இடுகைகள்

பிப்ரவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 9

 பழனிக்குமார் மதுரை விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 9 நான் வேலை பார்த்த நிறுவனம் மூடப்போகிற தருவாயில் இருந்தது. என் உடன் வேலைபார்த்தவர்கள் அனைவரும் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்திலேயே தஞ்சம் அடைய நானும் என் பயோடேட்டாவுடன் ஒரு வருட அனுபவத்தைக் குறிப்பிட்டு மும்பைக்கு ஃபேக்ஸ் செய்துவிட்டு, தமிழ்நாட்டு ரீஜீனல் மேனேஜருக்கு அலைபேசியில் அழைத்துப் பேசினேன். அவரோ, மதுரையில் ஏற்கனவே இரு நபர்களை நியமித்துவிட்டோம். கோவைக்குப் போகிறாயா என்றார். முடியாது என்று மறுத்துவிட்டாலும் இரு நாட்கள் கழித்து மும்பையிலிருந்து ஃபோன்.  மூன்றாவது நபராக என்னை மதுரைக்குத் தேர்ந்தெடுத்து மும்பையில் பயிற்சி தந்தார்கள். பயிற்சி முடித்து நான் ட்ரெயின்ல் வந்துகொண்டிருக்கும்போது தான் தமிழ்நாட்டு மேனேஜருக்கு இந்தச் செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள்.  அப்படி, என் நியமிப்பில் ஆரம்பமாகியது எங்கள் ரீஜினல் மேனேஜருக்கும் ( தமிழ்நாடு) ஜோனல் மேனஜருக்கும் வாய்க்கால் தகராறு. ஜோனல் மேனேஜர் என்பவர் ஆந்திரா தமிழ்நாடு கேரளா க்கு மேலதிகாரி. மதுரை க்கென ஏரியா மேனேஜர் இல்லை என்பதால், ரீஜீனல் மேனேஜரே எங்களுக்கு வந்துகொண்டிருந்தார். 

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8

  விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8 இன்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது கொரோனா தாக்கத்தால் மருத்துவத்துறையில் முன்னேற்றம் இருக்கிறது என்ற படிக்குப் பேசினார். மருந்துகள் எல்லாம் அதிகளவில் விற்கும் அல்லவா என்றும் கேட்டார். அதற்கான விளக்கத்தையும் என் வேலை எந்த அளவிற்கு ஆகியிருக்கிறது என்பதையும் சொன்னேன். அதன் சாராம்ஸம்... மருத்துவத்துறை சார் நோயும் வைரசும் பரவுவதால் உடனே அதில் மருந்துகளின் விற்பனை கூடுகிறது என்பது மேலோட்டமானக் கருத்து. பெரும் முதலாளிகளின் கம்பெனிகளுக்கு வேண்டுமானால் விற்பனை நடக்கலாம். முறையாய் மருத்துவர்களைப் பார்த்து அதன் மூலம் ஏதாவது ஒரு ஆர்டர் எடுக்கும் நிலையில் இருக்கும் என்னைப் போன்ற குறு கம்பெனிகளின் விற்பனை சரியவில்லை. படுத்தேவிட்டது என்பது தான் உண்மை. உதாரணத்திற்கு, ஒரு மருத்துவரை மாதம் ஒரு முறை பார்த்துக்கொண்டிருப்போம். அவரும், பல நாட்களாக வருகிறான், இவனுக்கு உதவலாம் என்ற மனிதத்துடன் அந்த விற்பனைப்பிரதிநிதியின் மருந்து தரமானத் தயாரிப்பா என்று பரிசோதித்து அவனுக்கு எழுத ஆரம்பிப்பார். இப்படியான விற்பனை நடக்குமளவிற்கு மருத்துவர்களைப் பார்த்து ப

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 6

பழனிக்குமார் மதுரை விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 6 அது ஒரு பிரச்சினை. என்ன பிரச்சினை என்பதைச் சொல்கிறேன். ஏன் பிரச்சினையானது என்பதையும் அடுத்துச் சொல்கிறேன்.  மருந்து விற்பனைப் பிரதிநிதிகளாகச் சேர்ந்து கிரிக்கெட் ஆடினார்கள். அதில் எதுவும் பிரச்சினை இல்லை. முதலில் ஐந்து நபர்கள் சேர்ந்தார்கள். பிறகு பத்தானது. பிறகு இருபது ஆனது.  ஒரு கட்டத்தில் இரண்டு மூன்று அணிகள் எனப் பிரிந்து ஆடினார்கள். அணியில் சேர்க்கமுடியாமல் நிறைய பிரதிநிதிகள் நின்று வேடிக்கை பார்த்தனர்.  ஏன் அணியில் சேர்க்கமுடியவில்லை என்று கேட்பீர்கள் தானே? ஆம், அந்தத் தெருவிற்குள் அப்படி எத்தனை பேரை சேர்த்துக்கொண்டு ஆடுவது?! என்னது தெருவா? என்பீர்கள் தானே? ஆம், இதற்கே இப்படி அதிர்ச்சி ஆனால் எப்படி, ஆடும் நேரம் எப்பொழுது தெரியுமா, நடு இரவு ஒரு மணிக்குத்தான் இந்த ஆட்டம் எல்லாம்.  ஒரு குறிப்பிட்ட நாளில் இத்தனை பேரும் குழுமி கிரிக்கெட் விளையாடினால் என்னாகும்? அப்படி ஒரு நாள் இரவு ஆடும்பொழுது பேட் செய்த ஒரு பிரதிநிதி மும்மரத்தில் பந்தை  ஓங்கித் தூக்கி  அடிக்க, அந்தத் தெருவில் இருந்த ஒரு வீட்டின் கண்ணாடியைப் பதம் பார்த்தது.

