முத்த தினம்...

அலைகளை
முத்தமிட்டால் 
கடல் தீப்பிடிக்கும்
வித்தை
அந்த முத்தம்...

மழை நனைத்து
வானவில்
கரைந்தொழுகிய
மேகத்தருணமது...

ஒவ்வொரு முறையும்
அது முதல்முறையெனத்
தீண்டலும்
ஒவ்வொரு முறையும்
அதுதான்
கடைசி எனத்
தூண்டலுமாய்
ஒருவரையொருவர்
விழுங்க எத்தனித்துத்
தோற்றுப்போன 
மகா
உன்னதத் தருணங்களில்
அதுவுமொரு
தருணம்...

நாளையென
ஒரு நாள் குறித்து
ஓரிடம் குறித்து
வெறும் முத்தமெனப்
பார்த்தபோது 
தெரிகிறது 
முத்த ஈரத்தோடு
ஒட்டிக்கொண்ட 
ப்ரிய தசையும்
உணர் குருதியும்...

ஒரு குறுஞ்செய்திக்கும்
மறு செய்திக்குமிடையே
ஒரு மௌனத்தின்
பறக்கும் முத்தம் 
வந்து சேரும் 
மாயத் தருணங்களைப்
பிரசவித்து
வெறும் விழி மூலம்
இன்னொரு 
முத்தம் பகிரும் நீ...

எப்பொழுதும்
என்னிதழ்
மெல்லும்
மெல்லினக்காரி...

விரலைக் கண்டு
வீணையொன்று
தன்னைத்தானே 
மீட்டும் 
ஏக்க ராகக்காரனின்
தாகந்தீருமொரு
முத்தத்தில்...

நேற்றைக்குப் பிறந்த
கன்றொன்றின்
பிடிபடாத மேய்ச்சலில்
புல்லொன்றின்
மேனி முழுக்க 
வாயில் விரவி
மண்ணை விட்டுப் 
பறிக்காது 
விட்டுவிடும் படியாய்
ஒரு முத்தமென...

மொத்த மேகத்திற்கும்
ஒரு துளி

முற்றும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8