பைட்ஸ் ஆஃப் பீ.கே

பைட்ஸ் ஆஃப் பீ.கே

முதுகலை  வேதியியல் துறை இரண்டாமாண்டு.
மத்த பி.ஜி. சப்ஜெக்டோட ஒப்பிடுறப்ப கெமிஸ்ட்டிரி கொஞ்சம் கஷ்டம். ஏன்னா மத்த துறைகளுல சப்ஜெக்ட் கஷ்டம்னாலும் ஆசிரியர்கள் இலகுவா இருப்பாங்க. இல்லாட்டி சப்ஜெக்ட்டே இலகுவா இருக்கும். ஆனா மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளுல பி.ஜி கெமிஸ்ட்டிரிக்கு போய் பாருங்க. ஸ்டாஃபும் டஃப். சப்ஜெக்ட்டும் டஃப்பு...
அப்படி என் காலேஜ்ல இருந்தப்ப ஆர்கானிக், இன் ஆர்கானிக், பிஸிக்கல்னு மூணு சப்ஜெக்ட்டுக்கும் இரண்டு இரண்டு புரொஃபசர்கள் வருவாங்க. அப்படி ஆர்கானிக் சப்ஜெக்ட்டுக்கு ஒரு சாரும் ஒரு மேடமும் வந்தாங்க. சார் தான் துறைத்தலைவர்.
அவர் என்னமோ ஆப்பிள கீழ இருந்து எடுத்துப் பார்த்த நியூட்டன் நேரா இவர்ட்ட தான் கொடுத்து ஃபார்முலா டெரைவ் பண்ணச் சொன்ன மாதிரி பில்டப் கொடுப்பாப்புடி. மனுசன சிரிக்கச்சொன்னாக்கூட டெரராத்தான் இருப்பாப்புடி.
ஆனா மேடம் அப்படி இல்ல. பி.ஜெயந்தி மேடம். நாங்க பி.ஜெ மேடம்னு சொல்வோம். அவங்க திட்டுனா கூட வாணி ஜெயராம் வாய்ஸ்ல மெலோடியஸா இருக்கும். நமக்கு உரைக்கவே உரைக்காது.(இல்லாட்டினாலும்)
அவ்ளோ சாப்ஃட்.
ஒரு முறை இரண்டு நாள் லீவு அவங்க. இரண்டாவது நாள் தான் தெரிஞ்சது. அவங்க வேறொரு கல்லூரிக்கு இன்டர்வியூக்கு போயிருக்காங்கனும், அங்க செலெக்ட் ஆயிட்டாங்கனும், இங்க ரிசைன் பண்ணப்போறாங்கனும்.
எங்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். கொஞ்சம் சாஃப்ட்டான புரோஃபஸர் போயிட்டா அவுங்க சப்ஜெக்ட நம்ம டெரர் எடுத்துருவாரோனு.
மூணாவது நாள் பி.ஜே மேடம் கடைசி வகுப்பா க்ளாஸ் வந்தாங்க. அவங்களோட கடைசி க்ளாஸ்னு ஏகப்பட்ட சென்டிமெண்டா பேசுனாங்க. பசங்க நாங்க என்னடானா இந்தம்மா போயிருச்சு இன்னைக்கு வேற யாரோனு இருந்தா இந்தம்மா வந்ததும் நீங்க போகலையா ன்ற மாத்ரியே ரியாக்ட் பண்ணோம்.
அந்தம்மா வந்துட்டு , இதான் என்னோட கடைசி க்ளாஸ், இனி மேல் உங்கள என்னால பாக்க முடியுமா, இந்த க்ளாஸ்ரூம்ல வந்து நிக்க முடியுமா, இந்த போர்ட்ல எழுத முடியுமா, ஒரு தடவை எழுதி பாத்துக்கவானு சொல்லி சாக்பீஸ் எடுத்து என்னமோ எழுதுச்சு. இந்தம்மா பேச பேச கூட படிக்கிற பொண்ணுங்க நாலு பேர் அழுக ஆரம்பிச்சிருச்சுக.
அவ்வளவு உருக்கமா பேசுன மாதிரி தெரியல.இருந்தாலும் லேடிஸ் சென்டிமெண்ட்டுக்கு மரியாதை கொடுத்து பசங்க நாங்களும் உம் போட்டு கேட்டுட்டு இருந்தோம்.
அந்தம்மா எங்கள தூக்கி வச்சு சொல்ல ஒரு புரூடா விட்டுச்சு.

நான் போற காலேஜ் இன் ஜினியரிங் காலேஜ் ப்பா. எல்லாம் யுஜி பசங்க. பயங்கர சேட்டை பண்ணுவாங்க போல. உங்கள மாதிரி சொல் பேச்சு கேக்குற பசங்களா இருக்க மாட்டாங்க போல. நேத்து இன்டர்வியு போயிட்டு என் வீட்டுக்காரர் அலுவலகத்துக்குச் சொல்ல காலேஜிக்கு வெளியே இருக்குற போன் பூத் போனேன் பா. அங்க வேல பாக்குற பொண்ண்ட்ட பேசுறதுக்காக அந்த காலேஜ் பசங்க மூணு பேரு வந்திருப்பாங்க போல. என்னைப் பார்த்ததும் அவனுக வெளிய போயிட்டானுக. நான் என் வீட்டுக்காரர் அலுவலகத்துக்கு ட்ரை பண்ணா லைன் கிடைக்கல. வெளிய வந்துட்டேன். நான் வெளிய வந்ததும் அவனுக மறுபடியும் உள்ள போனானுக. கொஞ்ச நேரம் கழிச்சு நான் மறுபடியும் உள்ளே போனேன். என்னை ப் பார்த்ததும் ஒருத்தன் சொல்றான், " என்னடா மாப்ள, லைன் கிடைக்குறதுக்குள்ள குறுக்கால குறுக்கால வராய்ங்க...
அதுக்கு இன்னொருத்தன் சொல்றான்..'விடுறா மாப்ள வேல கிடைச்சு நம்ம காலேஜ் தான வரனும்.அப்ப பாத்துக்கலாம்.'னு
இப்படி சொல்றானுக ப்பா னு பி.ஜே மேடம் சொல்லிட்டு இருக்குறப்பவே...நான் சும்மா இருக்காம

"ஏன் மேடம், அப்புறம் லைன் கிடைச்சதா இல்லையா.." னு கேட்டேன்..

ஒட்டு மொத்த க்ளாஸும் சிரிச்சது...

பி.ஜே மேடம், இந்த மாத்ரி டைமிங் ஜோக்குலாம் நான் மிஸ் பண்ணுவேன்னு ஒரு விசு படத்து டயலாக் அடிச்சது..

ஆனா நான் உண்மைல கேட்டது அந்தம்மா அவுக வீட்டுக்காரருக்கு போட்ட லைன்ன தான்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....