நிறுவு ட்ரையல்
நிறுவு.....அருமையான வார்த்தை.....அனுபவமாயிருக்க வேண்டும். அதே
நேரத்தில் உளவியல் சார்ந்ததாயிருக்க வேண்டும். இப்படியொரு அளவுகோலைக்
கொண்டே சில நாட்களாய் " நிறுவு" என்ற தலைப்பு என்னை ஆட்கொண்டிருக்கிறது.
வியாபாரத்துறையில் இருப்பவர்களுக்கு உபயோகமாயிருக்க வேண்டுமென்றே எழுத என்னைத் தூண்டிய இவ்வார்த்தை எனக்குள் ஒரு பிரவாகம் எடுத்தது. வியாபாரம் என்பது என்ன? ஒன்றை விற்பது...அதற்குப் பதிலாக ஒன்றை நாம் சொந்தமாக்கிக்கொள்வது. இதை கண்ணுக்குப் புலப்படாத நம் எண்ணங்களை விற்றால் என்ன ஆகுமென்று யோசித்துப் பார்த்தேன்....அனைவருக்கும் பயன்படத்தான் செய்யும் என்பதே என் அனுமானம்.
ரோட்டில் நாம் செல்லும்பொழுது பிளாடஃபார்ம் செல்லர்ஸ் (platform sellers)இருப்பார்கள். அவர்கள் சமயத்தில் விற்கும் பொருட்கள் நாம் வாங்க வேண்டுமென்று முன்னரே திட்டமிட்டிருப்பதில்லை....ஆனாலும் அவர்களது விற்கும் முறையில் ஏதோ நம்மை கவர்ந்து நாம் வாங்குவோம். அல்லது வாங்கப்படுவோம். அவர்கள் அப்பொருட்களை நம்மிடம் திணிக்கக்காரணிகள் என்ன? நம் தேவை தவிர வேறு என்னவாயிருக்கும்? "நிறுவு" அதை நிறுவும்.....
சமூகத்தில் நமது சுற்றுப்புறத்தில் கூட நாம் பழகும் முறையில் கூட சில வேதிக்காரணிகள் தேவைப்படுகின்றன. இங்கு ஏதோ வேதியியல் சொல்லப்போவதில்லை. ஆனாலும் ஒருவருடன் நட்புடன் நம்மைப் பிணைப்பது எது என நாம் ஆராய "நிறுவு" உதவுமென நினைக்கின்றேன்.

கருத்துகள்
கருத்துரையிடுக