சைரன் 2

நாம் ஒரு மருத்துவமனையை எப்படித் தேர்ந்தெடுப்பதுஎன்பது தான் கேள்வி.

அதற்கு முன் ஒரு மருத்துவமனையை நாம் எப்படி நிராகரிக்கிறோம் எனத் தெரிந்து கொள்ளலாம்.

அ) அவைங்க நிறைய காசு புடுங்குவாய்ங்க...( இது நாமாகவே நேரடியாகவோ, நண்பர் உறவினர் மூலம் கேட்டோ தெரிஞ்ச விசயம்)

ஆ) அந்த ஆஸ்பத்திரி போனா ரொம்ப லேட் ஆகும்...

இ) அந்த ஆஸ்பத்திரி போனா  டெட் பாடி தான் வெளிய வரும்.

இதுலாம் ஒரு காரணம். நாம் ஏன் ஒரு மருத்துவமனையை நிராகரிக்கிறோம் என்பதற்கு.

தேர்ந்தெடுக்க என்ன காரணம் தெரியுமா..

அ) நம்பிக்கை
ஆ) ஏக்கம்.

இது மட்டும் தான். எப்படியும் காப்பாத்திருவாங்க என்ற நம்பிக்கையும், எப்படியாவது காப்பாத்திரமாட்டாங்களா என்ற ஏக்கமும் தான்.

ஆக, ஒரு மருத்துவமனையைத் தேர்ந்தெடுக்க நமக்கு கொஞ்சம் பொறுமையும் ஒரு விழிப்புணர்வும் தேவை.
ஒரு மருத்துவமனையைத் தேர்ந்தெடுக்க நாம் செய்ய வேண்டியவை.

முதலில் நமக்கு என்ன நோய் என்பதைப் பற்றி ஆராய வேண்டும்.

உதாரணத்திற்கு, உங்களுக்கு சர்க்கரை நோய். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் ஊரில் சர்க்கைரை நோய்க்கு மருத்துவம் செய்யும் மருத்துவர் யார் சிறந்தவர் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு ஊரில் ஒரு மருத்துவமனை எல்லா வசதிகளும் கொண்டதாக இருக்கும். ஆனால் சர்க்கைரை நோய்க்கு மட்டும்  பிரபலமாகாத மருத்துவர் இருப்பார். அங்கு போய் நீங்கள் சிகிச்சை மேற்கொள்வது கிட்டத்தட்ட ரிஸ்க் தான்.
அவர் உங்களை வைத்துப் படித்துக்கொள்ளும் அளவிற்கு மருத்துவர் இருந்தால் என்ன செய்வது.

உங்களுக்கு நரம்பு மண்டலப் பிரச்சினை. கை கால் நடுங்குகிறது. கால் நரம்பு இழுக்கிறது. இல்லை ஒற்றைத் தலைவலி. இப்படி ஏதோ. உங்கள் ஊரில் யார் நரம்புமண்டல நிபுணர் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இதை எப்படித் தெரிந்து கொள்வது.

