இடுகைகள்

ஜூலை, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூங்குறியா.....

தூக்கம் என்பது என்ன. ஒரு மனிதன் ஆரோக்கியமான வாழ்விற்கு எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும். தூக்கத்தில் மூளை என்ன வேலை செய்கிறது இப்படி அறிவியல் சம்பந்தமான கட்டுரைய எதிர்பார்க்குற தோழர்கள்லாம் அடுத்த தெரு வழியா போகலாம். இது நான் பார்த்த உணர்ந்த தூங்கிய தூக்கத்தைப் பற்றியது. பொதுவாக தூங்கனும்னா சில டெக்னிக் இருக்கு. மாத்திரை போடுவானுக. டி.வி பார்ப்பானுக. புக் படிப்பானுக. . இரவு படுக்கைல மல்லாக்க படுத்தாத்தான் தூக்கம் வரும் இல்லாட்டி குப்புறக்கா படுத்தாத்தான் தூக்கம் வரும்ன்றது லாம் வேற கணக்கு. எனக்கும் தூக்கத்திற்கும் உள்ள பல தருணங்களைத் தொகுத்தா இப்படி வருது. கரிமேடு மார்க்கெட் பகுதில முத்து ஸ்கூல் இருக்கு. அதான் நம்ம ஆரம்பப்பள்ளி. அஞ்சாப்பு வரை அங்க தான் படிச்சேன். (அஞ்சாப்பு என்பது ஐந்தாம் வகுப்பு என்று அர்த்தம்..யுவ புரஸ்காருக்குலாம் ட்ரை பண்ணாதனால பேச்சு டமிளில எழுதுறேன்..) அஞ்சாவது படிக்கிறப்ப ஆயுத லட்சுமி டீச்சர் தான் க்ளாஸ் டீச்சர். உடனே தமிழுக்கு ஒருத்தங்க ஆங்கிலத்துக்கு ஒருத்தங்கனு நினைக்காதீங்க. அவங்க தான் ஆள் இன் ஆல். ஆள் ரொம்ப குட்டையா இருப்பாங்க. ஒல்லியா இருப்பா

ஜாதக கட்டம்

உங்களுக்கு ஒரு கதை சொல்றேன். இதை சிறுகதையாகக்கூட எழுத முயற்சி பண்ணேன். ஆனால் நிஜம் கொடுக்கும் அளவிற்கு ஒரு சிறுகதை வியப்பையும் அதிர்ச்சியையும் தருமா என்பது என்னால் முடியாத காரியம். அதற்கு முன்னதாக சினிமாவில் பயன்படும் எடிட்டிங் வித்தையை எழுத்தில் செய்வது இயலாத காரியம். இருந்தாலும் உங்கள் கற்பனைகளை ஒரு ரஜினிகாந்த் படப் பாட்டு போல வேக வேகமாக ஓடச்செய்து படித்தால் ஓரளவிற்கு காலத்தை தாண்டி பார்க்கலாம். முதலில் பள்ளிக்காலம். எப்பொழுதும்போல ஏரியாக்குள்ள நண்பர்கள் இருப்பார்கள். அப்படி எனக்கும் உண்டு. ஒரு நண்பன் வீட்டிற்கு அடிக்கடி போவது உண்டு. அதே பகுதியில் சில நண்பர்கள் உண்டு,. அவர்களும் எனக்குப் பழக்கம். எப்பொழுதும் அவுட் ஆஃப் பிரேமில் சில ஆட்கள் இருப்பார்கள். குறிப்பாக நாங்க எங்க ஏரியால கிரிக்கெட் விளையாடுறப்ப விளையாட மாட்டானுக. வந்து நிப்பானுக. பார்ப்பானுக. சிரிப்பானுக. பேசமாட்டானுக. அப்படி அங்க சில கதாபாத்திரம் வரும். அதுல ஒருத்தன் எங்க வயசு செட் இல்ல. சின்ன பையன். விளையாடக்கூப்பிட்டாலும் வரமாட்டான். அவனுக்கு அவுட் ஆஃப் பிரேம்னு வச்சுக்கோங்க. முடிஞ்சது பள்ளி எபிசோட். கல்லூரி காலம். அ

