இடுகைகள்

செப்டம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஃபீனிக்ஸ்

அடுப்பில் பால்பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அம்மாவை படுக்கையில் இருந்து எழுப்பி சுவற்றில் சாய்ந்திருக்குமாறு அமர வைப்பதற்கு கொஞ்சம் தாமதமாகி விட்டது. வேகமாக அடுப்படிக்குள் ஓடி வந்து அடுப்பை அணைத்துவிட்டு பாலை இறக்கினாள். வெள்ளாவியாய் பாலிலிருந்து ஆவி பறந்தது போல் இருந்தது. பால் பாத்திரத்தை நகர்த்தியதும் வெள்ளையில் மஞ்சள் பூத்த அந்தப் பாலின் நிறம் சூடானது தெரிந்தது. சற்று பால் ஆறுவதற்குள் பாத்ரூமிற்குள் சென்று குழாயை மெதுவாகத் திறந்து அதனடியில் பெரிய வாளியை வைத்தாள். அம்மாவிற்கு காஃபி போட்டுவிட்டு வருவதற்கும் அந்த வாளி நிறைவதற்கும் ஏற்றபடி அந்தக் குழாயைச் சன்னமாகத் திறந்துவைத்தாள். இப்பொழுது அவளுக்கு நேரம் இல்லை. அம்மா ஒரு சர்க்கரை நோயாளி. சர்க்கரை அதிகமாகி ஒரு காலில் விரலை வெட்டி விட்டார்கள். ஒரே மகள் என்றால் அம்மாவிற்கு யார் இருக்கிறார்கள். அப்பா டிவிஎஸ் ஆலையில் மேற்பார்வையாளர். இந்த டிவிஎஸ் ஆலையில் வேலைபார்ப்பவர்களுக்கு விசுவாசம் எப்படித்தான் வருமோ தெரியாது. அந்த ஊழியர்களின் வீட்டில் எல்லாம் அந்த தாத்தா பாட்டியின் படம் வைத்துவிடுகிறார்கள். ஓவர் டைம் என்றால் முகம் சுளிக்காது ப

தி நேரேட்டர்..

ஒரு வாரத்திற்கு முன் எனக்குத் தெரிந்த financial consulting கம்பெனி முதலீடு சம்பந்தமான ஒரு கூட்டம் நடத்துவதாக மெயில் அனுப்பியிருந்தார்கள். ஏற்கனவே  ஒரு வருடத்திற்கு முன் இது போல் கூட்டம் நடத்தி அதற்கு நான் போகவில்லை. ஆர்வமும் இல்லை. இந்த முறை அந்த அலுவலகத்தின் மேலாளரே தொடர்புகொண்டு வரும்படி இரு முறைஅழைத்திருந்தார். இன்னொன்று பேச அழைத்திருந்த சிறப்பு விருந்தினர்களில் ஒருவர் பஜாஜ் ஃபின்செர்வ் மற்றும்  ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் முன்னாள் தலைமை அதிகாரியாக இருந்தவர். சரி போய்த்தான் பார்ப்போமே என்று கூட்டம் ஆரம்பித்த அரைமணி நேரம் கழித்து உள் நுழைந்தேன். கிட்டத்தட்ட ஹவுஸ்ஃபுல் ஹால் அது. எண்பது வரை ஆடியன்ஸைத் திரட்டியிருந்தார்கள். கிட்டத்தட்ட பாதிபேர் ஓய்வு பெற்றவர்கள். எனக்குத்தெரிந்தே வாக்கர்ஸ் க்ளப் உறுப்பினர்கள் நான்கைந்து ரிட்டையர்ட் வங்கி மேலாளர்கள் இருந்தார்கள். அந்த நிறுவனம் வங்கியோடு இணைந்து மியூச்சுவல் இன்வெஸ்ட்மெண்ட் லாம் பகிர்வதால் பல நபர்களை அப்படி அழைத்து வந்திருந்தார்கள். முதலில் பேசியவர் ஹெச்டிஎஃப்சி மேலாளர். சுருக்கமாக அந்தக் கூட்டத்தின் சாராம்சம் மியூச்சுவல் ஃபண்டில் இன்வெஸ்ட்ம

சுஜி...

