சைரன் 7
யுனெஸ்கோ என்ற அமைப்பு நமது இந்தியாவைப் பார்த்து ஓர் அறிக்கை சமர்ப்பித்தது.
அதாவது இந்தியாவில் இருக்கும் குழந்தைகளுக்கு வைட்டமின் d3 குறைவாய் இருக்கிறது.
அப்படியாஆஆஆஆஆஆஆ னு வாயைப் பிளக்காதீங்க. இது நடந்து நான்காண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
ஒரு காலத்துல குழந்தை பிறந்ததும் சூரய வெளியில் தினமும் காலையில் காட்டி சன் பாத் எடுத்த இனம் நம்ம நாட்டு இனம். ஆனால் இப்ப பார்த்துக்கொள்ளூங்கள். சூரிய வெளியிலிருந்து கிடைக்கும் விட்ட டி3 நமக்கே பற்றாக்குறையாம்.
குழந்தை பிறந்ததும் மருமகள் மாமியார்ட்ட தர யோசிக்கிறா. மருமகன் தன்னோட மாமியார்ட்ட தர யோசிக்கிறான். அவங்களுக்குள ஒரு எண்ணம் . அவங்க குழந்தைகளைப் பராமரிக்கத்தெரியாது. இன்பெக்ஷன் ஆயிரும் னு.
ஆனா அந்த காலத்துப் பாட்டிமார்களுக்க்த் தெரியும் ஒரு குழந்தையை எப்படி கையாளனும்னு. ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் நமது பேரக் குழந்தைகளைக் கையாள்வதற்கு நாம் வெளி நாட்டிலிருந்து ஆட்களை இறக்குமதி செய்யவேண்டி வரும் என நினைக்கிறேன்.
அந்த காலத்தில் லேக்டோஜென் 1 2 3 னு லாம் எண்ணிக்கைல இருக்காது. சத்து மாவுக் கஞ்சிய அவங்களே தயாரிச்சுட்டாங்க. கண்டிப்பாகத் தாய்ப்பால். ஆறு மாதத்திற்குப் பிறகு தாய்ப்பால் மற்றும் சத்து மாவுக் கஞ்சி.
பெரு நகரங்களில் அபார்ட்மெண்ட் வீடுகளில் ஏசி ரூமுக்குள் அடைத்து வைத்தால் விட்டமின் டி 3 குறைபாடு வரத்தான் செய்யும்.
நாகரிகம் என்ற பெயரில் நாம் நமது கலாச்சாரத்தையும் அது சார் பெருமைகளையும் மருத்துவமுறைகளையும் அழித்துக்கொண்டு வருகிறோம்.
மெதுவாக நம் பதிவு குழந்தைகளின் வளர்ப்பு முறை நோக்கி மாறுகிறது, குழந்தைகளுக்கான மருத்துவமுறைகளை அனைவரும் கண்டிப்பாக உன்னிப்பாக க் கவனித்து தான் வருகிறோம்.
நீங்கள் ஒரு பயணத்தில் இருக்கிறீர்கள். உங்கள் ஏழு மாதக் குழந்தையும். உங்கள் பயண நேரம் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக.
பயணம் ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் உங்கள் குழந்தைக்குக் காய்ச்சல் வருகிறது. என்ன செய்வீர்கள்.
100 101 102 103 104 டிகிரி என காய்ச்சல் அதிகமாகி விட்டால் குழந்தைக்கு என்ன ஆகும் எனத் தெரிந்தவரா நீங்கள்.
சில குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகமாகி வலிப்பு வரும் என்பது தெரியுமா உங்களுக்கு.
எவ்வளவு வேகமாகக் காய்ச்சல் வரும் என்பது நமக்குத் தெரியாது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் உங்கள் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை சாயங்காலங்களில் உங்கள் மருத்துவர் இருக்க மாட்டார். என்ன செய்வீர்கள்.
வயிற்றுப்போக்கு ஒரு முறை போனாலே நடுத்தர வய்தினர் சோர்வடைகிறோமே...குழந்தை என்ன செய்யும்.
உடனே சோர்வடையும். காய்ச்சல் வரும் என்பது உங்களுக்குத் தெரியுமா. குழந்தைகளின் வயிற்றுப்போக்குக் கண்டிப்பாகக் கவனிக்க வேண்டிய விசயம்.
உங்கள் மருத்துவரிடம் இப்பொழுதே கேட்டு நீங்கள் குழந்தை வைத்திருக்கும் பட்சத்தில் வீட்டில் ஒர் தெர்மா மீட்டர் வைத்துக்கொள்ளுங்கள். காய்ச்சல் எப்பொழுது 100.4 க்கு மேல் போகிறதோ உடனே மருத்துவரைப் பாருங்கள். அது போல் ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் காய்ச்சல் வந்தால் என்ன செய்யலாம் என உங்கள் மருத்துவரிடம் முன்னெச்சரிக்கை மருந்துகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். வயிற்றுப்போக்கு வரும் பட்சத்தில் என்ன மருந்து உடனடி அவசியம் என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
வேலை நாட்களில் உங்கள் மருத்துவர் இருப்பார். பயம் இல்லை. விடுமுறை நாட்களில் இரவு நேரங்களில் அவசர உதவி என உங்கள் மருத்துவரின் தொலைபேசி எண் கிளினிக் எண் என வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
சரியானத் தடுப்பூசிகளை அந்த அந்த நேரத்திற்கு போட வேண்டும். சில நபர்கள் பழிக்கும் மருந்து நிறுவனங்களில் சில ஒரு அறிவிப்பு செய்துள்ளது. சில குழந்தை மருத்துவமனைகளில் அந்த அறிவிப்பு இருக்கும். உங்கள் குழந்தை பெயர் பிறந்த தேதி இவற்றை குறிப்பிட்ட எண்ணுக்கு sms அனுப்பினால் உங்கள் அலைபேசிக்கு எந்த் நாளில் என்ன தடுப்பூசி போட வேண்டும் என்று நினைவு படுத்துகிறது. குறிப்பு: அவர்கள்து பிராண்டைப் போட வேண்டும் என அறிவுறுத்தாது. பொது நலன் கருதியும் குழந்தைகள் ஆரோக்கியம் வேண்டியும் சில நிறுவனங்கள் செய்கின்றன்.
ஏன் என்றால் இப்பொழுது இருக்கும் இயந்திர வேக வாழ்வில் குழந்தைக்கு போடும் தடுப்பூசிகளை நினைவு வைத்துக்கொள்ளுதல் சிரமம் சில் பெற்றோர்களுக்கு.
அதைச் செய்யலாம்.
உங்கள் குழந்தையின் அறிவு துடிப்பு வேகம் ஆரோக்கியம் எல்லாம் அந்தத் தாயின் கையில் தான் இருக்கிறது. அதுவும் கர்ப்பத்திலிருந்து....
நாளை சைரன் 8 பிரசவமாகும்...
கருத்துகள்
கருத்துரையிடுக