இதற்கு எல்லாம் நமக்குத் தேவை ஒரு குடும்ப மருத்துவர். அதாவது family physician.  இவர்கள் ஜெனரல் பிராக்டிஸ் பண்ணும் மருத்துவர் என்று கூட அழைக்கலாம். இவர்களுக்குத்தான் எல்லாம் தெரியும். அதாவது அனுபவ அறிவு.
ஒரு படிப்பு அறிவை விட அனுபவ அறிவு இவர்களுக்கு அதிகம். நோயின் தன்மையை எளிதில் கண்டறிந்து கொள்ளும் திறன் அதிகம்.
பொதுவாக மருத்துவருக்கு டயாக்னஸிஸ் ஆற்றல் தான் வேண்டும். ஒரு அறிகுறியைப் பார்த்ததும் அது என்ன நோயாக இருக்கலாம் எனக் கண்டறியும் திறன்.
உதாரணமாக எனக்கு ஏற்பட்ட அனுபவம். ஏற்கனவே பதிந்த ஒரு பதிவுதான்.
என் அம்மா பதினாறு வருட கால சர்க்கரை நோயாளி.
 மாத்திரைகள் எடுக்கிறார்.
 இரத்த அழுத்தம் எல்லாம் இல்லை. ஒரு நாள் வயிற்று வலி. அல்ஸர் குறைந்த அளவு பாதிப்பு உண்டு என்பதால் எப்போதும் பார்க்கும் சர்க்கரை மருத்துவரைப் பார்க்கிறார்.
 அல்ஸர் டானிக் தருகிறார்.
 வலி குறைந்தாலும். அடங்கவில்லை.
அடுத்த மாதம் அவ்வப்பொழுது வயிற்றுவலி என்ற அம்மாவிற்கு அந்த மருத்துவர் ஜீரணப் பிரச்சினை என் கிறார்
 ஒரு செரிமான டானிக் தருகிறார்.
 குடல் கொஞ்சமாய் இறக்கம் இருக்கிறது. அதாவது mild hernia. ஆனால் பிரச்சினை இல்லை என் கிறார்.
 பத்து பன்னிரெண்டு வருடமாக ஒரு மருத்துவரைப் பார்க்கிறோம். நம்பிக்கை இல்லாமலா.
 நம்புகிறோம். அம்மாவிற்கு ஹெர்னியா இருப்பதால்
ஸ்கேன் எடுக்கலாமா எனக்கேட்டேன். தேவையில்லை. இருந்தாலும் பார் என்றார். அதில்  எல்லாம் நார்மல் என்பதால் வந்து விட்டோம்.

திடீரென அம்மாவிற்கு தீராத வயிற்றுவலி. காரம் சாப்பிட்டதால் வந்த விளைவு என்று நான் யோசித்தேன். மூன்று மாதமாக ஒரே பிரச்சினை .தீரவில்லை.
 ஏன் நாம் மறு பரிசீலனை என மறு ஆலோசனை கேட்கக்கூடாது என ஒரு பெண் மருத்துவரைப் பார்க்க அம்மாவை அழைத்துச் செல்கிறேன்.
பெண் மருத்துவர். வயிற்றைத்தொட்டுலாம் பார்ப்பார் என அம்மாவிற்கு திருப்த்யும் கூட. அல்ஸர் மாத்திரை தருகிறார்.

 ஹெர்னியாவினால்  பிரச்சினை இல்லை என்றார் மருத்துவர்.
 இரண்டு நாடகள் கழித்து மறுபடியும் வயிற்றுவலி.
அந்த பெண் மருத்துவரைப் பார்க்கிறோம்.
அந்த மருத்துவர் அம்மாவைப் பார்த்துவிட்டு சிறுநீர் கழிக்கையில் எரிகிறதா என் கிறார். அம்மா இல்லை என் கிறார்.
மருத்துவருக்கு நான் மருத்துவத்துறை என்பது தெரியும் ஆதலால்.,

பழனிக்குமார் எனக்கு என்னமோ யூரினரி இன்பெக்ஷன் இருக்கும் னு நினைக்கிறேன் எனக் கூறினார்.
ஆனா அப்படி ஒன்னும் அம்மா இல்லனு சொல்றாங்களே டாக்டர் னு சொன்னேன்.
என் திருப்திக்கு நீங்கள் இரத்த சோதனையும் சிறுநீர் சோதனையும் எடுங்க என மருத்துவர் கூறினார்.
எடுத்தார்கள்.

நம்ப மாட்டீங்க கிட்டத்தட்ட அம்மா கிட்னி பெயிலியர் நோயாளியாக மாற இருந்தார்கள்.
இத்தனை காலமாக அது பற்றி எந்த அறிகுறியும் எங்களுக்குத் தெரிந்ததே இல்லை.
 சிறுநீரக வேலைத்திறனைச் சொல்லும் கிரியாட்டினின் என்ற காரணி ஒன்றுக்கும் குறைவாக இருக்க வேண்டும். அம்மாவிற்கு அப்பொழுது அது மூன்றைத்தொட்டு விட்டது.