அது கல்லூரி பருவம்.இளங்கலை மூன்றாம் ஆண்டு.என்.எஸ்.எஸ் மூலமா ஒரு கேம்ப். நடந்த இடம் கேரளாவில் காலடி சம்ஸ்க்ருத பல்கலைக்கழகம். தமிழ்நாடு , கேரளா, கர்நாடகா, ஆந்திரா னு ஏராளமான பல்கலைக்கழகங்கள் கலந்துகொண்ட நிகழ்வு. தமிழ்நாட்டில் இருந்து பாரதியார் பாரதிதாசன் பெரியார் மனோன்மணீயம், அப்புறம் காமராசர் பலகலைக்கழகங்கள்னு சங்கமம். நம்ம காமராசர் பலகலைக்கழகத்திலிருந்து கம்பம் மகேஷ்,உத்தம பாளையம் வீணா, சிவகாசி சந்திரு, மதுரைல இருந்து கேசவன், கார்த்திக், அப்புறம் நான்.  ஜனவரி 26 குடியரசு  விழாவில் குடியரசுத் தலைவர் முன்னாடி டில்லியில் பரே டில் கலந்துக்க நடக்குற செலக்ஷன் கேம்ப் அது. மாலை 4 மணிக்கு பல்கலைக்கழகம் ரீச் ஆனதும் பல பட்டாம்பூச்சிகள் பாக்குற உணர்வு.  வெங்கட் பிரபு  படத்துல வர்ற பிரேம்ஜி கேரக்டர் மாதிரி நம்ம நண்பன் ஒருத்தன வச்சுக்கிட்டா நல்லாருக்கும்ல.கிடைச்சான் சிவகாசி சந்திரு. ஒண்ணா ட்ராவல் பண்ணதுனால எல்லாரும் க்ளோஸ் ஆயிட்டோம். குறிப்பா என் கண்ணுல கம்பம் மகேசையும் பாளையம் வீணாவையும் கோர்த்துதான் பார்க்கத்தோன்றியது. பக்கத்து பக்கத்து ஊர்ன்றனால பேசிக்க்ட்டே இருந்தானுக.... நான் எது

க்ர்ர்ச்ச்சுக்

அப்பொழுது மதுரை முத்து ஆரம்பப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன். ஆமாம் இது ஃப்ளாஷ்பேக் தான். பழைய பதிவை கொஞ்சம் டிங்கரிங்க் செய்து வெளியிடுவது தான் இது. அன்று சனிக்கிழமை. விடுமுறை. அந்த காலத்தில் சனிக்கிழமைகளுக்கென்று சில இலக்கணம் உண்டு. ஒன்று கரண்ட்டை கட் பண்ணிருவானுக. கேட்டா மின் பராமரிப்புனு சொல்வாய்ங்க. இரண்டாவது ஸ்கூலுக்கு அரை நாள் வைப்பானுக. அதுல வெங்கட்டம்மா டீச்சர் இருந்து எழுதி காமிச்சுட்டு போனு சொல்லும். நாலு மணிக்கு முன்னாடி போனா அந்தம்மாவோட வீட்டுக்காரர் வைவார் போல. மூன்றாவது லீவா இருந்தா தலைக்கு எண்ணெய் வச்சு குளிக்கனும். சம்பவம் நடந்த அன்றைய சனிக்கிழமை தலைக்கு ஆயில்பாத் எடுத்துவிட்டு....ஒரு சந்தனக்கலர் பனியன் மற்றும் அதற்கேற்றார் போல் ஒரு கால்சட்டை...(ட்ரௌஸர்). அந்த சந்தனக்கலர் சட்டை ஒரு ஸ்பெஸல். தாய்வீடு படத்தில் ரஜினிகாந்த் அந்தக் கலரில் வருவார். அதே நிறத்தில் பனியன் போட்டு...எங்கள் வீட்டு நிலைக்கண்ணாடியின் முன் நின்று பார்க்கிறேன் முகத்தை இடது வலது என திருப்பிப் பார்க்கிறேன்... அப்படியே கண்களை வானத்தை நோக்கிப் பாத்துட்டு மறுபடியும் கண்ணாடியில் முக

பைத்தியக்காலம்- நர்சிம் சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து

எழுத்தாளர் நர்சிம் எழுதிய பைத்தியக்காலம் சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து..... " i dont make unconventional stories    i dont make non linear stories   but i like linear storytelling lot " என்ற ஒரு வாசகம் இருக்கிறது. இதைச் சொன்னவர் பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீஃபன் ஸ்பீல்பர்க். இதைத் தமிழ்படுத்தி ஸ்பீல்பர்க்கின் வாசகத்திற்குள் அர்த்தப்பிழை கிராஃபிக்ஸ் செய்து அதன் நேர்த்தியைக் கெடுக்க விரும்பவில்லை. அப்படி ஒரு ஸ்டோரி டெல்லிங் வித்தைகளை இப்பொழுது இருக்கும் பல எழுத்தாளர்கள் கையாண்டு வருகிறார்கள். இப்பொழுது இருக்கும் என்பதில் நான் குறிப்பிடுவது அன் டோல்ட் என்ற பதம் பொருந்தும் சரியாகப் பேசப்படாத அல்லது பேசப்படவேண்டிய வயதான அல்லது இளந்தாரி எழுத்தாளர்களையும் சேர்த்துத் தான். பைத்தியக்காலம் தொகுப்பின் ஆசிரியர் நர்சிம் கூட அப்படிப்பட்ட வித்தைகளைச் செய்யும் எழுத்தாளன் என்பது என் அபிப்ராயம். பைத்தியக்காலம் படிப்பது என்பது அனுபவங்களைத் தருவது. அல்லது ஒருவனின் அனுபவத்தோடு அவன் குவளை அனுபவத்தை அவன் மடியில் கிடத்தி நம் மூளைக்குள் புகட்டுவது. தூதுவளை துளசி இஞ்சி எல்லாம் அரைத்து மேலோட்ட