இடுகைகள்

நவம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"வியலும்....ஸ்டார்ட் ம்யூசிக்"

அப்பொழுது நான் முதுகலை முதலாண்டு படித்துக்கொண்டிருந்தேன். வேதியியல் துறை. வேதியியல் துறை என்னையும் ஒரு வேதிப் பொருளாக மாற்றிக்கொண்டிருந்தது. அப்போது யாராவது கவிதை எழுதுகிறார்கள் என்றால் ஆர்வமாகப் படிப்பேன். நமக்குக் கவிதை அவ்வளவாக வராது. (அவ்வளவாக என்பது அபாண்டம்....சுத்தமாக வராது) ஆனலும் முயற்சி செய்வேன். வார்த்தைகளை மாற்றி மாற்றிப் போட்டு ஒன்றுக்குக் கீழாய் ஒன்று எழுதி கவிதை எனப் பிரகடனம் செய்துவிடுவேன்.(இப்ப வரைக்கும் அப்படித்தான்)... அச்சமயங்களில்....என் வீடு...சொல்லியே ஆகனும்... என் தந்தை- ஜாலியான அப்பா....கண்டிப்பான தமிழ் ஆசிரியர். என் தாய்- கண்டிப்பான அம்மா...கண்டிப்பான ஆசிரியை. டிஸிப்லின் னு வந்துட்டா....அதாங்க ஒழுக்கம்...னு வந்துட்டா...மிலிட்டரி ஆபிஸர்ஸ் மாதிரிதான்.... என் அண்ணன்- ஒரு வினையூக்கி (கெமிஸ்ட்டரி படிச்சவங்களுக்குத் தெரியும்.....வினையூக்கி வினையில் ஈடுபடாது....ஆனால் வினையை வேகப்படுத்தும்) போல் தான்... படிப்பு ஒழுக்கம் தவிர வீடு ஜாலி எல்லாரையும் சொல்லிட்டேன்...அப்புறம் நான்...நம்ம செயல்பாடு பாருங்க தெரியும்..... வீட்ல லேண்ட்லைன் ஃபோன் இருக்கும்... ஆனால் ரொம்ப நே