ஜி எஸ் டி 2

இன்று ஒரு நண்பர் ஜிஎஸ்டி பற்றிய நேற்றைய பதிவிற்கு, உங்களுக்கு ஜிஎஸ்டி பற்றிய தரவுகள் அனைத்தும் தெரியுமா எனக் கேட்டார்.

எனக்கு எது எதுலாம் தெரியாது என ஒரு பட்டியல் போட்டேன். கிட்டத்தட்ட பத்து பட்டியல்கள் சுருக்கமாக எதுவுமே தெரியாது என்பதன் விரிவாக்கம் தான் அது. அந்தளவிற்கு சில கேள்விகள் ஜிஎஸ்டி பற்றி என்னிடம் உள்ளன.

எவனிடம் போயும் அய்யா ஜிஎஸ்டி பற்றிய உள் கருத்துகள் கேட்டால் குறிப்பாக

ஒருவர் டின் நம்பர் வச்சிருக்கார். கடைசி வருடம் வரை வருடத்திற்கு 0.5 சதவீத வரி கட்டும் ஒரு வியாபாரி. இப்பொழுது இவர் வருடத்திற்குக் கட்ட வேண்டுமா இல்லை மாதத்திற்கு கட்ட வேண்டுமா எனக் கேட்டால்
ஜிஎஸ்டி நிபுணனு சொல்லிக்கிட்டு ஒவ்வொரு மாநாட்டிலும் பேசுறவைங்க எப்படி ஆரம்பிப்பானுகனா

ஜி எஸ்டி என்பது ஒரே தேசம், ஒரே வரி....ப்ளா..ப்ளா..ப்ளா....ப்ளா...அப்பப்ப மானே தேனே பொன்மானே மாதிரி மோடி ஆட்சியில் புரட்சி புரட்டாசி னு போடுவானுக. கடைசி வரைக்கும் நம்ம  கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்டானுக.

இதுல நம்ம மக்களும் சாதாரண ஆளுங்க இல்ல. ஜி எஸ் டி பற்றி தப்பா புரிஞ்சுக்கிட்டு அவனுகளா கிளப்புறானுக. சரத்துல இல்லாததுலாம் கிளப்பிவிடுறானுக...
இப்போதைக்கு ஜி எஸ் டி பத்தி மக்கள் பேசுறத டெல்லில இருந்து அறிக்கை வரதுல மதுரை வந்து சேரதுக்குள்ள ஜிஎஸ்டி பற்றிய விசயம் எப்படி மாறுதுனா...ஒரு உதாரணம்.

நான் பழனிக்குமார் இன்னைக்கு கோரிப்பாளையத்துல இருக்குற நைனா ஸ்வீட்ஸ் கடைல டீ சாப்பிட்டேன்...இதான் வாக்கியம்.

ஒருத்தன்..விசயம் தெரியுமா பழனிக்குமார் நைனா ஸ்வீட்ஸ்ல டீ சாப்பிட்டானாம்.
அடுத்தவன் விசயம் தெரியுமா பழனிக்குமார் நைனா ஸ்வீட்ஸ்ல மட்டுந்தான் டீ சாப்பிடுவாப்புடியாம்..
இன்னொருத்தன் விசயம் தெரியுமா பழனிக்குமார் எப்பப் பார்த்தாலும் நைனா ஸ்விட்ஸ்லயே டீ சாப்பிடுறாப்புடி...

அடுத்தவன்..பழனிக்குமார் நைனா ஸ்விட்ஸ்ல வேலைக்குச் சேர்ந்துட்டாரோ என்னவோ...
இன்னொருத்தன் இருக்கலாம் பழனிக்குமார் ஒருவேள நைனா ஸ்வீட்ஸ விலைக்கு வாங்கிருப்பாப்புடி..

நம்மாளு ஒருத்தன்...அப்படியா பழனிக்குமார் நைனா ஸ்விட்ஸ் ஓனர்..நாலஞ்சுக்கடை வச்சிருக்காப்புடி..

இதான் ஜி எஸ் டி யோட நிலைமை.
அவனவன் இஸ்டத்துக்கு கிளப்பிவிடுறானுக..

விலை குறையுமா..குறிப்பா மருந்து விலை . ஒருத்தர் கேட்டார். ஐயா மோடி சொன்னது விலை குறையும்னு சொன்னத அவர்ட்ட தான் கேக்கனும். ஜெட்லி பயட்டயும் கேக்கனும்.

ஒரு மருந்தோட விலை 90 ஓவா. அது வரி உள்பட. உனக்குப் புரியுறமாதிரி சொல்லனும்னா இன் க்ளூசிவ் ஆஃப் டேக்ஸ்.
அதை ஏத்த முடியாது.
இப்ப 5 சதவீத வரி 12 சதவீத வரியாகப்போகுது.

mrp 90  ஓவா. வரி சேந்து இருக்கிறனால அதை ஏத்த முடியுமா.. அதுனால மருந்த விக்குறவர் 5 சதவீத வரிக்குப் பதிலா அதாவது  85.50+ 4.50 . அந்த நாலரை ரூபா கட்டுறதுக்குப் பதிலா புதுசா வர ஜிஎஸ்டி வர்ப்போற 12 சதவீத வரில 79.20+10.80  அந்த 10.80 ரூபாய்க்கு வரி கட்டனும். அப்ப அந்தாளு வாங்குற விலை தான் குறையுது. மோடி மோடினு கொடி பிடிக்குற மக்கள் வரிசையா வரவும். மக்களுக்கு எங்க நல்லதுனு சொல்லவும். மருந்து விலைலாம் குறையுதுனு சொன்னவன்லாம் ஜெட்லிக்கு போன் போட்டு கேட்கவும்.

அடுத்த கதைக்கு வரேன். மருந்து கடைக்காரர் அப்படி 85 ஓவாக்கு பதிலா 79 ஓவாக்கு வாங்குனா அவனுக்கு சப்ளை பண்ற மொத்த மருந்து கடைக்காரர் தன்னோட மார்ஜின் விலையைக் குறைக்கனும். அவன் மருந்து கம்பெனிக்காரனிடம் அதை விலை குறைப்பை நாடனும். அவன் குறைப்பானா.. அப்ப வியாபாரிகளோட லாபம் குறையாதா....மருந்து கம்பெனி தன்னோட லாபத்தை விட்டுட்டு வியாபாரம் பண்ணுமா. அதற்கான வழிமுறைகள் இருக்கின்றவா. வியாபாரம் பண்றவன் சேவை பண்ண மனசு வருமா.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....