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 5

 விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 5 வேலை பார்த்த கம்பெனியில் கமிஷன் முறைக்கு மாற்றியதும் ஏகப்பட்டக் குழப்பங்கள். சம்பளம், allowance எல்லாம் குறைந்தது. ஏற்கனவே அப்பாவின் ஒரு பழைய மாணவர், நீ மெடிக்கல் ரெப் ஆவதற்கு  LIC ஏஜெண்ட் ஆகியிருக்கலாம்ல என்றுவிட்டு போயிருந்தார். ஏனென்றால் அவர் ஒரு எல் ஐ சி ஏஜெண்ட். ஒருமுறை வீட்டுக்கு வந்தவர் சூரியவம்சம் படத்தில் சரத்குமார் பெரிய ஆள் ஆனதுபோல் அவர் வாழ்க்கை ஆனது என்று சொல்லிவிட்டுப்போனார். அவர் பேசி முடிக்கும்பொழுது எங்கள் அப்பாவின் முகத்தில் எல் ஐ சி யின் விளம்பரத்தின் கடைசியில் வரும் அந்த அரைவட்ட லோகோ சாயல் இருந்தது. ஆனாலும் இனி மேல் (2003ல்) எல் ஐ சிலாம் யார் போடுவா என்று எனக்கு அதில் உடன்பாடு இல்லை. இது பத்தாது என்று, அப்போதைக்கு கம்பெனியின் அனைத்து ரெப் களும் இன்னொரு பெரிய கம்பெனியின் புதிய டிவிஷன் லான்ச் க்குச் சேர்ந்தார்கள். அங்கு சேர்ந்த கோயம்புத்தூர் ரெப், நீயும் அவர் சேர்ந்திருக்கும் கம்பெனிக்கு அப்ளை பண்ணு என்றார். முதலில் அந்தக் கம்பெனியின் மேனேஜரின் நம்பர் வாங்கி அவரிடம் பேசு என்றார்கள். அவர் எண்ணை அழைத்துப் பேச, மதுரையில் ஏற்கனவ

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 2

 மெடிக்கல் ரெப்பாகி  சில மாதங்கள் ஆயிருந்தன. ஒரு கிராமத்திற்கு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வேலைக்குப் போகவேண்டும்.  அப்படி போகும்பொழுது என்னுடன் வேலை பார்த்த சீனியருடன் அங்கு இருந்த மருத்துவர்கள் , அதில் யார் யார் நம் கம்பெனிக்கு சப்போர்ட் செய்வார்கள், யாருக்கு potential அதிகம், எந்த மருத்துவர் எந்த மருந்துக்கடைக்கு எழுதுவார் , எந்தெந்த மருந்துக்கடைகளுக்கு டாக்டர் சீட்டு போகும் என்று பேசுவோம். அப்படி பேசும்பொழுது ஊருக்கு வெளியே ஒரு கிமீ தொலைவில் ஒரு ஸ்டாப் இருக்கிறது அந்த மருத்துவமனையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த மருத்துவமனையில் ஒரு பெண் மருத்துவரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவருடைய கணவர் பெயர் போட்டிருக்கிறது ஆனால் அவரைப் பார்க்கமுடியவில்லை என்று என் சீனியரிடம் கேட்டேன்.  அதற்கு அவர், அவர் வேஸ்ட் பழனி, மூஞ்சிய கடுமையா வச்சுட்டே இருப்பார், பெரிய கம்பெனிக்குத்தான் எழுதுவார்.  நமக்குலாம் எழுதமாட்டார், பாக்கலாட்டி விடு என்றார்.  அந்தமுறை நான் சென்றபொழுது அந்த மருத்துவமனையில் அவர் இருந்தார். பெண் மருத்துவரைப் பார்த்துவிட்டு அவருக்கும் பார்க்க விசிட்டிங்க் கார்டைக் கொடுத்துக் கா

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 3

பழனிக்குமார் மதுரை விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் இரண்டு பாகங்கள் எழுதியதில், சில நண்பர்கள் மிகவும் கனமாய் எழுதியிருக்கிறீர்கள் என்று சொன்னார்கள்.  மகிழ்ச்சியான தருணங்களை எழுதிவிடலாம் தான்.  ஆனால், துறை சார்ந்த நகைச்சுவைகள் அந்தந்தத் துறையினருக்கு மட்டுமே புரியும். அதையும் மீறி சில நிகழ்வுகள் உணரப்படலாம்.ஆனால் எழுத மனம் லயிக்கவேண்டும். அதற்கு வாய்ப்பு இருப்பின் அப்படி எழுதலாம்.  நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில்  கிராமப்புறத்தில் ஒரு மருத்துவமனைக்குத் தொழில் நிமித்தமாகப் போயிருக்கிறேன். சித்தா ஆயுர்வேதம் மற்றும் மிக முக்கியமாக வர்மக் கலை மூலமாக நோய்களை நீக்கும் சிகிச்சை மையம் அது. ஆயுர்வேதச் சிகிச்சைக்கு மக்கள் வரத்தயங்கும் காலகட்டத்தில் அங்கு உள்நோயாளிகள் பிரிவோடு அந்த மருத்துவமனை செயல்பட்டு வந்தது.   தூரப் பிரதேசங்களுக்கு இரண்டு மூன்று கம்பெனிகளின் ரெப் கள் சேர்ந்து ஒன்றாய் போவது வழக்கம். அப்படி ஒரு முறை அந்த மருத்துவமனைக்குப்  போனால் , நோயாளிகளைப் பார்க்கத் தாமதம் ஆகும் என நோயாளிகளைப் பார்த்துக்கொண்டே என்னையும் இன்னொரு கம்பெனி ரெப்பையும் உள்ளே அழைத்துவைத்துப் பேசிக்கொண்டிரு