பைட்ஸ் ஆஃப் பீ.கே

பைட்ஸ் ஆஃப் பீ.கே முதுகலை  வேதியியல் துறை இரண்டாமாண்டு. மத்த பி.ஜி. சப்ஜெக்டோட ஒப்பிடுறப்ப கெமிஸ்ட்டிரி கொஞ்சம் கஷ்டம். ஏன்னா மத்த துறைகளுல சப்ஜெக்ட் கஷ்டம்னாலும் ஆசிரியர்கள் இலகுவா இருப்பாங்க. இல்லாட்டி சப்ஜெக்ட்டே இலகுவா இருக்கும். ஆனா மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளுல பி.ஜி கெமிஸ்ட்டிரிக்கு போய் பாருங்க. ஸ்டாஃபும் டஃப். சப்ஜெக்ட்டும் டஃப்பு... அப்படி என் காலேஜ்ல இருந்தப்ப ஆர்கானிக், இன் ஆர்கானிக், பிஸிக்கல்னு மூணு சப்ஜெக்ட்டுக்கும் இரண்டு இரண்டு புரொஃபசர்கள் வருவாங்க. அப்படி ஆர்கானிக் சப்ஜெக்ட்டுக்கு ஒரு சாரும் ஒரு மேடமும் வந்தாங்க. சார் தான் துறைத்தலைவர். அவர் என்னமோ ஆப்பிள கீழ இருந்து எடுத்துப் பார்த்த நியூட்டன் நேரா இவர்ட்ட தான் கொடுத்து ஃபார்முலா டெரைவ் பண்ணச் சொன்ன மாதிரி பில்டப் கொடுப்பாப்புடி. மனுசன சிரிக்கச்சொன்னாக்கூட டெரராத்தான் இருப்பாப்புடி. ஆனா மேடம் அப்படி இல்ல. பி.ஜெயந்தி மேடம். நாங்க பி.ஜெ மேடம்னு சொல்வோம். அவங்க திட்டுனா கூட வாணி ஜெயராம் வாய்ஸ்ல மெலோடியஸா இருக்கும். நமக்கு உரைக்கவே உரைக்காது.(இல்லாட்டினாலும்) அவ்ளோ சாப்ஃட். ஒரு முறை இரண

முத்த தினம்...

அலைகளை முத்தமிட்டால்  கடல் தீப்பிடிக்கும் வித்தை அந்த முத்தம்... மழை நனைத்து வானவில் கரைந்தொழுகிய மேகத்தருணமது... ஒவ்வொரு முறையும் அது முதல்முறையெனத் தீண்டலும் ஒவ்வொரு முறையும் அதுதான் கடைசி எனத் தூண்டலுமாய் ஒருவரையொருவர் விழுங்க எத்தனித்துத் தோற்றுப்போன  மகா உன்னதத் தருணங்களில் அதுவுமொரு தருணம்... நாளையென ஒரு நாள் குறித்து ஓரிடம் குறித்து வெறும் முத்தமெனப் பார்த்தபோது  தெரிகிறது  முத்த ஈரத்தோடு ஒட்டிக்கொண்ட  ப்ரிய தசையும் உணர் குருதியும்... ஒரு குறுஞ்செய்திக்கும் மறு செய்திக்குமிடையே ஒரு மௌனத்தின் பறக்கும் முத்தம்  வந்து சேரும்  மாயத் தருணங்களைப் பிரசவித்து வெறும் விழி மூலம் இன்னொரு  முத்தம் பகிரும் நீ... எப்பொழுதும் என்னிதழ் மெல்லும் மெல்லினக்காரி... விரலைக் கண்டு வீணையொன்று தன்னைத்தானே  மீட்டும்  ஏக்க ராகக்காரனின் தாகந்தீருமொரு முத்தத்தில்... நேற்றைக்குப் பிறந்த கன்றொன்றின் பிடிபடாத மேய்ச்சலில் புல்லொன்றின் மேனி முழுக்க  வாயில் விரவி மண்ணை விட்டுப்