இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 7

 பழனிக்குமார் மதுரை விற்பனைப்பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 7 மருந்துவிற்பனைப் பிரதிநிதியின் வேலைகள் என்று சுருக்கமாகச் சொல்வீர்கள் எனில், மருத்துவரைப் பார்க்கவேண்டும், அவரிடம் நமது நிறுவனத்தின் மருந்துகளைப் புரோமோட் செய்து அவரை எழுத வைக்க வேண்டும். இதற்குச் சமமானக் கடினமான வேலை, அந்த மருத்துவர் நம் மருந்தை எழுத ஆரம்பித்துவிட்டால் அவரது அல்லது அவருக்கு அருகில் இருக்கும் மருந்துக்கடையில் நம் மருந்தை ஸ்டாக் வைப்பது. அவர் ஆயிரக்கணக்கான மருந்தை எழுதுவார், அதில் நம் மருந்து எது என்பதை அந்தக் கடைக்காரருக்குத் தெரியப்படுத்தவேண்டும். இதற்காக மருந்துக்கடைகளுக்குச் சப்ளை செய்ய ஒரு மொத்தவிலைக்கடையை (மெடிக்கல் ஹோல்சேல்) நியமித்திருப்போம்.  அந்த மருத்துவர் எழுதுகிறாரா என்பதைப் பார்க்கவேண்டும், அந்தக் கடைக்காரர் வாங்கிவிட்டாரா எனப் பார்க்கவேண்டும், அந்தக் கடைக்காரருக்கு அந்த ஊரின் மொத்தவிலைக்கடைக்காரர் சப்ளை செய்துவிட்டாரா எனப் பார்க்கவேண்டும், இதற்கு இடையில் அந்த மருந்து அந்த மொத்தவிலைக்கடைக்காரரிடம் இருக்கிறதா என்றும் அவ்வப்போது பார்க்கவேண்டும். இது தான் சங்கிலித்தொடர்.  நான் மேலாளராகப் பொறுப்பேற்

பீஹார் தேர்தலின் பிஜேபியின் வெற்றியை முன்வைத்து...

பழனிக்குமார் மதுரை. ஸ்வீட் கடைக்குப் போகிறோம். ஒரு பெரிய ஆர்டர் தரப்போகிறோம். கடைக்காரரிடம் விலை எல்லாம் கேட்கிறோம். அவர் அதைத் தயார் செய்ய  ஏதாச்சும் அட்வான்ஸ் தாங்க என்பார். வியாபாரத்தில் அட்வான்ஸ் தரலாம்.  அட்வான்ஸ் தராமல், ஆர்டர் டெலிவரி பண்ணும்பொழுது கூட முழு பணத்தையும் செட்டில் செய்யலாம் என்று சில நபர்கள் சொல்லலாம். நீங்கள் ஒரு ஃபர்னிச்சர் கடைக்காரரிடம் ஒரு பெரிய மேஜை செய்யச்சொல்கிறீர்கள். அவர் அட்வான்ஸ் கேட்பார். அதைவைத்து சில பொருட்களை வாங்கிக்கிறேன். மீதிப்பணத்தையும் மேஜை செய்துமுடித்து ஒப்படைக்கும்பொழுது வாங்கிக்கொள்கிறேன் என்று கூடச் சொல்வார். நீங்கள் அட்வான்ஸ் தர மறுத்து மேஜையும் செய்தாகி ஒப்படைக்கும்பொழுது அட்வான்ஸ் தராததற்காக பெனால்டிலாம் போடமாட்டார். முன்பணம் என்பது எப்படியும் நாம் தரப்போகிறோம் என்பதற்கான அறிகுறிக்கு உள்ளானது. தரலாம், தராவிட்டாலும் மொத்தமாகத் தரலாம். வியாபார நோக்கில் செயல்படும் வியாபாரிகள் கூட முன்பணம் தரவில்லை என்பதற்காக நம்மிடம் வட்டிலாம் போடுவது கிடையாது. இப்பொழுது கதைக்கு வாருங்கள். தனியார் தொழில் நிறுவனங்களுக்கு அட்வான்ஸ் டேக்ஸ் கட்டவேண்டும் என்று