இடுகைகள்

ஜூன், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்த இரவில் என்ன செய்கிறாய்

இப்பொழுதிந்த இரவில் என்ன செய்கிறாய்.. தூங்க மறுக்கும் குழந்தையின் கார்ட்டூனில் நீ லயித்துப் போகலாம் உன்னை விளையாட அழைக்கும் உன் செல்ல நாய்க்குட்டியினை இரவெனச் சொல்லி தலையில் செல்லமாகக் கொட்டலாம்... வேறு என்ன செய்வாயிந்த இரவில்.. தீர்ந்து போன சோற்றுப்பானைக்கு ஒரு டம்ளர் தண்ணீர் பாலைத் தயிராக்கும் பாக்டீரியாக்கள் புணர வழிவகை.. ஒரு புத்தகம் ஒரு டைரி அதிலுன் நினைவு இல்லை வரவுசெலவு இதைத் தானே செய்வாய் இந்த இரவில்... அன்பே! என்னிரவை நீ பார்த்ததே இல்லை.. உன் தலையணையில் பாதியிடம் பிடித்துக்கொண்டு வெறும் வானத்தில் நிலாவையும் வானவில்லையும் மனத்தூரிகையில் வரையுமிரவு அல்ல இது.. வெளிச்சக் கொலை முடிந்தப் பின் இன்னொரு காவிற்குக் காத்திருக்கும் இரவின் விரல்பிடியில் சிக்குண்டுத் தவிக்கும் என் தூக்கக் கழுத்து அது.. உன்னிடம் உன்னுலகம் யோசித்து உன் ப்ரிய விளக்கிலிருந்து ஒரு சிட்டிகை அகல் விழுமெனக் காத்திருந்து இல்லாமல் போகும் இரவு அது... நீயற்ற இரவில் காலாவதியான தூக்கங்கள் என் பெயரெழுதிய கல்லறைக் கல்கொண்டு நடப்பட்டச் சமாதியில்

ஜி எஸ் டி 2

இன்று ஒரு நண்பர் ஜிஎஸ்டி பற்றிய நேற்றைய பதிவிற்கு, உங்களுக்கு ஜிஎஸ்டி பற்றிய தரவுகள் அனைத்தும் தெரியுமா எனக் கேட்டார். எனக்கு எது எதுலாம் தெரியாது என ஒரு பட்டியல் போட்டேன். கிட்டத்தட்ட பத்து பட்டியல்கள் சுருக்கமாக எதுவுமே தெரியாது என்பதன் விரிவாக்கம் தான் அது. அந்தளவிற்கு சில கேள்விகள் ஜிஎஸ்டி பற்றி என்னிடம் உள்ளன. எவனிடம் போயும் அய்யா ஜிஎஸ்டி பற்றிய உள் கருத்துகள் கேட்டால் குறிப்பாக ஒருவர் டின் நம்பர் வச்சிருக்கார். கடைசி வருடம் வரை வருடத்திற்கு 0.5 சதவீத வரி கட்டும் ஒரு வியாபாரி. இப்பொழுது இவர் வருடத்திற்குக் கட்ட வேண்டுமா இல்லை மாதத்திற்கு கட்ட வேண்டுமா எனக் கேட்டால் ஜிஎஸ்டி நிபுணனு சொல்லிக்கிட்டு ஒவ்வொரு மாநாட்டிலும் பேசுறவைங்க எப்படி ஆரம்பிப்பானுகனா ஜி எஸ்டி என்பது ஒரே தேசம், ஒரே வரி....ப்ளா..ப்ளா..ப்ளா....ப்ளா...அப்பப்ப மானே தேனே பொன்மானே மாதிரி மோடி ஆட்சியில் புரட்சி புரட்டாசி னு போடுவானுக. கடைசி வரைக்கும் நம்ம  கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்டானுக. இதுல நம்ம மக்களும் சாதாரண ஆளுங்க இல்ல. ஜி எஸ் டி பற்றி தப்பா புரிஞ்சுக்கிட்டு அவனுகளா கிளப்புறானுக. சரத்துல இல்லாததுல

