சைரன் 9

ஒன்பதாவது சைரன் ஒலிக்கு உங்கள் குரலையும் எண்ணங்களையும் பிரதிபலிக்கும்படியாய் கேட்டிருந்தேன்.

சுந்தராஜன் சார் தன்னுடைய பதிவில் கர்ப்பமானப் பெண்களை குனிந்து நிமிர்ந்து வேலை செய்யச் சொல்லி பெரியவர்கள் கண்காணிப்பார்கள் என்றும் இப்பொழுது அப்படிச் செய்தால் சில கணவன்மார்களே அதற்கு ஒத்துழைப்புத் தருவதில்லை எனக் கூறியிருந்தார். உண்மையே.

இடுப்பு எலும்பு விரிவடைந்து இருந்தால் சுகப்பிரசவத்திற்கு நல்ல வழி கிடைக்கும்.

குழந்தைகள் நல்ல ஆரோக்கியமானதாய் பிறக்க அதுவும் உடல் மற்றும் மன ஆரோக்கியமாகப் பிறக்க கர்ப்பத்திலேயே நல்ல ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடவேண்டும்.

இப்பொழுது பார்த்திருப்பீர்கள் ஹார்லிக்ஸ் போன்ற உணவுப்பொருட்களில் DHA  என்ற ஒரு கொழுப்புச்சத்தைச் சேர்க்கிறார்கள். இது என்ன என்று தெரியுமா.


கதைக்கு வருகிறேன். கர்ப்பத்தில் உருவாகும் குழந்தையின் மூளை தண்டுவட புருவம் எல்லாம் உற்பத்தியாவதற்கு கர்ப்பப் பெண்ணிற்கு FOLIC ACID தேவை என்று ஒரு காலத்தில் சொன்னார்கள். அந்த காலத்தில் பெண்களுக்குத் தேவையான் ஊட்டச்சத்துகள் நன்றாகக் கிடைத்தன். இப்பொழுது இருக்கும் பெண்களுக்குக் கிடைத்தாலும் அப்படி சாப்பிடுவதில்லை. குறிப்பாக போலிக் அமிலம் கீரைகளில் கிடைக்கும். அவற்றை பெண்கள் சாப்பிடுவதில்லை. கீரைகள் மூலமாக கிடைக்கும் போலிக் அமிலம் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. சரியான் அளவில் FOLIC ACID  கிடைக்க வில்லை என்பதால் மருத்துவர்கள் FOLIC ACID மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள்.
உங்களுக்கு அடுத்த கதையைச் சொல்கிறேன் மக்களே....அப்படி எடுத்துக்கொள்ளும் FOLIC ACID நேரடியாக அப்படியே சேகரமாவதில்லை. அது L- METHYLFOLATE -என்ற சேர்மமாக மாறி உடலுக்குச் சத்தைக் கொடுக்கிறது. உடலில் அப்படி ஒரு பயோ கெமிஸ் ட்டிரி நடக்கிறது. சோகம் என்ன என்றால் இப்பொழுதிருக்கு நவநாகரிக பெண்களுக்கு அந்த பயோ கெமிஸ்டிரி சரியாக நடப்பதில்லை. ஆக, உணவு மூலமாகவும் FOLIC ACID எடுப்பதில்லை. நேரடியாகக் கொடுத்தாலும் அது சேகரமாவதில்லை. விளைவு குழந்தை பலவீனமாக, மூளை வளர்ச்சிக் குன்றி பிறக்க வாய்ப்புள்ளது.

இதனால் சில மருந்து நிறுவன ங்கள் ( இங்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். நீங்கள் மருத்துவருக்காகக் காத்திருக்கும் பொழுது உங்கள் பழிப்பிற்கும் வெறுப்பிற்கும் ஆளாக நேரிடும் மருந்து நிறுவனங்கள் ) FOLIC ACID ஐத் தந்து அது L METHYL FOLATE ஆக மாறுவதற்குப் பதிலாக நேரடியாகவே L METHYL FOLATE மாத்திரைகளைத் தருகிறது. மருத்துவர்களும் அதைப் பரிந்துரைக்கிறார்கள். அது போலவே குழந்தையின் மூளை தண்டுவட வளர்ச்சிக்கு DHA முக்கியம். DOCOSA HEXANOIC ACID  . சாப்பிடும் புரோட்டின் வகைகளில் கிடைக்கிறது. கடல் உணவு சோயா பீன்ஸ் ஆலிவ் விதை இப்படி.

ஆக, ஒரு குழந்தை பிறப்பில் அதை ஆரோக்கியமானதாகவும் நல்ல புத்திசாலியாகவும் பிறக்க வைப்பதில் தாய்க்கு அதிக பங்கு கர்ப்ப காலத்திலேயே ஆரம்பிக்கிறது.

