இடுகைகள்

ஆகஸ்ட், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குட்டுப்பட்டி

குருதிப்புனல் படத்தில் ஒரு காட்சி வரும். கதவு இடுக்கு வழியே கமல் கண்களைக் காண்பித்து ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் உண்டு என வசனம் வரும். இரசாயணத் துறை மாணவனாக யூடெட்டிக் பாயிண்ட் என நான் அடிக்கடிச் சொல்வதுண்டு. திங்கட்கிழமை நன்றாக இருண்டிருந்த காட்டுப்பகுதி. காட்டுப்பகுதி என்று குறிப்பிடுவதில் அந்த நிலச் சரகம் அடங்கிவிடுவதில்லை. மலைப் பாங்கான வடிவமைப்புக்கொண்டப் பகுதி. நடு ரோட்டில் நின்று பார்த்தால் இருமருங்கிலும் மலைச் சரிவாய்க் காணலாம். அதில் எங்கும் பசுமையாக விவசாயம் நடக்கும். கீழ் பரப்புவரை செடி கொடி மரம் எல்லாமே தாவரங்கள் கற்கள் மணல் இப்படி. நத்தம் என்ற ஒரு கிராமம் தாண்டிய கிராமத்துப் பாதை. ரோட்டை சுத்தமாக வழுவழுப்பாய் போட்டு வைத்திருக்கிறார்கள். நான் வேலை முடித்து வரும்பொழுது இரவு எட்டு. நகர்ப்புற இருளுக்கும் கிராமத்து இருளுக்கும் வித்தியாசம் குளிரும் சீக்கிரம் ஊர் அடங்கிவிடும் தன்மையும். அதனாலேயே கிராமத்து இருளில் அடர் என்ற தன்மை இரு சிட்டிகைக் கூடுதலாக இருக்கிறது. அப்படி இன்டென்ஸ் டார்க் இரவு. யோசித்துப்பாருங்கள். அழகிய கிராமத்துப்பாதை. குளிர் மண்வாசன

ஹீலர்களின் அரெஸ்ட்

பொதுவாக mocking டைப் பதிவுகள் எனக்குப் பிடிக்கும். போதுமான அளவு க்ரியேட்டிவிட்டி பயன்படுத்த வாய்ப்புகள் அதில் இருக்கும். சில நாட்களுக்கு முன் வந்த வாட்ஸப் பதிவு ஒன்றில் வீட்டிலேயே சமைத்துச் சாப்பிட்ட ஒருவர் கைது. வீட்டிலேயே குழாய் குடிநீர் குடித்தவர் கைது. இப்படி வீட்டிலேயே பிரசவம் பார்த்தவரும் கைது என்று வந்தது. ஒருவருக்கு முகநூலில் ட்விட்டரில் லைக்குகள் அதிகம் விழுந்துவிட்டால் போதும். அவர் தான் தேவதூதராகி விடுகிறார். அவர் சொல்வதைக் கேட்கவேண்டும் என்று சிக்கலில் மாட்டுகிறார்கள் மக்கள். வீட்டில் பிரசவம் பார்த்து ஒரு உயிர் பலி. இப்படித்தான் ஒரு சிலரின் சின்ன சைகையால் மக்கள் அவரது திறமைக்கு ஏற்ற உயரத்தைவிட அதிக உயரத்தில் தலையில் தூக்கி வைத்து நிறைய எதிர்பார்ப்பார்கள். இது சார் சிக்கல்களில் இப்பொழுது மக்கள் குழம்புவது வீட்டிலேயே பிரசவம் பார்க்கக்கூடாதா..அலோபதி மருத்துவம் மற்ற வழி மருத்துவத்தை அழிக்கிறதா ...ப்ளா..ப்ளா ..ப்ளா எனக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். புரியும்படி பேசலாம். நம்ம பாட்டிக்கு நார்மல் டெலிவரி. நமக்கு முந்தையத் தலைமுறைக்கு நார்மல் டெலிவரி.  இப்ப ஏன் இல்லனா