இடுகைகள்

ஜூலை, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நிறுவு - 2

பொதுவாக தலைமைப்பண்பு என்பது ஏதோ ஒரு பயிற்சிக்கூடத்தில் சேர்ந்து பயில வேண்டியது போல் நம்மில் நிறைய பேர் நினைக்கின்றனர் . அப்படியல்ல . பொறுமை , ஆர்வம் , சகிப்புத்தன்மை , சோர்விலா முயற்சி இவை இருந்தாலே போதும் . ஒரு செயலைச் செய்ய வைப்பதற்கு நாம் அதை செய்து காட்டவேண்டும் . அனைவருக்கும் தெரிந்த ஒரு கதை இருக்கிறது . சோழர்கள் மீது பாண்டியர்கள் படையெடுத்த சமயம் . பாண்டியர்களின் படை முன்னேறிக்கொண்டிருந்தது . சோழ வீரர்கள் பெரும்பான்மையானோர் வீழ்த்தப்பட்டிருந்தனர் . சிலர் சிறைபிடிக்கப்பட்டனர் . படை சிதறியிருந்தது . மீதியிருந்த கால்வாசி வீரர்களும் மனதால் சோர்வடைந்திருந்தனர் . காயம் காரணமாகவும் , தன்னம்பிக்கை அற்ற காரணத்தினாலும் தோல்வி உறுதி என நம்பியிருந்தனர் . இந்நேரத்தில் இவ்விசயம் சோழ மன்னனுக்குச் சென்றது . அப்போதைய மன்னன் விஜயாலயச் சோழன் . அந்நேரத்தில் விஜயாலயச் சோழன் வயதானவன் . போரில் அதிகம் ஈடுபட்டு கால்களை இழந்தவன் . மன்னன் போர்க்களத்திற்கு வந்தான் . சோர்வடைந்த வீரர்களைப் பார்த்தான் ... நான்கு வீரர்களை அ

நிறுவு - பாகம் 1

ஒரு தொழிலாளியாக அதுவும் ஓர் ஆளுகைக்கு உட்பட்டு நாம் வேலை பார்ப்பதற்கும் அதே சமயத்தில் நாமே ஒரு மேலதிகாரியாய் உயர்வு பெற்று வேலை வாங்குவதற்கும் வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறீர்களா ..... அப்படி உணர்ந்தீர்கள் என்றால் உங்களின் தலைமைப் பண்பு பற்றி நீங்களே ஒரு சுய பரிசோதனை செய்திருக்க வேண்டும் . " இதனை இவன்முடிப்பான் என ஆய்ந்து அதனை அவன்கண் விடல் " என்று இருப்பது தான் வள்ளுவர் சொல்லும் தலைமைப்பண்பு . டெலிகேஶன் என ஆங்கிலத்தில் சொல்வார்கள் . அதிகாரமிக்க பதவியிலிருப்பவர்கள் கூட இப்பண்பைப் பெறாது தோற்று இருக்கிறார்கள் . பொதுவாக ஒரு வேலையைச் செய்வதற்கும் அடுத்தவர்களைச் செய்ய வைப்பதற்கும் வித்தியாசம் உண்டு . கொஞ்சம் கடினம் . கட்டிடம் கட்டுவதற்கு பக்குவமான செங்கல் கலவை மண் இதையெல்லாம் வைத்துக்கொண்டு ஒரு மேஸ்திரி வேலையை வேகமாக செய்வார் . அதே சமயத்தில் ஒரு சித்தாளை அதை செய்ய வைப்பது அதே காலகட்டத்தில் முடிப்பது கடினம் . இந்த உணர்வு ஏதோ அலுவலகத்தில் மட்டும்   தான் இல்லை . வீட்டில் கூட . புதியத

நிறுவு ட்ரையல்

நிறுவு.....அருமையான வார்த்தை.....அனுபவமாயிருக்க வேண்டும். அதே நேரத்தில் உளவியல் சார்ந்ததாயிருக்க வேண்டும். இப்படியொரு அளவுகோலைக் கொண்டே சில நாட்களாய் " நிறுவு" என்ற தலைப்பு என்னை ஆட்கொண்டிருக்கிறது. வியாபாரத்துறையில் இருப்பவர்களுக்கு உபயோகமாயிருக்க வேண்டுமென்றே எழுத என்னைத் தூண்டிய இவ்வார்த்தை எனக்குள் ஒரு பிரவாகம் எடுத்தது. வியாபாரம் என்பது என்ன? ஒன்றை விற்பது...அதற்குப் பதிலாக ஒன்றை நாம் சொந்தமாக்கிக்கொள்வது. இதை கண்ணுக்குப் புலப்படாத நம் எண்ணங்களை விற்றால் என்ன ஆகுமென்று யோசித்துப் பார்த்தேன்....அனைவருக்கும் பயன்படத்தான் செய்யும் என்பதே என் அனுமானம். ரோட்டில் நாம் செல்லும்பொழுது பிளாடஃபார்ம் செல்லர்ஸ் (platform sellers)இருப்பார்கள்.  அவர்கள் சமயத்தில் விற்கும் பொருட்கள் நாம் வாங்க வேண்டுமென்று முன்னரே திட்டமிட்டிருப்பதில்லை....ஆனாலும் அவர்களது விற்கும் முறையில் ஏதோ நம்மை கவர்ந்து நாம் வாங்குவோம். அல்லது வாங்கப்படுவோம். அவர்கள் அப்பொருட்களை நம்மிடம் திணிக்கக்காரணிகள் என்ன? நம் தேவை தவிர வேறு என்னவாயிருக்கும்? "நிறுவு" அதை நிறுவும்..... சமூகத்தில