லை என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் கேள்வி. நான் முந்தையப் பதிவில் சொன்னதுபோல் மூன்று முறை நாம் நமக்கே வாய்ப்பு தரலாம். ஒரு மருத்துவருக்கும் நமக்கும் சரிப்பட்டு வர. அப்படி சரிபட்டு வராவிடில் தாராளமாக நாம் மருத்துவரை மாற்றிக்கொள்ளலாம். ஆக இப்பொழுது ஒரு நோய் உங்களுக்கு வர இருக்கிறது என்றால் ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையோ ஒரு கன்சல்டன்ட் அதாவது நிபுணத்துவ மருத்துவரை ப் பார்க்க உங்களுக்கு வழி தெரிந்துவிட்டது. உங்கள் குடும்ப மருத்துவர் என்ன பரிந்துரைக்கிறாரோ அதை நாம் செய்து விடலாம். மூன்று முறைக்கு மேல் சரிப்பட்டு வராவிடில் நீங்கள் உங்கள் குடும்ப மருத்துவரை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் மருத்துவரை அடிக்கடி மாற்றும் பழக்கம் வைத்துக்கொள்ளக்கூடாது. உடலைப் பற்றிய போதிய அறிவும் கவனிப்பும் நமக்கு வேண்டும். நம்ம ஒண்ணும் சிக்ஸ் பேக் லாம் வச்சுக்க வேணாம். நமக்கேத்தமாத்ரி வச்சுக்கிட்டா போதும். நீங்க ஒரு வேலையாள சம்பளத்திற்கு வைத்திருக்கிறீர்கள்னு வச்சுக்குவோம். அவருக்கு நிறைய சம்பளம் தர்றீங்க. ஆனா வேலை கொஞ்சமா தர்வீ

சைரன் 3

ஒரு மருத்துவரைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பது தான் கேள்வி. நமது குடும்பத்திற்கென்று ஒரு மருத்துவரை வைத்துக்கொள்ளுதல் எப்பொழுதுமே சிறந்தது. எந்த மருத்துவராக இருந்தாலும் முழுதாக நாம் அவரை நம்ப வேண்டும். கொடுக்கும் மாத்திரைகளை நாம் நம்பி சாப்பிடவேண்டும். பொதுவாக எந்த சாமானியனும் நம்பத்தான் செய்வான். அதிலும் ஏதேனும் தவறு நடக்கிறதா என்பதை ஆராய வேண்டும். மருத்துவரிடம் நின்று கொண்டு எனக்கு என்ன நோய்னு கண்டுபிடி என்றுலாம் கேட்கமுடியாது. மாறாக நாம் தான் அவருக்கு நமது உபாதைகளைச் சொல்ல வேண்டும். மூன்று முறை எடுத்துக்கொள்ளலாம். ஒரு மருத்துவர் உங்களுக்குப் பிடித்துப்போக நீங்கள் தரும் வாய்ப்பு. உங்களுக்குத் திடீரெனக் கடுமையான காய்ச்சல். இரவு முழுதும். மறுநாள் காலை ஒரு மருத்துவரை நீங்கள் பார்க்கிறீர்கள். சோதிக்கிறார். மருந்து தருகிறார். ஊசி போடுகிறார். மதியம் காய்ச்சல் இல்லை. இரவு மீண்டும் காய்ச்சல் வருகிறது. உடனே அந்த மருத்துவர் சரியில்லை என முத்திரை குத்தி விடமுடியாது. மறுபடியும் மருத்துவரைப் பார்க்கலாம். நாம் என்ன சொல்ல வேண்டும்.  மருந்து சாப்பிட்டால் காய்ச்சல் மூன்று மணி நேரம் இல்லை. ம

சைரன் 2

நாம் ஒரு மருத்துவமனையை எப்படித் தேர்ந்தெடுப்பதுஎன்பது தான் கேள்வி. அதற்கு முன் ஒரு மருத்துவமனையை நாம் எப்படி நிராகரிக்கிறோம் எனத் தெரிந்து கொள்ளலாம். அ) அவைங்க நிறைய காசு புடுங்குவாய்ங்க...( இது நாமாகவே நேரடியாகவோ, நண்பர் உறவினர் மூலம் கேட்டோ தெரிஞ்ச விசயம்) ஆ) அந்த ஆஸ்பத்திரி போனா ரொம்ப லேட் ஆகும்... இ) அந்த ஆஸ்பத்திரி போனா  டெட் பாடி தான் வெளிய வரும். இதுலாம் ஒரு காரணம். நாம் ஏன் ஒரு மருத்துவமனையை நிராகரிக்கிறோம் என்பதற்கு. தேர்ந்தெடுக்க என்ன காரணம் தெரியுமா.. அ) நம்பிக்கை ஆ) ஏக்கம். இது மட்டும் தான். எப்படியும் காப்பாத்திருவாங்க என்ற நம்பிக்கையும், எப்படியாவது காப்பாத்திரமாட்டாங்களா என்ற ஏக்கமும் தான். ஆக, ஒரு மருத்துவமனையைத் தேர்ந்தெடுக்க நமக்கு கொஞ்சம் பொறுமையும் ஒரு விழிப்புணர்வும் தேவை. ஒரு மருத்துவமனையைத் தேர்ந்தெடுக்க நாம் செய்ய வேண்டியவை. முதலில் நமக்கு என்ன நோய் என்பதைப் பற்றி ஆராய வேண்டும். உதாரணத்திற்கு, உங்களுக்கு சர்க்கரை நோய். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் ஊரில் சர்க்கைரை நோய்க்கு மருத்துவம் செய்யும் மருத்துவர் யார் சிறந்தவர் என்பதைத் தெ

சைரன்..

நேற்று ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது அவரது உறவினரை ஒரு உடல் உபாதைக்காக ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகக் கூறினார். ஒரு மருத்துவத் துறையில் வியாபாரப் பணிகள் மேற்கொள்ளும் ஒரு சிற்றறிவாளன் என் கிற முறையில் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. என்ன நோய்க்கு எந்த மருத்துவரைப் பார்க்கவேண்டும் எந்த மருத்துவமனைக்குச்  செல்ல வேண்டும் என்பது இப்பொழுது பெரும் குழப்பம். நான் இளங்கலை படிக்கும்பொழுது மாவட்ட பதிவு அலுவலகத்தில் பகுதி நேர தட்டச்சு வேலைக்குச் சென்றேன். மாவட்டப்பதிவாளரின் நேரடி அதிகாரிக்குத் தேவைப்படும் தரவுகளைத் தட்டச்சுச் செய்ய ஆள் அப்பொழுது இல்லை என்பதால் பார்ட் டைம் ஆக நான் சென்றேன். பிறகு முதுகலை நான் செல்ல என்னால் அங்கு செல்ல இயலவில்லை. அங்கும் ஆள் எடுத்து இருந்தார்கள். பிறகு நான் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலைக்குச் சேர்ந்த சமயம். ஒரு பேருந்து நிறுத்தத்தில் எனக்குத் தட்டச்சு வேலை சொல்லும் அந்த அதிகாரியைப் பார்த்தேன். என்னைப் பற்றி விசாரித்தார். என் வேலையைச் சொன்னதும் அவர் கேட்ட கேள்வி ஆச்சரியத்திற்குரியது. ஒரு பேப்பர் பேனா எடுத்துக்கொண்டார். அவர் இப்படி கேட