இப்பொழுது பாருங்கள் மூன்று மாதத்திற்கு முன்பே அம்மாவிற்கு வந்த வயிற்றுவலி அல்ஸர் இல்லை. சிறுநீரகச் செயலிழப்பிற்கான ஆரம்பம்.
ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் உடலில் ஏற்படும் வலி காய்ச்சல் என்பது ஒரு அறிகுறி. உடம்பு நம்மிடம் அதன் குறைபாட்டைச் சொல்லும் ஒரு மொழி தான் வலியும் காய்ச்சலும். நாம் அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நாங்கள் எடுத்த ஸ்கேனில் சிறுநீரகம் பார்க்க நார்மலாகத்தான் இருந்தது. அது தோற்றத்தில் அப்படியே இருந்து செயலில் மட்டும் குறைபட்டுள்ளது.

அந்த பெண் மருத்துவர் ஒரு மகப்பேறு மற்றும் குழந்தையின்மைக்கானச் சிகிச்சைத் தரும் ஸ்பெஸலிஸ்ட். ஆனால் அவரது டயாக்னஸிஸின் வேகம் தான் அவரது திறன். ஒரு சிறிய சிறுநீர் பரிசோதனை செய்திருந்தால் முடிவு கிடைத்திருக்கும். நோயின் வீரியத்தைக் கட்டுப்படுத்திருக்கலாம். அதை இந்த மருத்துவர் செய்திருந்தார்.

சோதனை முடிவைப் பார்த்து அந்த மருத்துவர் சிறுநீரகத்துறை மருத்துவர்களை பரிந்துரைக்கிறார். அவர் யாரைப் பார்க்க வேண்டும் என் கிறாரோ அதாவது யூராலஜி இருக்கிறது. நெப்ராலஜி இருக்கிறது. அவர் சொன்ன நெப்ராலஜி மருத்துவரைப் பார்த்தோம்.

அப்படி நமக்கு ஒரு குடும்ப மருத்துவர் வேண்டும். அவருக்குத்தான் எந்த நோய்க்கான ஆரம்ப அறிகுறிகளும் அத்துப்படியாகத் தெரியும். கிட்டத்தட்ட எல்லா நோய்கள் பற்றியும் தெரிந்து வைத்திருப்பார். அவரது அறிவுறுத்தல் படி தான் நாம் செல்ல வேண்டும்.

சரி. அதில் அவர் சரியான முறையை அல்லது சரியான வழிகாட்டியாய் செயல்படுகிறாரா என்பது உங்களுக்குத் தெரியுமா....

யோசிங்க...நாளைக்குப் பார்க்கலாம்....

சைரன் ஒலிக்கும் இன்னும்.....


கருத்துகள்

  1. சைரன் நன்றாக ஒலிக்கிறது. உங்கள் அனுபவத்தின் மூலம் ஒலிப்பதால் அழுத்தமாகவும் எச்சரிக்கை மணியாக ஒலிப்பது மகிழ்ச்சி. வழக்கம்போல் நடை பிரமாதம். சைரன் ஆம்புலன்ஸ் ஆக வலம் வருகிறது. தொடர வாழ்த்துக்கள் பழனி.

    Ragavendran

    பதிலளிநீக்கு
  2. பழனிக்குமார் பக்கங்கள்
    எண்ணியதை எழுதுவதற்காக......- சைரன் 2 = நிஜம். நல்ல குடும்ப மருத்துவர் வேண்டும். Shopping போவது போல நாமாக Specialist ஐ தேடிப்போகக் கூடாது - எனது பக்கத்தில் பகிர்கிறேன். அருமை பழனிக்குமார்.

    பதிலளிநீக்கு
  3. சைரன் இன்னும் ஓங்கி நீண்ட காலம் ஒலிக்கட்டும்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....