ஜி.எஸ்.டி

ஜி.எஸ்.டி க்கு ஏன் இவ்வளவு குழப்பம் குழப்புறானுக..என்னதான் அப்படி நடக்கும்னு சாமான்யன், அரசு அலுவலர்கள் இவங்களாம் பாக்குறாங்க. சுருக்கமாகப் பேசலாம். நீங்க வேலை பாக்குறீங்க. சம்பாதிக்குறீங்க. சரிங்களா. இப்ப அடுத்த கட்டம். சம்பாதிச்சா வரி கட்டுறீங்களா.. அரசு கேட்கும். நீங்க இப்ப என்ன பண்ணனும். கொடுக்கப்பட்ட வருமான வரி வரம்பை மீறுற அளவு சம்பாதிச்சா வரி கட்டுவீங்க. இதான் இன் காம் டாக்ஸ். பேன் நம்பர் வச்சு பண்றது. வரி கட்டுற அளவு இல்லங்க..னு சொல்லனும்னா கூட பேன் நம்பர் வச்சு ரிட்டர்ன் தாக்கல் பண்றீங்க. அதான் நடைமுறை. இதே தான். ஜி.எஸ்.டி. நீ இட்லி கடை போடுறியா போடு. பில் போடு. நடக்குற சேல்ஸ்க்கு வரிய கட்டு. எல்லாப் பணத்தையும் நீயே வச்சுக்கக்கூடாது. அரசுக்கு வரிய கட்டு.  இதான் ஜி.எஸ்.டி. சார் நான் இருபது லட்சத்துக்கு கம்மியா தான் வியாபாரம் வருஷத்துக்கு பண்றேன். நான் எதுக்கு ஜி.எஸ்.டி கட்டனும்னு கேக்காதீங்க. நீ இருபது லட்சத்துக்கு க் கம்மியா வியாபாரம் பண்றனு நிரூபிக்கனும். நீ மருந்து வாங்கப் போறியா போ. மருந்தோட விலை 100. அதாவது mrp. அந்த 100 ஓவா மருந்துக்கு நீ 100 கொடுக்குற

அகநானூறு 10

அவளே அறியாது அன்றைய அழகிற்குக் காரணம் நானென நினைக்கும் என்னவளின் நிலை அது... வாசல் பார்க்கச் சாய்ந்து நிற்குந்தோது அவளது வாசல் நிலை... நீராய் உடையக் காத்திருக்கும் கருமேக வளைவெல்லை கண்ணெதிரே விரைய விரையக் கூடும் அவளைத் தீண்டும் தூரமாய்... முன் தின இரவில் வெளிறிய வார்த்தையாய்  மிஸ் யூ க்களை அனுப்பியவள் அடர் ப்ரியத்தின் மெல்லினக்காரி... நதி கிழித்து படகு நகர்த்தும் துடுப்பொன்று அப்போதையத் தேவை இரவைக் கிழித்து இப்பகல் சேர... பின் வெயிலின் என் நிழல் முன்னதாய் விழ அதையும் தாண்டிக் கிடக்கும் ஒரு ப்ரியத்தின் தீ நிழல்... இல்லாமையிலிருந்து வெளிப்புகும் இருப்பு அண்டத்தின் நிஜப்புள்ளியாய் சங்கமிக்கும் தருணத்தில் மனமணைந்து கிடக்கும் எனக்கு முன்பாக அவளின் நிலையோடு....
அன்புள்ள ராஜேந்திரன் சார் அவர்களுக்கு, வணக்கம். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். குறிப்பாக உங்கள் உற்சாகத்தை. எப்பொழுதும் துறுதுறுவென இருப்பது மிகவும் பிடித்தமான ஒன்று தான் எனக்கு. உங்களுக்கு வயது எண்பது இருக்கும் என்று என்னுடன் காலையில் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் ஒரு நண்பர் சொன்னார். நீங்களும் நான் நடக்கும் நடையாளர் கழகத்தில் தான் நடக்க வருவீர்கள். ஒரு டீ ஷர்ட் ஒரு முக்கால் ட்ரவுசர் என நீங்கள் மெதுவாக நடப்பீர்கள். உங்களை எப்பொழுதும் தனியாகப் பார்த்ததில்லை. உங்களுடன் குறைந்த பட்சம் இரண்டு நண்பர்களாவாவது நடப்பார்கள். எப்பொழுதும் நீங்கள் ஒரு கலகல வகையறா என்பதை உங்களுடன் நடப்பவர்களின் முகத்தைப் பார்த்தாலே எனக்குத் தோன்றியது. எதிர்ப்படும் ஒவ்வொரு சமயமும் என்னவோ தெரியவில்லை. உங்கள் முகத்தின் புன்னகை என்னை வசீகரித்தது. ஓய்வு பெற்ற முதியவர்கள் அனைவரும் நடந்து முடித்துவிட்டு ஒரு மரத்தடியில் நாற்காலியிட்டு அமர்ந்திருக்க நீங்கள் இருக்கும் தருணத்தில் அங்கு வெடிச்சிரிப்புச் சத்தம் கேட்கும். செடிகள் மறைக்க பிறகு தெரிய என்று நான் நடந்துகொண்டே உங்கள் அரட்டைக் கச்சேரிகளை தூரத்திலிருந்தே பார்