நிறுவு - 2



பொதுவாக தலைமைப்பண்பு என்பது ஏதோ ஒரு பயிற்சிக்கூடத்தில் சேர்ந்து பயில வேண்டியது போல் நம்மில் நிறைய பேர் நினைக்கின்றனர். அப்படியல்ல. பொறுமை, ஆர்வம், சகிப்புத்தன்மை, சோர்விலா முயற்சி இவை இருந்தாலே போதும்.

ஒரு செயலைச் செய்ய வைப்பதற்கு நாம் அதை செய்து காட்டவேண்டும்.

அனைவருக்கும் தெரிந்த ஒரு கதை இருக்கிறது. சோழர்கள் மீது பாண்டியர்கள் படையெடுத்த சமயம். பாண்டியர்களின் படை முன்னேறிக்கொண்டிருந்தது. சோழ வீரர்கள் பெரும்பான்மையானோர் வீழ்த்தப்பட்டிருந்தனர். சிலர் சிறைபிடிக்கப்பட்டனர். படை சிதறியிருந்தது.
மீதியிருந்த கால்வாசி வீரர்களும் மனதால் சோர்வடைந்திருந்தனர். காயம் காரணமாகவும், தன்னம்பிக்கை அற்ற காரணத்தினாலும் தோல்வி உறுதி என நம்பியிருந்தனர்.
இந்நேரத்தில் இவ்விசயம் சோழ மன்னனுக்குச் சென்றது. அப்போதைய மன்னன் விஜயாலயச் சோழன். அந்நேரத்தில் விஜயாலயச் சோழன் வயதானவன். போரில் அதிகம் ஈடுபட்டு கால்களை இழந்தவன். மன்னன் போர்க்களத்திற்கு வந்தான். சோர்வடைந்த வீரர்களைப் பார்த்தான்...நான்கு வீரர்களை அவனைத் தூக்குமாறு பணித்தான். நான்கு வீரர்களும் அவனைத் தூக்கிக்கொண்டு போர்க்களத்திற்குள் நுழைந்தனர். விஜயாலயச் சோழன் வீரர்களின் தோளில் அமர்ந்து போரிட்டான். அவனது கைகள் சுழன்றன. தூக்கிச் சென்ற வீரர்கள் சரிய சரிய அடுத்தடுத்த வீரர்கள் அவனைத் தூக்கிக்கொண்டு உள்ளே செல்ல , வயது முதிர்ந்த கால்களை இழந்த விஜயாலயச்சோழண்` பாண்டிய வீரர்களை துவம்சம் செய்தான். படைகளின் ஊடே முன்னேறிச் சென்றதைப் பார்த்த மீதமிருந்த சோழ வீரர்களும் உற்சாகமடைந்து மன்னனைத் தொடர்ந்து உள்ளே சென்றனர். சண்டையிட்டனர். பாண்டிய படை பின்வாங்கியது.
விஜயாலயச்சோழன் இதைச் செய் அதைச் செய் எனச் சொல்லாமல், அவனே களத்தில் இறங்கி செய்துகாட்டியது மிகச்சிறந்த தலைமைப்பண்பு.
அலுவலகம் மட்டுமில்லாமல் வீட்டிலும் இதை நாம் செய்திருக்கிறோமா? ஒரு வேலையை ஒருவர் நாம் செய்யவேண்டும் என எதிர்பார்த்த நேரத்தில் அது நடக்காத போது, அதை நாமே செய்யத் துணிந்திருக்கிறோமா? இல்லையெனில் நம்மால் வெற்றியை  வெற்றியை நிறுவ முடியாது...........

நாம் நிறுவலாம் இன்னும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....