என்னனாலும் சாப்பிடலாம்னு எடை அதிகமாகி பிரசவத்தைச் சிரமமாக ஆக்காமல் ஊட்டச்சத்தான உணவைச் சாப்பிடவேண்டும்.  நாம் பார்க்கும் மருத்துவரிடம் நமது உடலில் ஏற்படும் பிரச்சினைகளைத் தாராளமாகச் சொல்லலாம். எந்த பிரச்சினைகள் இருந்தாலும் சொல்லலாம்.

ஒரு மருத்துவர். கிராமத்தில் இருக்கிறார். குக்கிராமம். அங்கு ஒரு டெலிவரிக்காக ஒரு குடும்பம் வருகிறது. சோதிக்கிறார். சோதிக்கும்பொழுதே அந்தப் பெண்ணின் சகோதரி சொல்கிறார்.

ஏன் டாக்டர் உங்கட்ட வந்தாலே ஆப்ரேஷன் தான் பண்ணுவீங்களாம். சுகப்பிரசவமே பண்ணமாட்டீங்களாமே..னு
டாக்டர் மறுக்கிறார். சுகப்பிரசவத்திற்குக் காத்திருப்போம். பிரச்சினைகள் வந்தால் ஆப்ரேஷன் தான் என்று சொல்கிறார்.
வந்த அவளின் சகோதரிக்கு சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால் அட்மிட் செய்கிறார் மருத்துவர்.

மணி இரவு எட்டு. வலி ஏற்படுகிறது.

ஒன்பது மணிக்கு பிரசவம் ஆகிறது. சுகப்பிரசவம். வலியால் அந்தப் பெண் கத்த வில்லை. அழ வில்லை.
மருத்துவர் சொல்கிறார் வலியைத் தாங்கு ஆனால் அடக்காத...அழுது விடு என்று. அந்தப் பெண் தாங்குகிறார்.

பத்து மணிக்கு அந்தப் பெண்ணிற்கு வலிப்பு வருகிறது.

இது ஒரு சாதாரண நிகழ்வு. பிரசவத்திற்குப் பின் வலிப்பு வருவது. ஊசி போடுகிறார். சரியாகிவிட்டது. அனைவரும் நலம். மருத்துவர் மேலே இருக்கு ம் வீட்டிற்குச் செல்கிறார்.
இரவு பன்னிரெண்டு மணிக்கு மறுபடியும் வலிப்பு வருகிறது.
மருத்துவர் வருகிறார். மறுபடியும் வருவதற்கானக் காரணம் என்ன ...உறவினர்களிடம் இதற்கு முன் அந்தப் பெண்ணிற்கு வலிப்பு வந்திருக்கிறதா எனக் கேட்கிறார்கள்.
அவர்கள் இல்லை என் கிறார்கள்.

நடுநிசி இரண்டு மணி. மறுபடியும் வலிப்பு.
மருத்துவரின் குக்கிராமக் கிளினிக்கில் வசதி இல்லை என்பதால் ஆம்புலன்சில் முப்பது கிமீ தூரத்தில் இருக்கும் நகரத்தில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்புகிறார்.
அனுப்பி விட்டு அந்த நல்லெண்ண மருத்துவர் தன் காரை எடுத்துக்கொண்டு பின்னாடி தானும் பறக்கிறார்.
இரண்டு மணிக்கு ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் அந்த மருத்துவரே தன்னை அறிமுகப்படுத்தி அந்த கார்ப்பரேட் மருத்துவரைத் தொலைபேசியில்  பேசி அந்த நோயாளியை அட்மிட் செய்து சிகிச்சையை ஆரம்பிக்கிறார்.

குறிப்பு. அட்மிட் செய்யும்பொழுது அந்தப் பெண்ணின் சகோதரி அந்த்ப் பெண்ணிற்கு வலிப்பு இதற்கு முன்  நான்கைந்து முறை வந்திருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

என்ன செய்வது நண்பர்களே....அவர்களை?

நாம் தான் நமக்கானப் பிரச்சினைகளைப் பெரிதாக்குகிறோம்.... கர்ப்ப சமயத்திலும் பிரசவ சமயத்திலும் நாம் மருத்துவரிடம் நமது பிரச்சினைகளைத் தெளிவாகக் கூற வேண்டும்.

எனக்குத் தெரிந்த மற்றும் அனுபவப்பட்ட பல விசயங்களை உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.

எழுதிய அனைத்துப் பதிவுகளும் உதவிகரமானதாய் இருக்கும் என நம்பி சைரன் 10ல் சைரனின் ஒலியை அணைக்க இருக்கிறேன்.

பத்தாவது பதிவில் கொடுமை கொடுமைனு கோயிலுக்குப் போனா அங்க ஒரு கொடுமை டிங்கு டிங்குனு ஆடுச்சாம்...

அது என்னவா

..அலோபதி வேணாம் ...ஹோமியோபதி ஆயுர்வேதம் சித்தா தான் அந்த டிங்கு டிங்கு....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....