சைரன் 4

நமக்கென்று ஒரு குடும்ப மருத்துவரைத் தேர்ந்தெடுத்துவிட்டோம். அவர் சரியில்லை என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் கேள்வி.

நான் முந்தையப் பதிவில் சொன்னதுபோல் மூன்று முறை நாம் நமக்கே வாய்ப்பு தரலாம். ஒரு மருத்துவருக்கும் நமக்கும் சரிப்பட்டு வர. அப்படி சரிபட்டு வராவிடில் தாராளமாக நாம் மருத்துவரை மாற்றிக்கொள்ளலாம்.

ஆக இப்பொழுது ஒரு நோய் உங்களுக்கு வர இருக்கிறது என்றால் ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையோ ஒரு கன்சல்டன்ட் அதாவது நிபுணத்துவ மருத்துவரை ப் பார்க்க உங்களுக்கு வழி தெரிந்துவிட்டது. உங்கள் குடும்ப மருத்துவர் என்ன பரிந்துரைக்கிறாரோ அதை நாம் செய்து விடலாம்.
மூன்று முறைக்கு மேல் சரிப்பட்டு வராவிடில் நீங்கள் உங்கள் குடும்ப மருத்துவரை மாற்றிக்கொள்ளலாம்.

ஆனால் மருத்துவரை அடிக்கடி மாற்றும் பழக்கம் வைத்துக்கொள்ளக்கூடாது.

உடலைப் பற்றிய போதிய அறிவும் கவனிப்பும் நமக்கு வேண்டும். நம்ம ஒண்ணும் சிக்ஸ் பேக் லாம் வச்சுக்க வேணாம். நமக்கேத்தமாத்ரி வச்சுக்கிட்டா போதும்.

நீங்க ஒரு வேலையாள சம்பளத்திற்கு வைத்திருக்கிறீர்கள்னு வச்சுக்குவோம். அவருக்கு நிறைய சம்பளம் தர்றீங்க. ஆனா வேலை கொஞ்சமா தர்வீங்களா. சம்பளத்திற்கு ஏற்ற வேலை பார்க்கனும்னு ஆசைப்படுவீங்கள. அதான் உடம்பும். சாப்பிடுற சாப்பாட்டுக்கு வேலை கொடுக்கிறோமானு யோசிக்கனும்.

ஓரளவிற்காகவாவது நாம் நமது உடலைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். உயிரியல் பாடத்தை நாம் படிக்கும்பொழுது எப்படிப் படித்தோமோ தெரியாது. இனியாவது நாம் படித்துக்கொள்ள வேண்டும்.

திடீரென அவருக்குச் சர்க்கரை வந்துவிட்டது. திடீரென இதய் நோய் வந்துவிட்டது. இப்படியெல்லாம் நாம் மற்றவர்கள் சொல்லி கேட்டிருக்கிறோம். இந்த உலகத்தில் எல்லாமே திடீரெனத்தான் நிகழும். ஆனால் எந்த நிகழ்வும்  சமிக்ஞ்சைகளை அனுப்பும். அதை முன்னெச்சரிக்கையாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

முப்பது வய்து வந்து விட்டதா. உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடை இருக்கிறதா எனச் சோதனை செய்யுங்கள். கூடுதல் குறைவாக இரண்டு மூன்று இருத்தல் தவறல்ல. எங்கு என்ன தப்பு நடக்கும். எந்த உறுப்பு பாலாகும்லாம் தெரியாது.

ஒரு நண்பன். சிகரெட் குடிக்க மாட்டான். மீட்டிங்க் என்றால் ஓரளவிற்கு மது அருந்துவான். அதாவது இரண்டு மூன்று மாதத்திற்கு ஒரு முறை . அவ்வளவே.
அசைவப் ப்ரியன்.
வாரம் ஒரு முறை அசைவம் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவான்.
கொஞ்ச நாளாக அவனுக்குத் தலைவலி.
வியர்க்கிறது.
மதியம் அதிகாலை நேரங்களில் தலைவலி.
கொஞ்ச நாள் கழித்து சிறுநீர் நுரை அதிகமாகச்செல்கிறது.
என்னிடம் பகிர்ந்த பொழுது உடனடியாக மருத்துவரைப் பார் என்றேன்.

கேட்கவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து இரத்த அழுத்தம் 130ஐ தொடுகிறது. அலைபேசியில் பேசுகிறான்.
மருத்துவரைப் பார் என் கிறேன்.

கேட்கவில்லை.

அடுத்த நாள் மறுபடியும் இரத்த அழுத்தம் 120 என் கிறான்.
டே டாக்டர பாக்காம பிரஸ்ஸர் மட்டும் எங்க பாக்குற னு கேட்டேன்
கோயம்புத்தூரில் முக்குக்கு முக்கு மருந்துக்கடைல வச்சிருக்காங்க னான்.

பார்த்தேன். இவன் எப்படியும் மருத்துவரைப் பார்க்கமாட்டான்.அதனால் ஒரு கொழுப்பு சோதனை எடு என்றேன். அதாவது டமிலில் சொல்லனும்னா லிபிட் புரோபைல் டெஸ்ட்.

