இடுகைகள்

ஆகஸ்ட், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கானாகுமாரு...

கொஞ்ச நாளைக்கு முன்னாடி டி.வி.எஸ் சேம்ப் கட்டுரை எழுதிருந்தேன். அதுல வந்த சில கதாபாத்திரங்களோட இன்னோரு அனுபவம். நான் கணேஷ் கணேஷ்குமார் அப்புறம் ராபர்ட் அண்ணன் பிரேம்னு படிப்பாளி. இவைங்களோட தான் அந்த அனுபவம். குறிப்பு மேலே கண்ட பயபுள்ளைக எல்லாம் இப்ப பத்தாம் வகுப்பு படிக்குதுக...ராபர்ட் அண்ணே மட்டும் பதினொண்ணு. நான் கணேஷ் கணேஷ்குமார் எல்லாம் ஒரே இடத்தில் ட்யூஷன். அது எங்க னு அப்புறம் சொல்றேன். அதுக்கு முன்னாடி கணேஷயும் கணேஷ்குமாரையும் வேறுபடுத்திக்காட்ட கணேஷ்குமார கானாகுமாருனு கூப்பிடுவோம்...குழப்பாதுல.. ட்யூஷன் நல்லாத்தான் போனது. ஒரு நாள் தான்//// ஒரே நாள் தான் ஒன்பதாம் வகுப்பு படிச்ச ஹெலன் குட்டைப் பாவாடை போட்டு வந்தது . அன்னைக்கு பிறந்த நாளாம்...சாக்லேட் கொடுத்தது.  நானும் கணேஷும் தின்னுட்டு பேப்பரை க் கீழ போட்டுட்டோம். இந்த பாழாப்போன கானாகுமார் மட்டும் அந்தப் பேப்பரைத் தனியா சட்டைப் பையில வச்சுக்கிட்டான். ஏ என்னடா....னு கேட்டேன்... போ...மாப்ள....னு வெக்கப்படுறான் கானாகுமார்.  உண்மையிலையே வெளங்கல..அவன் வெக்கப்பட்டது... டே என்னடா...னு மறுபடியும் கேட்டேன்...

யானை

படம்
மணி மதியம் ஒன்று. முதுமலை வனச்சரக அலுவலகம். நாங்க நாலு பேர். காட்டுக்குள்ள வனத்துறைச் சார்பாக அழைத்துச் செல்லும் வண்டி பற்றி விசாரித்தோம். மதிய உணவு வேளை ஆனா இருபது பேர் வந்துட்டா வனத்துறையின் வண்டி வரும். வெளியே நிறைய தனியார் ஜீப்கள் இருக்கு. அவர்கள் எந்நேரமானாலும் அழைத்துச் செல்கிறார்கள். ஆனால் நம்ப வேண்டாம். பாதுகாப்பில்லை என அரசு சார்பாக அறிவிப்பு இருக்கு. எதுக்கு வம்புனு இருபது பேர் கூடும் வரை காத்திருந்தோம். நகர் புறத்துல மெயின் ரோட்டுல மினி பஸ்ஸுக்கும் ஷேர் ஆட்டோக்கும் ஆள் சேர்ற வரைக் கத்துவாங்கள...அது மாதிரி கத்துனாலும் ஆள் அவங்களாத்தான் வரனும். கொஞ்ச நேரம் கழிச்சு... சில கன்னடர்கள் வந்தார்கள். பதினாறைத் தொடுவதற்கு அரை மணி நேரம் பிடித்தது. உயரமான குன்றில்தான் அந்த வன அலுவலகம் இருந்தது. அங்கிருந்து பார்த்தால் கண்ணுக்கெட்டும்வரை காடு.மலை. பசுமை. பெரிய மரங்கள். அடர்ந்த கிளைகள். அமைதி. ஒரு ஸ்வராஜ்மஸ்தா வண்டி ஏற்பாடு ஆனது. அமர்ந்து கொண்டோம். ஜன்னல் முழுக்க வலை. கேமராவை தயாராக வைத்துக்கொண்டேன். அறிவிப்பில் பார்த்தேன். யானைகள் புலிகள் மான்கள் மயில் குரங்குகள் காட்