கேட்கவில்லை.

ஒரு முறை அவனுக்குத் தலைவலி அதிகமாக மருத்துவரை அவனாகவே சென்று பார்த்திருக்கிறான்.

அவன் உயரத்திற்கு அவன் இருக்க வேண்டிய எடையைக் காட்டிலும் ஐயா 14 கிலோ கூடுதலாக இருந்திருக்கிறார்.
டாக்டர் நான் பரிந்துரைத்த லிபிட் புரோபைல் லை எடுக்கச் சொல்ல அவனும் எடுக்க

கொலஸ்ட் ரால், LDL, ட்ரை க்ளிசரைட்ஸ் எல்லாம் இருக்க வேண்டிய அளவைக்காட்டிலும் மூன்று மடங்கு அதிகம்.

ஒரு செய்தி உங்களுக்கு. உங்களுக்கு உயரத்திற்கான எடையைக் காட்டிலும் அதிகம் உள்ளது என்றால் நீங்களாகவே ஒரு லேப் சென்று லிபிட் புரோபைல் எனச் சொல்லி சோதனை எடுத்துப்பாருங்கள். உங்கள் வக்கு அப்பொழுது தெரியும்.

நண்பனுக்கு சிறுநீர் சோதனை செய்தால் இன்பெக்ஷன்.
இரத்தத்தில் சிறுநீரக வேலைபாட்டிற்கான காரணியைப் பார்த்தால் க்ரியாட்டினின் 2 க்கும் மேலே...( நார்மல் ரேஞ்ச் ஒன்றுக்கும் குறைவாய் இருக்க வேண்டும்.)

முப்பத்திரண்டு வயது அவனுக்கு. பாதிப்பு அறுபது வய்துக்கு இருப்பவருக்கான அளவு.

மருத்துவர் ஒரு முதுகலை அதாவது டமிலில் md  படித்தவர். தானே சிகிச்சை அளிக்கிறேன் என இல்லாமல், சிறுநீரகத்துறை சிறப்பு மருத்துவருக்கு ப் பரிந்துரைக்கிறார். அதுதான் முறை.

நண்பன் பாதிக்கப்பட்ட விதம் என்னவாய் இருக்கலாம் னு கதை சொல்றேன்.

ஐயா என்ன பண்ணிருக்கார். சாப்பிடுவார். நல்ல ஹார்ட் வொர்க்கர் னு சொல்றோம்ல அதுவும் பொண்ணு பாக்கறப்ப, அடுத்த வேலைக்கு சிபாரிசு பண்றப்ப , வீடு வாடகைக்கு விட சிபாரிசு பண்றப்ப் ....சொல்வோமே...அப்படி  ஹார்ட் வொர்க்கர்.
அலுவலக ரீதியில் நல்ல உழைப்பாளி.
கார் உண்டு. அதில் தான் மார்க்கெட்டிங்க்.

ஆக உட்ற் பயிற்சி இல்லை. எடை கூடியது.
போதாதைக்கு அசைவச் சாப்பாடு.
மொத்த கொலஸ்ட் ராலும் அதிகமாகி விட்டது. கொலஸ்ட் ரால் என்பவன் நிறைய கூட்டமாயிட்டா  என்ன செய்வான்.  கொழுப்பு நமக்குத் தேவையான சக்தியைக் கொடுத்ததுபோக அங்க இங்க னு படிவான்.
நண்பனுக்கு படிஞ்ச இடம் கிட்ணி.
கிட்ணில படிய படிய கிட்ணி என்ன பண்ணுவான். யார்டா என் மேல உக்காருறா னு வேலை பார்க்கிறத குறைப்பான்.
விளைவு வெளிய போற யூரின் உள்ள தங்கும். அழுக்கு உள்ள தங்குனா என்ன ஆகும்...அடைப்பு வரும். நல்ல இரத்தம் அழுக்காகும்.

அதுதான் அவனுக்கு ஏற்பட வாய்ப்பு இருந்தது.

இப்ப சார் சிகிச்சைல இருக்காரு. கொஞ்சம் தேறிட்டார்.

ஆமா...கடைசியா யூரின் எப்ப போனீங்க..நுரை அதிகமாகப் போச்சானு பார்த்தீங்களா.....

யோசிங்க...சைரன் ஒண்ணு உள்ளூக்குள்ள ஒலிச்சிட்டே இருக்கட்டும்...

கருத்துகள்

  1. பழனிக்குமார் பக்கங்கள் - எண்ணியதை எழுதுவதற்காக......- சைரன் 4 - மூன்று முறைக்கு மேல் சரிப்பட்டு வராவிடில் நீங்கள் உங்கள் குடும்ப மருத்துவரை மாற்றிக்கொள்ளலாம்.

    ஆனால் மருத்துவரை அடிக்கடி மாற்றும் பழக்கம் வைத்துக்கொள்ளக்கூடாது.- அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள் எங்கள் அருமை Palani Kumar

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....